பின் தொடர்பவர்கள்
சனி, 29 ஆகஸ்ட், 2015
0242 வலது கை செய்வதை இடது கை அறியாது இருப்பதாக
ஒருமுறை, கர்ணன், குளிப்பதற்கு முன், தன் இடது கையில் பிடித்திருந்த ஒரு தங்கக் கிண்ணத்திலிரு ந்து எண்ணெயை வலது கையில் ஊற்றி, உடலெங்கும் தேய்த்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் ஓர் அந்தணர் அவரிடம் வந்து, யாசகம் கேட்டார். உடனே, கர்ணன், தன் இடது கையால், தங்கக் கிண்ணத்தை அந்தணர்க்குத் தர்மமாகக் கொடுத்தார். அந்தணர் உடனே, "கர்ணா, இடது கையால் தர்மம் கொடுத்தால், கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் தீங்குவரும் என்று நமது சாஸ்திரம் சொல்கிறது. எனவே, கையைக் கழுவிவிட்டு, உன் வலது கையால் தர்மம் கொடு" என்று கேட்டுக்கொண்டார். கர்ணன் ஒரு புன்சிரிப்புடன், "அந்தணரே, அந்த சாஸ்திரம் எனக்கும் தெரியும். ஆனால், நான் இடது கையிலிருந்து வலது கைக்கு கிண்ணத்தை மாற்றுவதற்குள், என் மனம் மாறிவிடலாம் அல்லவா? எனவேதான், தர்மத்தை உடனே செய்தேன்" என்று பதில் சொன்னார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பேரழகும் பெருஞ்செல்வமும்
பேரழகும் பெருஞ்செல்வமும் பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக