பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

0409 பெருந்தன்மை

பெருந்தன்மை
காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டு ள்ளார். உடனே பத்திரிகை யாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ள னர். காமராஜரோ ஒன்றும் இல்லை , சும்மா தான் போட்டு ள்ளேன் என்று சொல்லி இரு க்கிறார். பத்திரிகையாளர்களோ அவரை விடவில்லை. துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்ன? என்று துளைக்க ஆரம்பித்துள்ளனர்.
உடனே காமராஜர் ஒண்ணும் இல்லையா , "இடது பக்கம் சட்டை கிழிந்துள்ளது அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை போட்டுள்ளேன்" என்றாராம் ,
வேணும்ன்னா பாருங்கள் என்று துண்டை எடுத்து கிழிந்த சட்டையை காண்பித்தாராம். Pin drop silence....
அதைக்கண்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தலைகவிழ்ந்தனர்.
இப்படியும் ஒரு முதல்வர்! இவரையும் தேர்தலில் தோற்கடித்த நன்றி கெட்ட மனிதர்கள் தாம் நாம். ".
""மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். நாம் அமைதி காப்போம்""
இது தான் தேர்தலில் தோற்றபிறகு அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது!!
இந்த பெருந்தன்மை எத்தனை அரசியல்வாதிகளுக்கு வரும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மணவாட்டி பேசாலைதாஸ்

மணவாட்டி  பேசாலைதாஸ்  ஓர் ஊருக்கு அழகான பெண்ணொருத்தி, எங்கிருந்தோ சட்டென வந்து தோன்றினாள். அவள் எங்கிருந்து வந்தாள், அவள் யார் என்ற விபரங்கள...