பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 2 அக்டோபர், 2015

0260 அழகென்ற சொல்லுக்கு அளவு எது?

அழகென்ற சொல்லுக்கு அளவு எது?

அன்பர்களே அழகு என்ற ஒரு விடயத்தில், நாம் எல்லோருமே குழம்பி த்தான் போயுள்ளோம். அழகு என்ற வுடன் புற த்தோற்றத்தை நம் மன க்கண்முன் நிறுத்து கி ன்றோம். நிறம் பள பளப்பு இவைகளையே அழகு என்ற ஒரு கண்ணோட்டம் நம க்கு உண்டு. ஒரு மனிதனின் எண்ண ஓட்டங்கள் அவன் சிந்த னை, அவன் இலட்சி யம், செயல்பாடுகள்அவன் எழுத்துக்கள்,  எல்லாம் நமக்கு அழகாக தெரிவதில்லை. உள் அழகு தெரியாமல் புற அழகை மேம்படுத்துவதால் பயன் என்ன? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று நம் முன்னோர்கள் புரியாமலா நமக்கு சொல்லிச்சென்றார்கள். ஒரு மனிதனின் இதயத்தில் இருக்கும் இரக்க சுபாவாம், கருணை, அன்பு இவைகள் எல்லாம அவன் செயல்களிலும், அவன் வெளியிடும் முக பாவானையின் வழியாக கண்டு கொள்ளலாம், நமது இதயத்தில் எண்ணத்தில் உள்ள அழுக்கான எண்ணங்களை நீக்கினாலே நாம் ஒவ்வொருவரும் மிக அழகாக தோன்றுவம் இது எனது வாதம், இதனை தெளிவாக இந்த கதை சொல்கின்றது.                                                                      ஒரு நாள் ஒரு பெரிய மனிதரைத் தேடி இரண்டு ஓவியர்கள் சென்றார்கள். அவ்விருவரில் யார் சிறந்த ஓவியர் என்று புரிந்து கொள்ள முயன்றார் பெரியவர். இரு ஓவியர்களுமே சிறந்த கலைஞர்களாக அவருக்குத் தெரி ந்தார்கள். அதனால் அவர் அந்த இருவரிடமும், எனது இரு வீடு களை அழகுபடுத்துங்கள், அதற்குத் தேவையான வண்ணங்க ளையும் தூரிகைகளையும் தருகிறேன். ஒரு மாத காலம் அவ காசமும் தருகிறேன், சரியாக முப்பது நாள்கள் கழித்து வந்து இரு வீடுகளையும் பார்ப்பேன், எந்த வீடு என்னைக் கவர்கி றதோ அதை அழகுபடுத்தியவரை சிறந்த கலைஞராகத்               தேர்ந்தெடுத்து பரிசு தருகிறேன் என்றார். ஓவியர்களில் ஒருவர் வண்ணங்களை வாரித் தெளித்து சுவர்களையெல்லாம் அழ குபடுத்தினார். வீடு வண்ணமயமாக காட்சியளித்தது. அடுத்த ஓவியர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வீட்டிற்கு வண்ணங்க ளோடு சென்றார். வீட்டைச் சுற்றிப் பார்த்தார். சுவர்களும், தரையும் அழுக்காய் இருந்தன. வண்ணங்களை வாரி இறை க்கு முன்னர் முதலில் தண்ணீரை வாரி இறைத்து சுவர்களை யும், தரையையும் தேய்த்துக் கழுவினார். அப்போதுதான் தெரிந்தது அது பளிங்கினால் கட்டப்பட்ட வீடு என்று. அதுவே அழகாக இருந்தது. ஆதலால் அவ்வீட்டை அப்படியே விட்டுவி ட்டார். முப்பது நாள்கள் கழித்து அவ்விரு வீடுகளின் உரிமை யாளர் வந்து பார்த்தார். புதிதாக வர்ணம் தீட்டப்படாமல் கழுவி சுத்தம் செய்யப்பட்ட வீடே அவருக்கு அழகாகத் தோன்றியது. அந்த ஓவியரையே சிறந்த கலைஞராகவும் அவர் தேர்ந்தெடுத்தார். உள் அழகு தெரியாமல் புற அழகை மேம்படுத்துவதால் பயன் என்ன? அன்புடன் பேசாலைதாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...