பின் தொடர்பவர்கள்

வியாழன், 2 ஜூலை, 2015

0201 சிறிவர்களுக்கு செய்தது எனக்கே செய்தீர்கள்!

சிறிவர்களுக்கு செய்தது எனக்கே செய்தீர்கள்!
நல்ல மதிப்பு நம்மை சிலவேளைகளில் பெரும் ஆப த்தில் இருந்து காப்பாற்றும். நம்மில் அகங்கார ஆணவ எண்ணம் வேரூ ன்றி இருப்பதால், அதிகார போதை தலைக்கே றுகி ன்றது. குறிப்பாக ஆசிய நாட்டில் ஐரோப்பியர் விதைத்த இந்த துரைத்தனம் இன்றும் நிலுவையில் உள்ளது. உலக மகா யுத்தங்களை கண்ட ஐரோப்பியர் இன்று மாறிவிட்டனர் ஆனால் நாம் மட்டும் மாறாமல் இன்னும் அப்படியே பயணிக்கி ன்றோம். . வீடுகளில் காவலுக்கு வைத்திருப்பவர்களை, வேலைக்கு வைத்திருக்கும் சிறுவர் சிறுமியரை மனிதனாக மதிக்காதை நான் நேரடியா கவே கண்டு வேதனைப்பட்டிருக்கின்றேன். சிறு துரும்பும் பல்லுக்குத்த உத வும் என்பார்களே! ஏன் பலரின் உயிர்களே காப்பற்றப்படிருக்கின்றன. எப்படி இதோ கதையை வாசியுங்கள் .இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தறுவாயில், இறைச்சி பதப்படுத்தும் குளிர்சாதன அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது, எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொ ண்டுவிட்டது. உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை. மேலும், பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்ட னர்…இன்னும் சிறிது நேரத்தில் குளிரில் உறைந்து இறக்கப் போகிறோம் என்று எண்ணி பயம் கொண்டார் அவர். அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவராக வெளியே ஓடி வந்தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார். மகிழ்ச்சியில் அவரைக் கட்டி தழுவிக் கொ ண்டார். அவரிடம் “நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?” என்று கேட்டார். “சார். நான் இங்க 10 வருடமாக வேலை செய்றேன், நீங்க ஒருத்தர் மட்டும்தான் என் னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கம் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர். இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க. ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை. உடனே சந்தே கம் வந்து, உள்ள வந்து ஒவ்வொரு இடமாத் தேடினேன்…அப்போதான் உங்க ளைக் கண்டு பிடிச்சேன் …” என்றார். ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...