பின் தொடர்பவர்கள்

சனி, 27 ஜூன், 2015

0184 இறைவன் செயல்!

இறைவன் செயல்!
எது நடந்தாலும் அது இறைவன் செயல் என்று நம் பும் ஒருவகை நம்பிக்கையை பலதடவை நாம் பார்த்திருக்கின்றோம். இறைவ னின் சித்தப்படியே எதுவும் நட க்கும் என்று நம்பும் மனிதர்கள் ஒரு பக்கம். தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்ச்சி மெய்வரு ந்த கூலி தரும் என்று நம்பும் நடைமுறை மனிதர்களையும் நாம் பார்க்கின்றோம். அதிகமாக நான் சொன்ன இரண்டாம் வகை மனிதர்கள் இவ்வுலகில் வெற்றி யாளராக, சாதனை மனிதர்களாக வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது இன்னொரு உண்மை! இறை ஞானத்தோடு கூடிய சாதனைகள், வெற்றிகள் உண்மையில் இறைவ னின் சித்தப்படிதான் நடக்கி ன்றன. இறைவனின் சித்தப்படி நடக்கும் நிகழும் காரியங்கள் பரிபூரணமாக இருக்கும். நமது கடுமையான முற்ச்சியால் வெற்றி களை ,சாதனைகளை நாம் குவிக்கலாம் ஆனால் உண்மையான மகிழ்வு, நிறைவு இருக்குமா? என்பது கேள்விக்குறிதான். ஒருவன் உலகம் முழுவதை யும் தனதாக்கினாலும்,,, என்று பைபிள் சொல்கி ன்றது தனதாக்க முடியாது என்று சொல்லவில்லை. வெல்வதற்கு இனி என்ன இருக்கின்றது என்று கேட்ட மாகா அலெக்சாண்டர் இறுதியில் அமைதி இன்றி இறந்தான் என்று வரலாறு சொல்கின்றது. ஆக மொத்தத்தில் நான் சொல்லவருவது இறை சித்தப்படி வாழ்வதே சாலப்பொருந்தும் என்பதுதான். துறவி ஒருவர் தன‌து ஆடைகளை ஆற்றங்கரையின் புதருக்கடியில் வைத்துவிட்டு நீராடச்சென் றார். அப்போது அந்த வழியே வந்த ஒரு வழிப்போக்கன் அந்த ஆடைகளை கண்டு, யாரோ ஒருவர் இந்த ஆடைகளை வைத்துவிட்டு சென்று ள்ளார் அவர் வரும்வரை அதை பாதுகாப்போம் என்று காவல்கா த்தான். துறவி ஆடைகளை எடுக்க வந்தார் அப்போது அந்த வழி ப்போக்கன், ஆடைகளை இப்படியா? பாது காப்பில்லாமல் விட்டு செல்வ‌து என்று துறவியிடம் சொன்னான். அதற்கு அந்த துறவி ஓ! நான் என் ஆடைகளை ஆண்டவன் பொறுப்பில் விட்டுச்சென் றேன் அவர் அதனை உன் பொறுப்பில் விட்டுவிட்டார் என்று சாதாரண மாக சொன்னார். நடப்பதெல்லாம் அவன்வழி என்று நாமும் நடப்போம்!
                                                                             வழித்துணையாக பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...