பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 5 ஜூலை, 2015

0203 நிறைவேறாத ஜெபம்

 நிறைவேறாத ஜெபம்

நாம் மிக அதிகமாக மன்றாடுகின் றோம். நாம் எவ்வளவுதான் நம்பிக் கையோடும், விசுவா சத்தோடும் மன்றாடினலும், நமது எல்லா செபங்களும் நிறை வேற்றப்படுவதில்லை, நம க்கு எது நன்மையோ அதனையே இறைவன் நிறவேற்றுவார். கதையை கேளுங்கள் அன்பர்களே! அந்த மனிதர் கடவுள் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டவர். என்ன நேர்ந்தா லும் கடவுளிடம்தான் சொல்வார். அவர் ஆசை ஆசையாக ஒரு மானை வளர்த்து வந்தார். அந்த மான் ஒருநாள் காணாமல் போய்விட்டது. உடனடி யாக கடவுளிடம் உரிமையோடு முறையிட்டார் அந்தப் பக்தர். கடவுளே, எனது செல்ல மானைக் காணவில்லை, அதற்கு காரணம் யாரோ, அவர் என் கண் முன்னால் வந்து நிற்க வேண்டும், அந்த ஆளு க்கு என் கையாலேயே தண்டனை கொடுக்க வேண் டும் என்று மன்றாடினார். கடவுள் சற்று தயக்கம் காட்டினார். பக்தா, அது வேண்டாமே என்று சொல் லிப் பார்த்தார். பக்தர் கடவுளை விடுவதாக இல்லை. நீர் கட்டாயம் அந்த ஆளை என்முன் நிறுத்த வேண் டும், இது உனது பக்தனின் வேண்டுகோள், இதனை மறுக்காமல் நிறைவேற்ற வேண்டியது உமது கடமை என்றார் பக்தர். கடவுளும் பக்தரிடம், நன் றாக யோசித்துக் கேள் என்றார். நான் நன்றாக சிந் தனை செய்துதான் கேட்கிறேன் என்றார் பக்தர். சரி, வேறு வழியில்லை, உனது வேண்டுதலை நிறைவே ற்றுகிறேன், உனது மான் காணாமல் போகக் காரண மானவர் இதோ உன் எதிரில் என்றார் கடவுள். பக்த ரின் எதிரில் ஒரு சிங்கம் வந்து நின்றது. அதைப்பார் த்த பக்தர், ஐயோ, கடவுளே என்னைக் காப்பாத்து, தெரியாமல் கேட்டுவிட்டேன், என்னை மன்னித்து விடு என்று அலறினார். நம் வேண்டுதல் நிறைவே றாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் அன்பர்களே! உங்கள் சிந்தனைகளில் மீண்டும் உலாவ வருவேன். அன்புடன் தேவதாஸ் *பேசாலைதாஸ்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...