பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0174 உள்ளத்தில் உள்ள உணர்வுகள்

உள்ளத்தில் உள்ள உணர்வுகள் பேசாலைதாஸ் 
அன்பர்களே! நமது உள்ளத்தின் உண ர்வுகள், நமது உடலின் வெளிப்பாடாக தோற்றம் அளிக் கின்றது. நமது உள்ளத்தில் உள்ள உணர்வுகள், நம்மை யார் என்று பிரதி பண்ணுகி ன்றது. கல் என்றால் அது கல்தான் வெறும் சிலை என்றால் வெறும் சிலை தான், எல்லாமே நம் எண் ணத்தில் இருக்கின்ற உணர்வுக ளின் பிரதி பிம்பங்களே, இறை வன் என்றால் அவன் பிறந்தமேனியாக இரு ந்தாலும் அவன் இறை வனாகவே காட்சி அளிப்பான். மாமல்லபுரத்து அழுகு சிற்பங் களை பாரு ங்கள்,  கயூரஹா இந்து ஆலையத்தின் கற்சிலைகளை பாருங்கள். அவை யாவும் பாலியல் உறவின் அம்சங்களை சித்த ரிக்கின்றன. உடல் உறவை விபரிக்கும் சிற்ப எழில்கள் கலையம்ச த்தை எடுத்துக்காட்டுகின்றன.
                                                அழகான உருண்டு திரண்ட பெண் களின் மார்பங்கள், கலையின் உன்ணதத்தை காட் டுகி ன்றதே தவிர, காம கிளர்ச்சியை ஏற்படுத்துவதி ல்லை. காமம் இன்பத்தின் திறவுகோல், இல்லறத்தின் இனிமை என்று கூட சொல்லலாம், காமமே உயிரினங்களின் தோற்றுவாயாக இருப்பதினால், காமம் கடவுளின் இன்னொரு நாமம் என்று நான் துணிந்து சொல்வேன். காமத்தை சரியாக புரிந்து கொண்டால் விபரிதமே இல்லை என்பேன். நமது எண்ணங்களில் தொங்கி நிற்பது காமம், இதை தெளிவாய்ச்சொல்லும் ஒரு கதை இது.

          மகா பாரதத்தை எழுதியதோடு வேதங்களைத் தொகுத்தவர் வியாச முனிவர் அவருடைய மகன் சுகர். ஒரு பிரம்ம ஞானி. ஆடை களையே சுமை என்று கருதி அவற்றைத் தவிர்த்தவர்.ஒரு நாள் அவர் ஆற்றங்கரையோரம் சென்று கொண்டிருந் தார்.ஆற்றில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். இதைக் கவனித்த வியா சர் தன் மகன் உடையின்றி செல்வதால் இளம் பெண்கள் சங்கட ப்படுவார் களே என்று எண்ணி மகனை வேறு பாதைக்குத் திருப்ப விரைந்து சென்றார்.ஆனால் சுகர் பெண்க ளைக் கடந்து செல்லும் போது பெண்கள் பகுதியில் எந்த வித சலசலப்பும் இல்லை.

                                           ஆனால் வியாசர் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது பெ ண்க ள் சட்டென்று உடைகளை இழுத்துப் போ ர்த்துக் கொண்டு நின்றனர்.வியாசருக்கு ஆச்சரியம். தன மகன் உடையில்லாமல் போவதைப் பொருட்படுத் தாத பெண்கள் தான் முனிவர் என்பது தெரிந்தும் பெண்களிடையே ஒரு பதற்றம் ஏன் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினார். 

                                             அப் பெண்களிடம் அவர் கேட்டபோது அவர் கள் சொன் னார்கள்,''தங்கள் மகனைப் பார்க்கும்போது அவர் மனதில் தான் ஒரு ஆண் என்ற உணர்வு கூட இருப்பதாகத் தெரிய வில்லை.எனவே எங்களுக்கு அவரைக் கண்டபோது மனதில் எந்த சஞ்சலமும் இல்லை. எங்களுக்கும் நாங்கள் பெண்கள் என்ற உண ர்வு அந்நேரம் இல்லை.உங்கள் மனதில் நீங்கள் ஒரு ஆண் என்ற உணர்வு அழுத்தமாக இருக்கிறது. அத னால் எங்களுக்கும் உங்க ளைப் பார்த்த உடன் நாங் கள் பெண்கள் என்ற உணர்வு வந்து விட் டதால் எங் களுக்குள் ஒரு பதட்டம் ஏற்பட்டு நாங்கள் உடை களை சரி செய்தோம்.''தன் மகன் தன்னையே மிஞ்சி விட்டார் என்பதை வியாசர் புரிந்து கொண்டார். அன்புடன் பேசாலைதாஸ் 
Posted by Mathy Malar at 01:39 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...