பின் தொடர்பவர்கள்

புதன், 2 செப்டம்பர், 2015

0244 அறிவின் அளவுகள் ஆளுக்காள் வேறுபடும்!

அறிவின் அளவுகள் ஆளுக்காள் வேறுபடும்!

அன்பர்களே அண்மையில் நான் கமலஹாசன் நடித்த பாபநாசம் படம் பார்த்தேன்.  படித்த பெரிய ஐ  எஸ் பொலிஸ் அதிகாரிகள் கூட கன்டுபிடிக்க முடியாத அள‌வுக்கு கொலைக் கான தடையங்களை வெகு சாமர்த்தியமாக மறைத்த சராசரி மனிதனின் அறிவு பாராட்டப்படவேண்டியதுதான். ஆம் ஒவ்வொருவரின் அறிவுத்திறன் ஒவ்வோரு வகையில் வெளிப்படும். சிலவேளைகளில் மாபெரும் நிபுணன் கூட தனது கணிப்பில் தவறு இழைக்கலாம் இதற்கு ஒரு உதாரணமாக ஒரு கதை சொல்கின்றேன். ஒரு புல்வெளி ஒன்றில், ஏராளமான ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றைக் கண்காணித்துக் கொண்டிருந்த இடையன், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவ்வழியே ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி யவர், ஆடு மேய்ப்பவனை அணுகி, "உங்கள் மந்தையில் இருக்கும் ஆடுகளின் எண்ணிக்கையை நான் சரியாகச் சொன்னால், எனக்கு ஒரு ஆட்டை, பரிசாகத் தருவீர்களா?" என்று கேட்டார். இடையனும் சம்மதித்தார். காரில் வந்தவர், மந்தையை மேலோட்டமாக ஒரு சில நொடிகள் பார்த்தபின், "இங்கு 973 ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன" என்று சொன்னார்.தன் மந்தையில் இருந்த ஆடுகளின் எண்ணி க்கையை இத்தனை துல்லியமாகச் சொன்ன அம்மனிதரை வியப்புடன் பார்த்த ஆயர், அவர் விரும்பியபடியே ஓர் ஆட்டை எடுத்துக்கொள்ளச் சொன்னார். அவரும் ஓர் ஆட்டை எடுத்து க்கொண்டு, தன் காரை நோக்கி நடந்தார். அப்போது இடை யன், அவரைத் தடுத்து நிறுத்தினார். "நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்பதை நான் சரியாகச் சொல்லட்டுமா?" என்று இடையன் கேட்டதும், காரில் வந்தவர், "நிச்சயமாக" என்று பதிலளித்தார். "நீங்கள் நமது நாட்டு அரசில், பொரு ளாதாரத் திட்டங்களை வகுப்பவர். சரிதானே?" என்று இடை யன் சொன்னதும், வந்தவர் பெரிதும் வியந்தார். "அதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?" என்று அவர் கேட்டபோது, இடையன், அவரிடம் "மந்தையிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த என் நாயை இறக்கி வையுங்கள். நான் சொல்கிறேன்" என்று கூறினார்.    இதில் இருந்து நீங்கள் என்ன விளங்கிக் கொள்கி ன்றீர்கள்? ஆட்டின் எண்ணிக்கையை கணக்கிடுவதில் நிபு ணரான பொருளாதார நிபுணருக்கு, ஆட்டுக்கும் நாய்க்கும் வித்யாசம் தெரியாமல் போய்விட்டார். அதுதான் நண்பர்க ளே!   ஒவ்வொருவரின் அறிவுத்திறன் ஒவ்வோரு வகையில் வெளிப்படும்!  மீன்டும்  இன்னொரு கதை துணுக்குடன், அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...