பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 17 ஜூலை, 2015

0216 கடவுள் செய்யாத உதவி

 கடவுள் செய்யாத உதவி
ஒருநாள் ஒருவர், தன் தோட் டத்தி ல் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நக ரத்தை நோ க்கிச் சென்று கொண்டிரு ந்தார். அப்போது, சாலையின் ஒரு திரு ப்பத்தில் வண்டியின் ஒரு சக்க ரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய் ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவர் மனமுருக வேண்டினார். கடவுள் உதவி க்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறை யென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும் அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை. கடைசியில், பள்ளத்தில் விழு ந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தார். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவர் நினைத்திருந்த அச்சக்க ரம் பள்ளத்திலிருந்து எளிதாக எழுந்து விட்டது. தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கர் அச்சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது அப்போதுதான் அவருக்குத் தெரி யவந்தது. வழிப்போக்கரை வணங்கிய அவர், "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீர் செய்து விட்டீர்!" என் றார். அதற்கு அந்த வழிப்போக்கர் "கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திரு ந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தா ல்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவ ருக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு தன் வழி யே நடந்தார்.அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...