பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

0410 பெண் எனும் தேவதை!

பெண் எனும் தேவதை!
கிறிஸ்தவர்களின் வேதாகமத்தில் உள்ள, ஆதியாகமத்தில் நடந்த ஒரு சம்ப வத்தை என் கற்பனையில் இப்படி ஒரு  கதையாக படைக்கின்றேன். கடவுள் எல்லா படைப்புகளையும் படைத்த பின்னர் முதல் மனிதனாகிய ஆதாமை படைத்தார். ஆதாம் தனிமையாக இரு ப்பது நல்லதல்ல என்று அறிந்த கடவுள் அவனுக்கு துணையாக ஒரு பெண்ணை படைப்போம் என்று ஆழ்ந்து சிந்தித்து ஒரு பெண்ணை படைக்கும் முயற்சியில் இறங்கினார்.  ஒரு நாள், இரு நாள் அல்ல, தொடர்ந்து ஆறு நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.
இதை பார்த்துக் கொண்டிருந்த வான தூதர் கபிரியேல் கடவுளிடம் கேட்டார், “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நாட்கள்?” என்று.
அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷய ங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்.. இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்.சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும்.அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார். கடவுள்.
                                                    இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டார் கபிரியேல் தூதர்.ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றார்.
அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள்..ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைக ளையும் சமாளித்து விடுவாள்.. அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ள த் தெரியும்.. கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உண ர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாய மாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார் கடவுள்.
                                                                             ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தூதர் கேட்டார். “எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள். கபிரியேல் தூதர், பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றார்.. அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.
                                                                                       ஆச்சரியமான தூதர், “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறை யுமே கிடையாதா?” என்று கேட்டார் கபிரியேல் தூதர். தன்னு டைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,” கடவுள் சிம்பிளாக பதிலளித்தார். ஆம் அன்பர்களே! பேய்கள் கூட இந்த பெண்களுக்கு இரங்கும், எளிதாக எல்லோரிடமும் ஏமா ந்து தன்னையே இழந்து விடும். ஏவாள் என்ற இந்த பெண்ணும் இறுதியில் பேயிடம் ஏமாந்தாள். யாவும் கற்பனையே  அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...