அன்பர்களே நமது பெண்க ளுக்கு ஒரு பிரச்சனை உண்டு அதாவது அழ்கான சேலை உடுத்தி விழாவுக்கு போகவே ண்டும் என்றால் ஆயிரம் தடவை நிலைக்கண்ணா டியில் பார்த்து க்கொள்வா ர்கள். சில ஆண்களும் தமது மீசை அழகை கண்ணாடியில் பார்த்து மகிழ்வதுண்டு. மன மகி ழ்ச்சியோடு நின்றுவி ட்டால் போதுமா?
கண்ணாடியில் நமது பிம்பம் தெரிகின்ற ஒவ்வொரு கணமும் நம்மை யார் என்று நமக்குள்ளே கேள்வி கணைகளை தொடுத்துப் பாருங்கள் உங்கள் வாழ்வின் அர்த்தம் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். மண்ணைத்தோ ண்டி எண்நெய் தேடுவது போல, நம்மை நாமே தோண்டிப்பா ர்ப்போம். எல்லா பிரச்சனைகளும் நான் என்ற ஆணவத்தில் தான் ஆரம்பிக்கின்றன. உலகம் ஆயிரம் சொல்லட்டுமே! உனக்கு நீதான் நீதிபதி ஆம் எல்லா பிரச்சினைகளும் முதலில் என்னில் இருந்து ஆரம்பிக்கின்றதா? என்று ஆய்வு செய்தால் இந்த உலகத்தில் ஒரு குறையும் இல்லை இதனை வலியுறு த்தும் அழகான கதை இது.
ஜப்பானில் வாழ்ந்த ஜென் துறவி ஒருவர், எங்கே சென்றாலும் கையில் ஒரு சிறு கண்ணாடியை எடுத்துச் செல்வார். இதைக் கண்ட அவரது சீடர்கள், ‘நம்ம குருநாதருக்கு, தான் பெரிய அழகன் என்று நினப்பு. எப்போ தும், கண்ணாடியில் தன் முகத்தை தானே பார்த்து இரசித்துக் கொண்டு இருக்கிறார்!’ என்று கேலி செய்தனர். சீடர்கள் இப்படி பேசுவது குருநாதருக்கும் தெரியும். ஆனால் அவர் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
ஒருநாள், அந்த ஜென் துறவியைப் பார்க்க ஓர் அரசர் வந்திருந்தார். அவர் ஆசிரமத்தினுள் நுழை ந்தபோது, துறவி வழக்கம்போல் தன் முகத்தைக் கண்ணாடி யில் பார்த்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த அரசருக்கு ஆச்சரியம். ‘ஐயா, நீங்கள் அனைத்தையும் துறந்த முனிவர். ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் துறக்க முடியவில்லையா?’ என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்.
துறவி சிரித்தார். ‘அரசே, எனக்கு ஏதாவது பிரச்சனை என்று வந்தால், அந்தப் பிரச்சனைக்கு யார் காரணம் என்று தெரிந்துகொள்ள, இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே தோன்றும் உருவம்தான் என்னுடைய தலைவலிக்கு முழுமுதல் காரணம் என்று புரிந்துகொள்வேன்! பிறகு, அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முயலும்போது, அதைச் செய்வதற்குப் பொருத்தமான நபர் யார் என்று தேடும்போது, மறுபடியும் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே தோன்றும் உருவம்தான் இந்தத் தலைவலியைத் தீர்க்கக்கூடிய மருந்து என்று புரிந்து கொள்வேன். எப்போதும் இந்தக் கண்ணாடி என்னிடம் இருப்பதால், என்னுடைய நல்லது, கெட்டதுகளுக்கு யார் காரணம் என்கிற உணர்வை நான் மறப்பதில்லை’ என்று பதிலளித்தார் ஜென் துறவி. அன்பர்களே இன்று முதல் கண்ணாடியை பார்க்கும்போதெல்லாம் இந்த கதையை நினைவு கூறுங்கள் நன்றி என்றும் அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக