பின் தொடர்பவர்கள்

திங்கள், 13 பிப்ரவரி, 2017

0408 பெண் மனது!

பெண் மனது!
அன்பர்களே! ஆறு அது ஆழம் இல்லை, அது சேறும் கடலும் ஆழம் இல்லை, ஆழம் எது ? அது பொம்பள மனசு தான்! ஆம் பெண்களின் மனசே விசி த்திரம் நிறைந்த விந்தை! அவ ர்களின் ஆழ் மனதில் என்ன இருக்கின்றது என்பதை நாம் கண்டறிவது மிகக்கடிணம்! பெண்களின் அன்பை நாம் பெறவேண்டு மானால், அவ ர்களை சுதந்திரமாக, சிந்திக்க செயல்பட, நாம் அனுமதிக்கை யில் தான், அவர்களிடம் இருந்து உண்மையான அன்பு நமக்கு கிடைக்கும், இதனை விளக்க வழமை போல ஒரு கதை சொல்ல்கி ன்றேன்.
                                                                                இரண்டு நாட்டு மன்னர்களின் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் .”நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே” வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வி யைக் கேட்டு சரியான விடை சொன்னால்தான் நம் இருவருக்கும் திருமணம் எனச் சொல்லி யிருந்தாள். கேள்வி இது தான் ”ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்”. தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான் விடை கிடைக்கவில்லை .கடை சியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான். அவள் சொன்னாள்”நான் விடை சொல்கி றேன். ஆனால் நான் விடை சொல்வதனால் அவனுக்கு அவன் காதலியுடன் திருமணம் நடக்கும்; உனக்கு உன் நாடு திரும்பக் கிடைக்கும். இதனால் எனக்கு என்ன கிடைக்கும்” என்றாள்.
அவன் சொன்னான் “ நீ என்ன கேட்டாலும் தருகிறேன்”.
அவள் சொன்னாள் ”தன் சம்பந்தமான முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.
இப் பதிலை அவனை வென்ற மன்னனிடம் சொல்லி அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்களின் திருமணம் நடந்தது; இவனு  க்கு இவன் நாடும் திரும்பக் கிடைத்தது.
                                                   நாடு கிடைத்த மகிழ்ச்சியில் கிழவியிடம் திரும்பி வந்தான் உனக்கு வேண்டியதைக்கேள் என்றான்.
அவள் கேட்டாள் ”நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள் அவள் சொன்னாள்.”நாம் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால் உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக மாறிவிடுவேன்; நாம் தனியே இருக்கும்போது நான் அழகிய பெண்ணாக இருந்தால் வெளியே செல்கையில் சூனியக்காரக் கிழவியாகி விடுவேன்.எது உன் விருப்பம்?”அவன் யோசிக்காமல் சொன்னான் ”இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவு நீதான் எடுக்க வேண்டும்” என்றான்.
அவள் சொன்னாள் ”முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” ஆம்! பெண் அவள் சம்பத்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப் படும்போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள். எனவே அவளை ஒரு சுதந்திர தேவதையாக வாழ நாம் அனுமதிப்போமா? சொல்லுங்கள் அன்பர்களே  அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...