பின் தொடர்பவர்கள்
வெள்ளி, 2 அக்டோபர், 2015
0259 நன்மை செய்ய பிறந்த நீ நன்மை செய்!
நன்மை செய்ய பிறந்த நீ நன்மை செய்!
அன்பர்களே நம் எல்லோருக்கும் நன்மைகளை காண, அனுபவிக்க ஆசை உண்டு. நன்மைகளை நம்மால் செய்யமுடியும் ஆனால் நன்மைகள் செய்ய கோடிஸ்வரனாக, அளவற்ற ஆற்றல் வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். நமது சுய நீதியானது தவறானது ஆகும். நம்மால் முடிந்ததை நாம் செய்யவேண்டும் அதையே இறைவன் நம்மிடம் எதிர் பார்க்கின்றார். நன்மைகள் செய்ய நல்ல மன உணர்வு இருந்தாலே போதும், உலகில் அன்பு பெருகும், நன்மை உருவாகும். முதலில் சின்ன காரியத்தில் இருந்து நாம் பெரிய விடயங்களை ஆரம்பிக்கலாம். இயேசு தெளிவாக சொன்னார், உங்களில் சின்னவன் ஒருவனுக்கு செய்த சின்ன உதவியெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்று. இதனை தெளிவாக சொல்வதெ இந்த சந்தர்ப்பம். உலகின் துன்பங்களை, அநீதிகளை எவ்விதம் நீக்குவது என்ற ஆழ்ந்த சிந்தனையுடன் ஒருவர் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன் ஒரு சிறுவன், கடற்கரையில் ஒதுங்கியிருந்த 'நட்சத்திர மீன்களை' (star fish) ஒவ்வொன்றாக எடுத்து கடலில் எறிந்துகொண்டிருந்தான். நம் சிந்தனையாளர், அச்சிறுவனை அணுகி, "என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு, அச்சிறுவன், "இந்த மீன்கள் கரையிலேயே கிடந்தால், இறந்துவிடும். எனவே, இவற்றை நான் மீண்டும் கடலுக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னான். அதற்கு பெரியவர், "இந்தக் கடற்கரையில் பல்லாயிரம் மீன்கள் ஒதுங்கியிருக்கின்றன. அதேபோல், உலகெங்கும் உள்ள கடற்கரைகளில் பல கோடி மீன்கள் ஒதுங்கியிருக்கக் கூடும். அவற்றையெல்லாம் உன்னால் காப்பாற்ற முடியுமா?" என்று கேட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பேரழகும் பெருஞ்செல்வமும்
பேரழகும் பெருஞ்செல்வமும் பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக