பின் தொடர்பவர்கள்

சனி, 4 ஜூலை, 2015

0202 வஞ்சகப்புகழ்ச்சி அழிவைத்தரும்!

 வஞ்சகப்புகழ்ச்சி  அழிவைத்தரும்!
நண்பர்களே! நமது தவறுகளை நட்போடு நல்ல அன்போடு சுட்டி க்காட்டும் போது நாம் அவர்கள் மீது, எரிச்சல் படுகின்றோம் அல் லது கோபபடுகின்றோம். நம்மீது அக்கறை இல்லாமல், நமது அழிவை விரும்புகின்ற வர்களின் வஞ்சகப்புகழ்ச்சியை நாமுளமார விரும்பு கின்றோம் அதன் பலாபலனை இக்கதை மூலமாக உணருங்கள்.தன் முன்னால் வந்து நின்ற ஓநாயைக் கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின் றது முள்ளம்பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், ‘பயப்படாதே முள்ளம்பன்றி, உன் அழகை இரசிக்கத் தான் வந்திருக்கேன்’ என்றது. ‘என்னது? நான் அழ கா?’ என முள்ளம்பன்றி கேட்க, ‘ஆமாம். நீ நல்ல அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முள்ளுதான் உன் அழகைக் கெடுக்குது’, என்றது ஓநாய்.‘ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது’ என்றது முள்ள ம்பன்றி. ‘உண்மைதான். ஆனா, அதை எடுத்துட் டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன் னைக் கொல்லனும்னு மனசே வராது’. ஓநாயின் இந்தப் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம் பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது. ‘இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா?’ என்று கேட்டது. ‘அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியா கவும் இருக்கு’, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய். அன்புடன் பேசாலைதாஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...