பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

0256 தேர் ஏது? சிலை ஏது? திருநாள் ஏது? மனிதர்கள் எல்லாம் தெய்வங்களாய் மாறிவிட்டால்,,,,,,,,,!

தேர் ஏது? சிலை ஏது? திருநாள் ஏது? மனிதர்கள் எல்லாம் தெய்வங்களாய் மாறிவிட்டால்,,,,,,,,,!

அன்பர்களே!   வேதம் சொல்கின்றது, செத்த சிங்கத்தைவிட உயிரோடு உள்ள நாய் மேலானது என்று. மதங்களை விட மனிதர்கள் மேலானவர்கள், இதை நாம் சரியாக புரிந்து கொள்வ தில்லை, இதனால் தான் நமக்குள் அதிக பிரச்ச னைகள். நான் இப்போது அதிகமாக நம்மவர்கள் அதிகமாக வரும், கோவிலுக்கு பூசைகளுக்கு செல்வதில்லை, காரணம் அங்கு செல்வதினால், பிணக்குகள் தான் மன‌துக்குள் அதிக மாககின்றதே தவிர, உண்மை அன்பு ஊற்றெடுப்பதாக இல்லை.  அதனால்  பிற மொழி மக்கள் கூடும் கோவிலுக்கு, திருப்பலிக்கு செல்வது ண்டு. கும்பிடப்போய்  சேறு பூசக்கூ டாது அல்லவா அதற்காக இந்த முன் ஏற்பாடு.   இதற்கு ஒரு ஜென் கதையை நான் உதாரணமாக சொல்லவிரும்புகி ன்றேன். 

                                     ஒரு வயதான மத குரு , கடுங்குளிர் நேரத்தில், இரவு நேரத்தில், காட்டு வழியாக சென்றார். குளிர் இன்னும் அதிகமாக, அவர் நடுங்கத்தொடங்கினார். அருகில் ஏதாவது ஆலயம், மடம் இருக்கின்றதா என்று பார்க்கலானார். அங்கே ஒரு புத்த மடம் அவர் கண்களுக்கு தென்பட்டது, அங்கே சென்று, இரவு தங்குவதக்கு இடம் கிடைக்குமா என்று கேட்டார். மடத்தின் காவலாளிக்கு இடம் கொடுக்க மனம் இல்லை, இரு ந்தபோதும் மடத்தின் முன் திறந்த இடத்தில் இரவு படுக்க இடம் கொடுத்தார். பின்னர் அவர் தூங்க சென்று விட்டார். திடிரெ ன்று நடு நிசிவேளையில் நெருப்பு எரிவதைக்கண்ட கவா லாளி அங்கு சென்று பார்த்தார். அப்பொழுது எரியும் நெருப்பு க்கு அருகில், இரவு தங்குவதற்கு இடம் கேட்ட வயோதிப குரு குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஆலயமுன் மண்டபத்தில் இருந்த புத்த சிலைகளை காணவில்லை, வந்த வயோதிப குருதான் அந்த சிலைகளை நெருப்பில் போட்டு எரித்துள்ள தை கண்ட, காவலாளி, மடையனே! புத்த சிலைகளை எரிக்க லாமா? என்று கேட்க, அந்த வயோதிப குரு எதுவும் சொல்லாமல், மெளனமாக, ஒரு கம்பை எடுத்து சாம்பலை கிண்டிய படி எதையோ தேடினார். 

 
                                  கவலாளி என்ன தேடுகின்றாய் என்று கேட்க, அவரோ புத்தரை தேடுகின்றேன் என்றார், ஒன்றுமே புரியாத காவலாளி, மட தலைவரிடம் விடயத்தை சொன்னார். மடத்து தலைவரோ, வந்திருப்பது ஒரு ஜென் குரு என்பதை அறிந்து, காவலாளியிடம், மதத்தை விட மனிதனுக்கு அதிக மதிப்பு உண்டு என்பதை அவர் சொல்லாமல் சொல்கின்றார் என்றார். ஆம் அன்பர்களே! தேர் ஏது? சிலை ஏது? திருநாள் ஏது? மனிதர்கள் எல்லாம் தெய்வங்களாய் மாறிவிட்டால்,,,,,,,,,! மாறுவோமா? மனதை மாற்றுவோமா?
கேள்விகளோடு மீண்டும் அன்பின் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...