பின் தொடர்பவர்கள்

சனி, 1 ஏப்ரல், 2017

0452 அதுவேண்டும் இது வேண்டாம்

அதுவேண்டும் இது வேண்டாம் !



பிறப்போடு இறப்பு இணைந்தே வருகின்றது
மீண்டும் மீன்டும் பிறக்க நினைக்கும் மனசு
மரணிக்க மட்டும் மறுக்கின்றதே!
அறு சுவை உணவு தேடும் மானிட மனசு
அறுவடையை மட்டும் அறிய மறுக்கின்றது!
தாகம் தீர்க்க தண்ணீர் தேடியலையும்  நாக்கு
நீரைத்தேக்க,  குளத்தைக் கட்ட யாருக்கும் சொல்வதில்லை
பாலும் தயிரும் தாராளமாய் வேண்டும்.
தாய்யாய் பசுவை வளர்க்க மட்டும் தயங்க‌ வேண்டும்.
மரம் நடுவதை மறந்து நிழல்கள் தேடும் மானிடரே
மகள் வேண்டாம் குடும்பத்தில் ஆனாலும் 
குத்து விளாக்காய் மட்டும்  மருமகள் வேண்டும்.
அதுவேண்டும் இது வேண்டாம் என்கிறது விந்தை மனசு!

                                                                    பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...