பின் தொடர்பவர்கள்

சனி, 27 ஜூன், 2015

0185 ஒட்டகத்தை கட்டிவையுங்கள்!

 ஒட்டகத்தை கட்டிவையுங்கள்!
எல்லாம் அவன் செயல். அவன் இன்றி அணுவும் அசையாது என்று வாதிடும் பலரை நாம் சந்தித்திரு க்கின்றோம். நடப்ப துதான் நடக்கும் என்று வாழ்நா ளில் எதுவித முயற்ச்சியும் செய்யாமல் சும்மா இருப்பது தவறான செயல். இது கடவுளை சோதிக் கும் செயலுக்கு ஒப்பா கும். கடமையை செய் பலனை எதிர்பாராதே என்கின்றது கீதை!
நமக்குரிய கடமைகளை நாம் செய்யவேண்டும் அதன் பாலப லன்களை நமக்கு தருவது இறைவன் ஒருவனே! நமது முயற்ச்சி இன்மைக்கு கடவுளை காரன மாக காட்டமுடியாது. பாலைவனத்தில் ஞானி ஒருவர் இருந்தார். அவர் பெரும் புகழ் பெற்றவர். தூர இடங்க ளில் இருந்து அந்த ஞானியை தேடி மக்கள் வருவதுண்டு. ஒருமுறை. அந்த ஞானியை பார்க்க ஒருவன் தன் ஒட்டகத்தில் அவர் இருக்கும் இடத்திற்கு வந்தார். எப்படி வந்தீர் என்று அவரிடம் ஞானி கேட் டார் அவர் ஒட்டகத்தின் மீது வந்தேன் என்றார். ஒட்டகம் எங்கே என்றார். கூடா ரத்திற்கு வெளியே நிற்கின்றது என்ரார். அதனை கட்டிப்போ ட்டிரா? என்று ஞானி கேட்டார். இல்லை என்று பதில் வந்தது. உடனே ஞானி கோபம் கொண்டு, முட்டாளே முதலில் உன் ஒட்டகத்தை கட்டிப்போடு என்றார் ஞானி. அதற்கு வந்தவர் எனக்கு இறைவன் மீது நம்பிக்கை உண்டு அவர் பாதுகாத்துக் கொள்வார் என்றான். ஞானியோ முதலில் நீ ஒட்டகத்தை கட்டிவை, இறைவ னுக்கு நிறைய வேலை உண்டு உன் ஒட்டகத்தை பாதுகாக்க அவருக்கு நேரம் கிடையாது என்று கூறினார். நம்மால் முடிந்தவைகளை நாம் கட்டாயம் செய்யவேண்டும் முடியாத செயலை அவரிடம் விட்டுவிடலாம் தப்பே கிடையாது.ஆண்ட‌வனிடம் நம்பிக்கை வையுங்கள் ஆனால் ஒட்டகத்தை கட்டிவையுங்கள்அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே
                                                                                                                                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...