பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 5 மே, 2017

0453 நான் ஒரு கதாநாயகி!

நான் ஒரு கதாநாயகி!
(பெண்களை போகப்பொருளாக மட்டும் நோக்கும் ஆண்களுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும் என்ற என் மன உந்தலில் எழுந்த‌ ஒரு சிறுகதை)
                                                                                             கழுத்தில் சோடா மூடிகளை மாலையாக கட்டப்பட்ட காகம் ஒன்று அமுதாவின் வீடு முற்றத்து வேலியில் குந்தி இருந்து கொண்டு நீண்ட நேரம் கரைந்து கொண்டே இருந்தது.அடிக்கடி கழுத்தை திருப்பி திருப்பி கரைந்த கொண்டிரு ந்ததால் சோடா மூடிகளின் சத்தமும், சலங்கை ஒலிபோல, காகத்தின் கரைதலுக்கு போட்டி போட்டது. அந்த காகத்தை அமுதா அந்த வட்டாரத்தில் பல தடவை பார்த்திருக்கின்றாள். ஆனால் என்னவோ இன்று மட்டும் அந்த காகம் அமுதாவின் வீட்டு முற்றத்தை விட்டு அகலாமல் அடம்பிடித்து கரைந்து கொண்டிருந்தது. காகம் கரைவது வீட்டுக்கு விருந்தினர் வரப்போகின்றார்களோ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட அமுதா காகத்தை விரட்டினாள். காகமும் உயரப்பறந்து போய், பக்கத்தில் உள்ள தென்னை மர ஓலையில் போய் அமர்ந்தது.
                                                அமுதா நினைத்த, படியே கல்பிட்டியில் இருந்து அமுதாவின் மாமி வந்து, அமுதா வீட்டு தகர படலையை திறந்தாள். "வாங்க மாமி காகம் விடாப்பிடியாக கரைந்த போதே நினைத்தேன் யாரோ வேண்டியவங்க வரப்போகிறாங்க எண்டு அது நீங்கதான் என்ற நினைக்கவேயில்லை" இன்முகத்தோடு வரவேற்றாள் அமுதா. " பேசாலையில் பாஸ் காட்டப்போகிறாங்க என்டு கேள்விப்பட்டு த்தான் நாலு நாளைக்கு முன்பே வந்துட்டேன்" உரிமை கலந்த உண ர்வோடு கல்பிட்டி மாமி பேசினாள். " பாஸ் நீங்க மட்டும்  பார்த்தா போதுமா, மாமாவையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே" இது அமுதாவின் ஏக்கம் கலந்த கேள்வி. "உங்க மாமா கதைய ஏன் கேட்கிறாய், இப்ப அவர் வீட்டுக்கு ஒழுங்க வாரதில்லை. யாரோ வெத்திலைக்கடைகாரியோட உங்க மாமா சல்லாபமாம் , ஊரே பேசிக்கொள்ளுறாங்க" என்றாள் கல்பிட்டி மாமி ஒரு  சிறு பெருமூ ச்சுடன். " ஓ அதுவா சங்கதி! " ஆவலுடன் வாய்பிளந்து கேட்டாள் அமுதா. " அதை நான் எண்ணன்டு சொல்ல! நானும் பல தடவை சொல்லிப்பார்த்தான் மனுசன் கேட்கிற மாதிரி இல்லை. ஊர் சொல்லுற மாதிரி நான் இல்ல கனகம், வெத்திலைக்காரி சுவார ஸ்யமாக கதைக்கைற படியால அவளொட சும்மா  நேர‌ம் போக்கிக் கொண்டிருக்கின்றேன் எண்டி சொல்லுது மனுசன் நான் என்னத்த பன்ன" அலுத்துக்கொண்டாள் கனகம் மாமி.

                    " மாமி நீங்க சும்மா அதைபற்றி யோசிக்காதையுங்கோ. இந்த ஆம்பிளை வர்க்கமே இப்படித்தான்!. கிளிபோல மனிசி இருந்தாலும், குரங்கு போல வைப்பாட்டி தேடி அலையும், ஒரு நாய்க்கூட்டம்!" அமிர்தா தன் எரிச்சலையெல்லாம் கலந்து கொட்டித்தீர்த்தாள்." நீ ஏன் சொல்ல மாட்டாய், அவர் எப்பவும் அமிர்தாவை பார், அவ புருசன் மைனர் மாதிரி, கண்ட கண்ட பெண்டுகளோடு சரசம் பண்ணுவதை கண்டும், கானாத மாதிரி நளாயினி மாரிதி இருக்காள் எண்டு என் புருசன் உன்னை உதா ரணத்துக்கு காட்டுகிறாரு" சொல்லி முடித்தாள் கனகம் மாமி. " மாமி உங்களுக்கு நாளாயினி பற்றி எதுவும் தெரியுமோ"? கேள்விக்கணை ஒன்றை தொடுத்தாள் அமுதா. " எனக்கா தெரி யாது தன் புருசன் குஸ்டம் போட்டிருந்தபோதும் கூட, விபசாரி வீட்டுக்கு கூடையிலே சுமந்து சென்று, கூட்டிக்கொடுத்தாளாமே! அப்படி எங்களையும் செய்யவேண்டும் எண்டு, எங்கட புருச ன்மார் எதிர்பார்க்கினம்"  
                             
                                                               " சரியா சொன்னீங்க மாமி, நாளாயினி தன்னுட புருசன் மேல இருக்கின்ற பாசத்தால அப்படி அவள் செய்யவில்லை. அவ புருசனுக்கு கெட்ட வியாதி வந்த போது, படுக்கைக்கு நாளாயினை கூப்பிட்டிருப்பான். நாளாயி னுயும் வியாதி தனக்கு வந்துடுமோ எண்டு பயந்து, அவனை தொடாமா,  கூடை மீது வைத்து அவ புருசனை விபச்சாரி வீட்டு க்கு கடத்திவிட்டவதான் இந்த நாளாயினி. அவ ஒரு புத்திசாலி பொண்ணு. இத விளங்காத மடப்பசங்க நாளாயினியை பதிபக்தி நிறைந்தவள் எண்டு இந்த புருசன்மார் நினைக்கிறாங்கா. நானும் இப்போ என் புருசனை கண்டு கொள்ளுகிறதே இல்லை எப்படியோ தொலைந்து போய் உன் ஆசையை தீர்த்துக்கொள் என்டு கழுதையை அவுத்துவிட்டேன்" அமிர்தா சொன்னதை கேட்டு, தன்னையெ மெய்மறந்து நின்றாள் கனகம் மாமி. " அம்மாடி அமுதா! நீ ரெம்பவும் புத்திசாலி, நீ ஒரு நவீன கதாநாயகிதான்" அமிர்தாவை புகழ்ந்து தள்ளினாள் கனகம் மாமி. 
யாவும் வெறும் கற்பனையே  பேசாலைதஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...