பின் தொடர்பவர்கள்

சனி, 1 ஏப்ரல், 2017

0451 தமிழனே நீ சபிக்கப்பட்டவன் தான்!

தமிழனே நீ சபிக்கப்பட்டவன் தான்!



நீ இன்று முதல் சபிக்கப்பட்டவன்!
ஏவாளின் அப்பிளை கடித்ததினால்
இன்று முதல்  நீ சபிக்கப்பட்டவன். 
அப்பிள் பழத்தில் ஆசைப்பட்ட ஆதாமும்
இன்று முதல் சபிக்கப்பட்டவனாகிறான்.
எதை நீ அப்பிள் பழமாக நினைக்கின்றாய்?
பகுத்தறியும் அறிவை பழமாக  நினைத்தாயோ?
 பால் கவர்ச்சியை பழமாக நினைத்தாயோ?
கட்டளையை கடப்பது பழமென்று நினைத்தாயோ?
பின்னர் எதைத்தான் பழமாக நீ நினைக்கின்றாய்!
முத்தமிழாய், முக்கனிச் சக்கரையாய் தமிழ் பழம்!
கல்,  தோன்றா, மண் தோன்றா காலத்துக்கு 
முன் தோன்றியது மூத்த தமிழ்
தமிழ் உதித்த பின்னரே மனிதன் முளைத்தான்
ஆதியில் இருந்து தமிழ் சபிக்கப்பட்டுவிட்டது!
சொந்த நாடின்றி, நிலமின்றி அகதியாய்
சபிக்கப்பட்டவானய் மேதினி எங்கும் தமிழினம்!
                                                           பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...