பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 2 அக்டோபர், 2015

0261 தக்கார் தக‌விலார் என்பது

தக்கார் தக‌விலார் என்பது

அன்பர்களேஆசான், அறிவாளிகள், சான்றோர்கள்இவர்களின் உதட்டில் இருந்து வரும் வார்த்தைகள் உன்னதமானது, அவைகள் உள்ளத்தில் இருந்து ஊற்றெடுப்பவை. தக்கார் தக‌விலார் என்பது அவரவர் எச்சாத்தால் கணிக்கப்பெறும் என்று வள்ளுவன் வகுத்தான். எனவே சான்றோரின் உதட்டு வார்த்தைகளை நாம் மதிக்கவேண்டும். கனி இருக்க காய் கவர்தல் போல சிலர் இன் சொல் இருக்க எப்பொழுதும் கடுமையான் கொடுமையான வார்த்தைகளே பாவிப்பார்கள். எமது வாய் வார்த்தைகளில் நமக்கு எப்பொழுதும் கவனம் தேவை, நாகாக்கா காவாக்கால், சோகாப்பார் சொல் இழுக்குப்பட்டு என்று வள்ளுவர் மேலும் சொல்லிவைத்தார். நெல்லை கொட்டினால் அள்ளிவிடலாம், ஆனால் சொல்லிஅ கொட்டினால் அள்ளமுடியுமோ என நமது சான்றோர்கள் அனுபவாயிலாக சொல்லிவைத்தார்கள்அந்த ஆசிரமத்தில் வயதான பெரிய ஞானி ஒருவர், மூப்பின் தளர்ச்சியால் படுத்திருந்தார். அவரைத் தேடி வந்த இளைஞர் ஒருவர், அவரிடம் சென்று, ஐயா, நான் வெகு தூரத்திலிருந்து வந்திருக்கிறேன் என்றார். சரி உனக்கு என்ன வேண்டும் மகனே என்று ஞானி கேட்க, நான் உங்களுக்குச் சீடனாக விரும்புகிறேன், அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா, இல்லையா என்பது தெரிய வேண்டும் என்றார் அந்த இளைஞர். சரி, உள்ளே வா. உனக்கு என்னால் இப்போது ஒரு காரியம் ஆக வேண்டும், கொஞ்ச நேரம் என் உடம்பில் ஏறி மிதிக்க வேண்டும் என்றார் ஞானி. ஐயா, அது மட்டும் என்னால் முடியாது. ஏன் என்றார் ஞானி. நீங்கள் ஒரு பெரிய ஞானி. நான் உங்கள் கால் தூசிக்கும் ஈடாக மாட்டேன். உங்கள் மீது என் கால் படுவதா? என்றார் இளைஞர். மகனே, எனக்கு இப்போது உடம்பு வலி என்று ஞானி சொன்னதும், பெரியவரே, அதற்காக என் உயிரையே வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறேன், ஆனால் உங்களின் புனிதமான உடம்பை மட்டும் நான் மிதிக்க மாட்டேன் என்றார் இளைஞர். அதற்கு அந்த ஞானி, என்னுடைய உடம்பை மிதிக்க நீ மறுக்கிறாய்! ஆனால், என்னுடைய உதடுகளை உன் காலடியில் போட்டு மிதிக்கிறாய், குருவின் வார்த்தைகளை மிதிக்கிறவன் எப்படி அவரை மதிக்கிறவனாக ஆக முடியும் என்று கேட்டார் ஞானி. அந்த இளைஞர் குழம்பினார். மரியாதைக் குறைவாகத் தோன்றுகிற செயல்கள் எல்லாம் மரியாதைக் குறைவான செயல்கள் அல்ல என்று சொல்லி, ஞானி இளைஞரின் குழப்பத்தைத் தெளிவுபடுத்தினார்.  ன்றும்அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...