எது எப்படி உள்ளதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்! பேசாலைதாஸ்
அன்பர்களே நாம் நினைத்தவை நடப்பதில்லை என்பதற்காக வாழ்க்கை வெறும் அர்த்தமற்றது எண்ணுவது தவறு. கிடைப்பது எதுவோ, இருப்பது எதுவோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டால் வாழ்வில் எந்த பிரச்சனைகளும் இருக்காது. எல்லோரும் நம்மை புரிந்து கொள்வார் கள் என்று இல்லை. வாழ்வில் போகுமிடமெல்லாம் பூங்காவனம் இருக்கும் என்று சொல்வத்ற்கு இல்லை. செல்லும் பாதை இருட்டாக இருக்கலாம், பாலைவனமாக இருக்கலாம் எதுவந்தாலும் நம்மால் மற்றவர்களை விட சிறப்பாக செய்யமுடியும் என்றால் துணிவோடு இறங்கி செயல்படு ங்கள். செயல்களின் சிறப்பைக்கண்டு மக்கள் புரிந்து கொள்வார்கள். நன்மை செய்யப்புறப்பட் டால் வாழ்வில் வரும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்கு முதலில் எது எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள்ள பழகவேண்டும், வாழ்வில் எல்லாமே அனுபவம்தான்!
ஒருமுறை ஞானி ஒருவர் தன் சீடர்களுடன் பாலைவனத்தின் ஊடாக வேறு ஒரு ஊருக்கு பயணம் செய்தார். பயணம் மிக நீண்ட தூராம். நாள் முழுவதும் நடந்தார்கள். போய்ச்சேரவேண்டிய இடமும் வந்தபாடில்லை. மாலை நேரமாகிவிட்டது. ஞானியை பின் தொடர்ந்த சீடர்களுக்கோ பசி தாகம் சோர்வு. மாலையானதும். ஒரு மரத்தடியில் எல்லோருமே தங்கிவிட்டார்கள். ஞானி வழமை போல தூங்குவதற்கு முன் ஜெபித்தார். ஜெபிக்கும் போது நன்றி சொல்லி செபிப்பது ஞானியின் வழக்கம். அன்றும் ஞானி செபித்தார். இறைவா இன்று நீர் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி என்று செபித்தார். இதைகேட்டுக்கொண்டு இருந்த சீடன் ஒருவன், "ஆசானே இன்று இறைவன் நம்மக்கு என்ன தந்தார்? நாம் அவருக்கு, நன்றி சொல்வதற்கு என்று" சலிப்போடு கேட்டான். அதற்கு ஞானி சொன்னார், "ஏன் தரவில்லை?. இன்று நல்ல பசியை தந்தார், தாகத்தை தந்தார், களைப்பை தந்தார். சோர்வை தந்தார், இப்போது நல்ல நித்திரையும் தரப்போகின்றார். இன்று நிறையவே தந்திருக்கின்றார். இவை எல்லாம் வாழ்வின் அனுபவம் இல்லையா?" என்றார் ஞானி. அன்பர்களே இன்பம் சந்தோசம் வெற்றி மகிழ்ச்சி இவை மட்டும்தானா வாழ்வின் அனுபவம்? உங்கள் சிந்தனையில் சவாரி செய்ய அடுத்த ஒரு கதையோடு சந்திக்கின்றேன். அன்பின் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக