பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0176 உண்மை என்றால் என்ன?



உண்மை என்றால் என்ன?


அன்பர்களே உண்மையா? உண்மை என்றால் என்ன? என்று ஆச்சரியத்தில் இயேசுவிடம் கேட்டான் பிலாத்து என்கின்ற உரோமை ஆளுணர். உண்மை என்றால் என்ன என்று தத்துவவாதிகளுக்கிடையேயும் குழப்பங்கள் தான், உண்மையையை அழகாக விளக்கும் ஒரு சிறிய கதை இது! ஒரு தடவை முல்லா நசுருதீன் அவர்கள், சில பொருட்கள் வாங்குவதற்காகச் சந்தைக்குச் சென்றார். அங்கே ஓரிடத்தில் பத்துப் பதினைந்து பேர் கும்பலாகக் கூடி எதைப் பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர். இங்கே என்ன நடக்கிறது? என்று முல்லா விசாரித்தார். நல்ல சமயத்தில் வந்தீர் முல்லா. நாங்கள் ஒரு விடயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களில் யாருக்குமே எங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறீரா? என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார். உங்கள் சந்தேகம் என்ன? என்று முல்லா கேட்டார். உண்மை என்று எல்லாரும் சிறப்பாகப் பேசுகிறார்களே, அந்த உண்மை என்பது என்ன? என்று அவர் வினா எழுப்பினார். முல்லா சப்தமாகச் சிரித்தார், இந்தச் சின்ன விடயம் உங்களுக்கு விளங்கவில்லையா? உலகத்தில் எந்த ஒரு மனிதரும் சிந்திக்கவோ, பேசவோ, செயல்படவோ விரும்பாத ஒரு வரட்டுத் தத்துவம்தான் உண்மை என்று கூறிவிட்டு முல்லா அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...