பின் தொடர்பவர்கள்

வியாழன், 30 மார்ச், 2017

0450 கனவிலே வந்த பாம்பு!

கனவிலே வந்த பாம்பு!

பாவனி இப்பொழுதெல்லாம் அடி க்கடி நடு இரவில் விழித்துக்கொ ள்கின்றாள். அடிக்கடி அந்த ராஜ நாகம் அவளின் கனவில் வந்து போகின்றது. கனவு காணும் பொழுதெல்லாம் அவள் கனவில் கண்ட அந்த நெடு இராஜ நாக த்தையும், அது ஏனோ தன்னை கொத்த வருவது போலில்லாமல், அந்த இராஜ நாகம் தன்னோடு உரசி, எதோ ஒரு இன்பம் காண, தன் மேல் மெல்ல தழுவி விளை யாட, எத்தனிப்பது போலவும் பவானிக்கு கனவிலே வந்த பா ம்பு தென்படுவதுண்டு. அடி க்கடி அந்த நெடு நாகம் கனவில் வரு வதை அம்மாவுக்கு பவானி சொன்னாளும், பவானியின் அம்மா அதை பொருட்படுத்துவதே இல்லை. அதற்கு செல்லாச்சி யம்மா, அவதான் பவானியின் அம்மா, அந்த செல்லாச்சியம்மா ஒரு கார னம் வைத்திருக்கின்றாள்  வயசுக்கு வந்த பெண் பிள்ளையின் கனவில், அடிக்கடி பாம்பு கனவில் வந்தால், அவளுக்கு அந்த உணர்ச்சி, அதுதான் அந்த பால் உணர்ச்சி! மெல்ல மெல்ல உடலு க்குள் உருவாகின்றது, என்ற அந்த காரனம்தான் அது.

                                                                                              செல்லாச்சியம்மா அப்படி நினைப்பதற்கு வலுவான காரனம் இருக்கத்தான் செய்தது. செல்லாச்சியின் அம்மாவின் சிறிய தங்கை, வயசுக்கு வருவதில் ஏதோ  ஒரு சிக்கல் இருப்பதாக வீட்டில் எல்லோருக்கும் ஒரே கவலை . இருபது வயது வந்தும் கூட செல்லாச்சியம்மாவின் சிறிய தாய் பூப்படையவே இல்லை. ஒரு நாள் எதேச்சையாக அவ்வூருக்கு ஒரு குடுகுடுப்பைக்காரன் நடு சமத்தில், அதுவும் செல்லாச்சியம்மாவின் சிறிய தாயின் வீட்டின் வேலியோரமாக நின்ற படி.......நல்ல கலம் பிறக்குது,,,, நல்ல காலம் பிறக்குது. இந்த தெருவில ஒரு மெட்டொ ன்று மலராம கிடக்குது. நாகதோஷ நிவாரணம் செய்தால் சீக்கிரமா பூவரசம்பூ  பூப்பூக்கும்.... நல்ல காலம் பிறக்குது ,,, நல்ல காலம் பிறக்குது,,  குடு குடுப்பைகாரன் வந்துட்டு போன பின்பு செல்லாச்சியம்மாவின் சிறிய தாயை பக்கத்து ஊரில் உள்ள நாகதம்பிரான் கோவிலுக்கு கொண்டு போய், தோசம் கழித்த அடுத்த மாதத்திலேயே செல்லாச்சிய ம்மாவின் சிறிய தாய் பூப்படைந்து, கல்யாணம் நிறைவேறி, இப்போ பிள்ளை குட்டிகளோடு சந்தோசமா இருக்கின்றாள். கன்னிப் பெண்களின் கனவில் பாம்பு வந்தால் அது பாலுண ர்ச்சி சார்ந்த விடயம் என்பது அந்த கிராமத்தவரின் ஐதீகம்.

                                                                                        பவானியின் கனவில் பாம்பு வந்து போகும் போதெல்லாம், செல்லாச்சியம்மாவுக்கு உள்ளூர சந்தோசம் தான்!. சீக்கிரம் பவானி பெரிய மனுசியாகப் போகி ன்றாள் என்று தனக்குள்ளே சந்தோசப்பட்டாள்: பூப்பருவ விழா வை ஊரே அசத்தும் படி கொண்டாட வேண்டும் என்று கணக்கு ப்போட்டாள் செல்லாச்சியம்மா. செல்லாச்சியம்மா நினைத்த படி பவானி ஒரு நாள் பெரிய மனுசியானாள். பெரிய மனுசி யான நாள் தொடக்கம், பவானியின் நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் உண்டாகின. பாவனி ஆண்களைக் கண்டால் கோப த்தில் வெகுண்டெழுந்தாள். வீட்டில் உள்ள அண்ணன்மார் அப்பா கூட எரிச்சலாகவும் கடுகடுப்பாகவும் நடக்கத்தொடங்கி னாள்.  சாதாரணமாக பெண்களுக்கு மாதத்தில் வரும் அசெள கரிய‌மான நாட்களில், காளியம்மன் போல தலைமயிரை விரி த்துவிட்டு, காளியம்மன் மாதிரி ஆக்ரோசமாக‌ ஆடுவாள்.  திடி ரென்று பற்களை நர நரவென்று கடித்தபடி அலறி ஆடி மயக்கம் போட்டு விழுவாள். ஊரில் உள்ளவர்கள் பவானிக்கு எதோ அசு த்த ஆவி பிடித்து ஆட்டுகின்றது என்று பேசத்தொடங்கினார்கள். எல்லா கோயில் குளங்களுக்கும், செல்லாச்சியமாள் பவானியை கொண்டு சென்றாள் பயன் ஏதும் இல்லை ரெம்பவும்  மனம் உடைந்து போனாள் செல்லாச்சியம்மா

                                                                நாட்கள் செல்லம்மாவுக்கு சோகத்தில்  நகர்ந்தன. ஒரு நாள் செல்லாச்சியம்மாவின் தூரத்து சொந்த க்காரன் சேகர் அவர்  பள்ளிக்கூட ஆசிரியராக கதிர்காமத்தில் பணியாற்றி வந்தார்,     செல்லாச்சியம்மாவின் வீட்டுக்கு விடு முறைக்காக வந்திருந்த போது, பவானியின் நடவடிக்கைகளை உண்ணிப்பாக கவனித்தார். பாவானிக்கு வந்திருப்பது மன உளைச்சலின் விளைவான ஹிஸ்டிரியா என் ப‌தை  உணர்ந்து கொண்டார். உடனடியாக பவானியை அருகில் உள்ள மன்னார் நகரத்திற்கு அழைத்து சென்று மனோதத்துவ டாக்டரிடம் காட்டி னார். மனோதத்துவ டாக்டரும் பாவனியின் பேச்சுக்கள், நடவடிக் கைகள் இவற்றை கேட்டுவிட்டு, பாவானிக்கு ஹிப்னாடிஸ அடிப்படையில் ஆழ்ந்த தூக்கத்தை வரவழைத்து பாவனியிடம்,  கனவில் பாம்பு வருகின்ற போது வேறு என்ன என்ன பொருட்கள் ஆட்கள் வருகின்றன என்று கேட்க  தொடங்கினார். பவானி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து பேசத்துடங்கினாள். அவள் பேச்சு பத்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவத்தை, பசுவின் பால் காம்புகளில் பால் கறப்பதைப்போல, பவானியின் ஆழ்ம னம் கறக்கத்தொடங்கியது  

                                                                                        பத்து வருடங்கள் இருக்கும், செல்லாச்சியம்மா தோட்டத்து தேங்காய்களை உரிப்பதற்காக, ரவி என்ற ஒரு இளைஞனை வீட்டுக்கு அழைத்திருந்தால். ரவி கடல் தொழில் செய்பவன். கறுப்பென்றாலும் நல்ல வாட்ட சாட்ட மான உடம்பு அவனுக்கு. செல்லாச்சியம்மாவின் பக்கத்து வீட்டி லே ரமணி என்ற ஒரு பிள்ளைக்கும் இந்த ரவிக்கும் காதல், செல்லாச்சியம்மா ரவியை தேங்காய் உரிக்க வீட்டுக்கு அழை த்ததில் ரவிக்கு ஏகப்பட்ட குஷி, தேங்காய் உரிக்கிற சாட்டில் ரம ணியாவோட‌   பொழுதை கழிக்கலாம் என்று கணக்கு போட்டா ன் ரவி. ரவியின் எண்ணத்திற்கு வசதி செய்து கொடுப்பதை ப்போல, "ரவி வீட்டில் இருகின்ற தேங்காய்களை உரித்துவை,  முடிந்தால் மரத்தில இருக்கின்ற தேங்காய்களையும் பறித்து வை. நான் பனங்காவாடிக்கு போயிட்டு வாரன் வருவதற்கு சாய ங்காலமாகும். பவானி பாப்பா வீட்டில் தனிய இருக்கா பத்திரமா பார்த்துக்கொள், ஏதாவது தேவை என்றால் பக்கத்து வீட்டு ரம ணியாவிடம் கேளு, நான் ரமணியாவிடம் சொல்லிட்டு போ றேன்"  என்று சொன்னபடியே பனங்காபெட்டியுடன், பட லையை சாத்திவிட்டு செல்லாச்சியம்மா வெளியேறிவிட்டாள். 

                                                 ரவிக்கு பழம் நழுவி, பாலில் விழுந்த மாதிரி, பக்கத்து வீட்டு ரமனியாவும் வந்துவிட்டாள். பிறகு என்ன? ரவி யும், ரமணியாவும் காமத்தீயில் வெந்து தணிந்தனர். பாவானி என்ற நான்கு வயது பாப்பாவின் கண் முன்னாலேயே எல்லாம் நடந்தது. பவானி பாப்பவுக்கு   ரவியும் ரமனியாவும் என்ன செய்கின்றார்கள் என்பது மட்டும் புரியவில்லை ஆனால் ரவி யின் ஆண்குறி மட்டும் ஒரு பாம்பாக,,,,,,,,,அவள் பிஞ்சு மனதில் ஆழப்பதிந்தது! யாவும் கற்பனையே   பேசாலைதாஸ்

( பிற் குறிப்பு>  நான் உங்கள் பேசாலைதாஸ் பேசுகின்றேன். என் அன்பு தாய்மார்களே! யாரையும் நம்பி, உங்கள் குழந்தையை தனியே இருப்பவர்களிடம் விட்டுச் செல்லாதீர்கள்.  அது ஆபத்தில் முடியும்.நன்றி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...