பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 2 அக்டோபர், 2015

0257 பாதைகள் வகுத்தபின்னே! பயந்தென்ன லாபம்?

பாதைகள் பலவிதம்! பாதைகள் வகுத்தபின்னே! பயந்தென்ன லாபம்?

அன்பர்களே எனது எண்ணத்தில் அவ்வ ப்போது   உதிக்கும் எண்ணங்களை கரு வாக்கி அதற்கு தகுந்த கதை துணுக்குகளை கோர்த்து, சிந்தி த்ததை அப்படியே நான் சித்தரிக்கி ன்றேன்.  இப்பொழுது துருவ‌ நாட்டு நோர்வே யில் பனிக்காலம், பாதை முழுவதும் வெண்பனி, கார் விழுக்கி விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக, சக்கரங்களுக்கு  ஆணிகள் சொருகப்பட்டிருந்தாலும், சிலவேளைகளில் மலை ச்சரிவுகளில் வழுக்கிக்கொண்டே கார் ஓடிக்கொண்டிருக்கும், பனி படர்ந்த பாதைகள் இன்று என்னை பாதை, பற்றி சிந்தி க்கவைத்தத்து,,,, இதோ என் சிந்தனையின் நீட்சி,,,,,,,,,,,, 

                                                              நமது எண்ணங்கள் எப்படியோ? அப்படியேதான் நம் தேடலும், புரிதலும் இருக்கும். நாம் நம க்குள் இருக்கும் எண்ணங்களை ஆராயாமல், வெளியே இருப்பதை ஆராயமுற்பட்டால் நமது எண்ணங்களே அதில் பிரதிபலிக்கும். இதனை முற்சார்பு எண்ணங்கள் என்று கூட நாம் சொல்லமுடியும். முதலில் நமது எண்ணங்கள் சுதந்திர மாக, சார்பற்றதாக‌ அற்றதாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் நமது வாழ்வின் பாதைகளும் தெளிவாய் இருக்கும். இதனை எளிதாக விளக்குவது இந்த சந்தர்ப்பம். 

                                                             ஒரு நாள், ஒரு ஜென் குரு ஒருவர், இன்னொரு ஜென் குருவான ஜான் அவர்களிடம், பாதை என்றால் என்ன என்று கேட்டார். ஒவ்வொரு நாள் வாழ்க்கை யும் ஒரு பாதைதான் என்றார் ஜான். அதைப் படிக்க முடியுமா என்று அந்த குரு மேலும் கேட்க, நீ அதைப் படிக்க முயன்றால் அதிலிருந்து வெகு தொலைவுக்குச் சென்று விடுவாய் என்றார் ஜான். நான் அதைப் படிக்காவிட்டால் அது ஒரு பாதைதான் என்று எப்படி நான் அறிந்து கொள்வது என்று மீண்டும் அந்த‌ குரு கேட்க, நான் குறிப்பிட்டுச் சொல்லும் பாதை கண்களு க்குத் தெரியும் மற்றும் கண்களுக்குத் தெரியாத இந்த உலகத்தின் வெளித்தோற்றம் அல்ல. நீ உண்மையிலேயே, எவ்வித ஐயமுமின்றி, அந்தப் பேருண்மையை அடைய விரு ம்பினால், இந்த வானம் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு உன்னையே தயார்படுத்திக்கொள். அது நல்லது என்றோ, இது கெட்டது என்றோ பிரித்துப் பார்க்க வேண்டாம் என்றார் ஜான் குரு.

                                                           மனிதரின் பார்வையை மறைப்பது அவர்களின் எண்ணங்கள். உண்மைக்கு அது புதிய வர்ண த்தையும், புதிய அர்த்தத்தையும் உண்டு பண்ணுகிறது. எண்ணங்கள் செம்மையானால் வாழ்க்கைப் பாதையும் செம்மையாகும். ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் ஒரு பாதைதான் என்பதும் புரியவரும். பாதைகள் வகுத்தபின்னே! பயந்தென்ன லாபம்? பயணம் தொடர்ந்து விடு,, பாதைகள் தொடரும்,,,,,,,, அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...