பிறக்கும் போது இருந்த உள்ளம் வந்து விட்டதடா! அன்பர்களே! சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்ற ஆலைய மனி திரைப்படப்பாடல் உங்கள் எல்லோருக்கும் பிடி த்திருக்கும் என்று நினைக்கி ன்றேன். அதில் கடைசி வரி கள் இது.
எறும்புத்தோலை உரித்து ப்பார்க்க யானை வந்ததடா, நான் இதயத்தோலை உரித்துப்பார்க்க ஞானம் வந்ததடா, பிறக்கும் போது இருந்த உள்ளம் இன்று வந்ததடா என்பது தான் அந்த வரிகள்,,, கெட்ட பின்பு ஞானி என்பார்களே அது இதுதான்! வாழ்கையை எப்படித்தான் வாழ்ந்து பார்த்தாலும், வயோதிப காலத்தில் மனிதன் குழந்தை போல எண்ணத்தில் மாறிவிடு கின்றான், குயில் கூவுகின்றது அது அதன் இயல்பு, அது போலவே மனிதர்கள் தன் பிறப்பின் குணங்களை மறுத்து வாழ முயன்றாலும் கடைசியில் பிறவிக்குணம் வந்துவிடு கின்றது. பிறவிக்குணம் என்றவுடன் பலர் தவறாக எடை போடுகின்றனர். பிறவிக் குணம் என்பது என்னைப்பொறு த்தவரை குழந்தைக்குணம் என்பதாகும். வெள்ளை உள்ளம் கொண்ட பிள்ளைகளாக பிறந்து, கொள்ளையடிக்கும் குணம் கொண்டவர்களாக நாம் மாறிப்போகின்றோம். நாம் பிறக்கும் போது இருந்த அந்த குழந்தை குணம் ஏன் இப்போது இல்லை அதற்கான காரனம் தான் என்ன? இந்தக்கதை வாசி யுங்கள் உங்களுக்கே புரியும் கதையை வாசிக்கும் முன்னர் சட்டி சுட்டதடா என்ற பாடலை கேட்டுக்கொண்டே வாசியுb ங்கள் .
புகழ்பெற்ற துறவி ஒருவரிடம் அவருடைய பழைய மாணவர் வந்து, “நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன். அது எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக் கூர்மையையும் தருகின்றது. ஆனால், நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக இருக்கிறேனா என்ற சந்தேகம் இருக்கிறது. சில நாள்களில் நானும் ஒன்றிரண்டு தவறுகளைச் செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும்போது என் உள்ளம் குன்றி, சிறுத்து விடுகிறது!” என்றார். குருநாதர் சிரித்துக்கொண்டே, “ஆக… நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே…? நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!” என்று கூறினார். “அய்யோ.. ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில், தியானம் நின்றுவிட்டால்?” எனப் பதறினார் சீடர். “அதுவும் நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று உனக்கே புரிந்துவிடும், இல்லையா?” என அமைதியாகப் பதிலளித்தார், துறவி. நமது இயல்பு என்ன என்பதை அலசி ஆராய்வோமா? அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக