பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

0407 அன்புப்பாலம்

அன்புப்பாலம்

"இஞ்சபாரு வேதவள்ளி, நீ இப்படியே அன்ன நடை நடந்தா,  வீட்ட போறதுக்கு சாமமாகிடும், வேதநாயகம் கொஞ்சம் அதட்டலாகத்தான் சொன்னார். " இந்த மனுசனுக்கு எப்ப பார்த்தாலும், கடுகடு ப்பான பேச்சுத் தான். அன்பா நாலு வார்த்தை பேசினதே கிடையாது" அலுத்துக்கொண்டாள் வேதவள்ளி. வேத வள்ளி வாழ்ந்த கிராமாம் மாதா கிராமம், போக்குவரத்து வசதி இல்லாதா கிராமம். அந்த கிராமத்துக்கு செல்ல வேண்டுமா னால் ஒற்றையடிப்பாதை வழியாகத்தான் செல்லவேண்டும் அதுவும், ஆற்றை கடந்து செல்லவேண்டும்.  அந்த ஆற்றுக்கு குறு க்கால் ஒரு கயிற்றுப்பாலம், எப்பவேண்டு மானாலும் அறுந்து விழும் நிலையில் இருந்தது. வேத நாயகத்தார் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார் சீக்கிரம் நட என்று ஆன வேதவள்ளி அதை கேட்கிற மாதிரி இல்லை. மனசுக்குள்ளே அவரை திட்டிக்கொண்டே இருந்தாள்! வேத நாயகத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. விறு விறு என்று நடக்கத்தொடங்கினார். வேதவள்ளிக்கும் அவருக்கும் இடையில் தூரம் அதிகமாயிற்று. இருட்டு வேற,  வேதவள்ளியாள் இருளைக்கிழித்துக்கொண்டு  பார்க்கமுடியாது ஏற்கனவே கண் புகைச்சல் வேறு!  இடைக்கிடையே மின்னல் வெட்டிக்கொண்டது  சாதுவாக மழை பெய்ய தொடங்கியது. "இந்த பேய் பிடிச்ச மனுசன் கொஞ்சம் கூட இரக்கமில்லாதவர் வேதவள்ளியின் திட்டுக்கள் அதிகமாயிறு. இப்போ அவள் கயிற்றுப்பாலத்துக்கு வந்துவிட்டாள். கயிற்று பாலத்தில் நடப்பதற்கு அவள் பயந்தாள். வேதநாயகமோ கயிற்று பாலத்துக்கு மறு கரையில் நின்று கொண்டு, வேதவள்ளியை வருமாறு சைக காட்டினார். அவர் சொல்லவது சரியாக வேதவள்ள்யின் காதில் விழவில்லை. வேதவள்ளிக்கு காது எப்பவோ கொஞ்சம் டம்மி அதைவிட  கயிற்றுப்பால தூரமும் ஜாஸ்தியாகவே இருந்தது. "இந்த மனுசன் அடம்பிடிச்சவர். இவர் எங்க வந்து கைதரப்போறார், மனதுக்குள் திட்டித்த்தீர்த்துக்கொண்டு, ஒரு மாதிரி பாலத்தை கடந்து வந்துவிட்டாள் அப்போதுதான் தெரியும் அவளுக்கு,  தன் கணவன் அறுந்து போயிருந்த கயிற்று பாலத்தனை தனக்காக வெகு நேரம் இறுகப்பிடித்துக் கொண்டிருந்தார் என்று. வேதவள்ளிக்கு ஓ என்று கத்தி அழவேண்டும் போல இருந்தது. சில சமயம் கணவர் குடும்பத்திற்கு எதுவும் செய்யாமல் மௌ னமாக இருப்பதாக தோன்றும். ஆனால், உண்மையிலேயே அவர் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் இருப்பார். தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரிய வரும்.....வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை...!
தூரத்தில் இருப்பது தெளிவாக தெரிந்தாலும், அருகில்
வரும்போது மட்டுமே பொருள் புரிகிறது..!!!  யாவும் கற்பனையே!  அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...