அன்பர்களே! கல்வியாலே அறிவைப்பெறலாம் ஆனா லும் அனுபவாயிலாக பெறும் அறிவு மிகச்சிறந்தது. அந்த அனுபவ அறிவை பெற வா ழ்ந்து பார்க்கவேண்டும். வாழ் நாள் முழுவதும் அந்த அனு பவ அறிவை பெற உழைக்க வேன்டும் ஆனலும் அதனை நாம் பெற்றுக்கொண்டோமா? எனபது கூட ஒருவேளை ஐயமே!அனுபவ அறிவை மிக துள்ளி யமாக எடுத்துக்காட்டும் ஒரு கதை இதோ நிலாமதி வலைப்பூ ங்கவில் மலர்கின்றது
கப்பல் ஒன்று பழுதடைந்துவிட்டது. கப்பல் சொந்த க்காரன் பல திருத்துண ர்களை பணிக்கு அமர்த்தியும் கப்பல் இயந்திரத்தை சரி செய்ய அவர்களால் முடிய வில்லை. சலிப்படைந்த கப்பல் சொந்தக்காரன் பத்திரி கையில் அறிவி த்தல் செய்தான். ஒரு வாரத்தின் பின்னர் ஒரு வயோதிப திருத்துணர் கப்பல் இயந்திர த்தை பழுது பார்த்து தருவதாக முன் வந்தார். முதலில் இயந்திரத்தை நன்றாக சுற்றி சுற்றி பார்த்தார். அந்த வயோதிபர் செய்வதை கப்பல் சொந்தக் காரனும் அவதானித்துக்கொண்டிருந்தான். வயோ திப திருத்துணர் ஒரு சுத்திய லினால் இயந்திரத்தின் சில பகுதிகளை இலேசாக தட்டினார். இயந்திரம் இயங்கத் தொட ங்கியது. எல்லோரும் சந்தொசப்பட்டார்கள். கப்பல் சொந்த க்காரன் வயோதிப திருத்துணரை பாராட்டிவிட்டு கூலி எவ்வ ளவு என்று கேட்டார் அதற்கு வயோதிபர் நான் கணக்கு பா ர்த்துவிட்டு பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு போ ய்விட்டார். ஓரிரு நாட்களில் வயோதிபரிடம் இருந்து கப்பல் சொந்தக்காரனுக்கு பில் வந்தது அதைக்கண்ட கப்பல்காரன் அதிச்சி அடைந்தான். ஐம்பதாயிரம் ருபா கேட்டு பில் அனுப்பி இருந்தார் வயோதிபர். நீங்கள் சுத்தியலினால் சில இடங்க ளில் தட்டினீர்கள் அதற்கு இவ்வளவு பணமா கூலி ? என்று கேட்டான் கப்பல்காரன். அதற்கு அந்த வயோதிபர் சுத்தியலி னால் அடிப்பதற்கு கூலி வெறும் ஐம்பது ரூபாய்தான் ஆனால் எங்கே அடிப்பது என்பதற்கு கூலி 49,950 ரூபா என்று பதில் சொன்னார் அந்த வயோதிபர்.ஆம் அன்பர்களே வாழ்வில் சில நிமிடங்களில் நாம் எடுக்கும் முடிவு பெறும் வெற்றியை தந்துவிடலாம், அந்த அனுபவத்தை பெறுவதற்கு வாழ் நாள் முழுவதும் சிந்திக்கவேண்டியிருக்கும். அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக