பின் தொடர்பவர்கள்

புதன், 1 ஜூலை, 2015

0200 எது நமக்குச்சொந்தம்?

எது நமக்குச்சொந்தம்?
அன்பர்களே! சொந்தங்கொண்டாடு வது, உரிமை கோருவது, அதற்காக போராடுவது மனித வாழ்வில் இய ல்பானது. பொருட்களை, பெரிய‌ வீட்டை, செல்வத்தை, அழகான மனைவியை, நல்ல பிள்ளைகளை பெறுவதற்காக ஆசைப்படுகின்றோம் அது கிடைத்தவுடன் சந்தோச ப்படுகின்றோம். நமக்கு கிடைத்தததெல்லாம் நமக்கு சொந்தம் என்று எண்ணுகின்றோம். அது தவறு அன் பர்களே! அப்படியானல் நமக்கு சொந்தமானது எது என்று கேட்கின்றீர்களா? அதற்குத்தான் இந்த கதை! ஒரு மனிதன் திடீரென்று இறந்தான். கடவுள் அவ னை அணுகிவருவதாக கண்டான். அதுவும் கையில் ஒரு சிறு பெட்டியோடு வருவதாக கண்டான். கட வுள் சொன்னார் " வா மகனே வா! உன் நேரம் வந்து விட்டது" என்று .அழைத்தார். கடவுளிடம் வந்துவிட்டாலே ஆனந்தம் தானே! ஆனால் அந்த பெட்டியை பற்றிய ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. அந்தபெட்டி யாருடையது என்று என்று கேட்டான் கடவுளிடம், அது உன்னுடையது என்றார் கடவுள். அதற்குள் என்ன இருக்கின்றது என்று ஆவலோடு கேட்டான். கடவுள் அதற்குள் இருப்பது உன்னுடை யவை என்றார் கடவுள். என்னுடையதா? ஆவல் அவனுக்கு அதிகமாகியது. என்னுடையது என்றால் என் பணமா? என்றான் அவன். இல்லை உன் பணம் உலகத்திற்கு சொந்தமானது என்றார் கடவுள். எனது நினைவுகளா? கேட்கிறான் அவன். இல்லை உன் நினைவு, காலத்திற்கு சொந்தமானது கடவுளின் பதில். எனது மனைவி பிள்ளைகள்? அவன் கேள்வி தொடர்கின்றது. இல்லை இல்லை அது உன் இதய த்துக்கு சொந்தமானது கடவுள் சொல்கின்றார். பின்னே என் உடலா? அவன் கேட்கின்றான். உன் உடல் மண்ணுக்கு சொந்தமானது என்கின்றார் கட வுள் . ஓ! என் ஆன்மாவாக இருக்கவேண்டும் அவன் சொல்கின்றான். இல்லை மகனே உன் ஆன்மா என க்கு சொந்தமானது கடவுள் சொல்கின்றார். குழம்பிப் போன மனிதன் கடவுளின் கையில் இருந்த பெட் டியை வாங்கி திறக்கின்றான். அங்கு ஒன்றுமே இல்லை. கவலை கொண்ட மனிதன் கதறினான். எனக்கென்று எதுவுமே இல்லையா? கடவுள் சொன் னார் ஆம் உனக்குச்சொந்தமாது எதுவும் இல்லை என்று. அப்படியானல் எதுதான் எனக்கு சொந்தம்? மனிதன் கேட்கின்றான். நீ பூமியில் வாழ்ந்த அந்த காலம் மட்டுமே உனக்கு சொந்தம் என்று பதில் சொன்னார் கடவுள். ஆம் அன்பர்களே வாழும் இந்த கணமே உண்மை அதுவே நமக்கு சொந்தம், இந்த காலத்தில் நாம் தேடும் உண்மையான சந்தோசம், அன்புறவு, நல்ல மதிப்பு இவைகள் தான் நம்மோடு இறுதிவரை பயணிக்கப்போகின்றன.
                                                           பயணம் போகும் பாதையில்  பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...