பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 28 ஜூன், 2015

0186 தெரியும் ஆனால் தெரியாது.......

தெரியும் ஆனால் தெரியாது.......
வரும் ஆனால் வாராது, இது தற் கால சினிமா உலகில் சர்வசாதா ரணமாக சொல்லப்படும் ஒரு நகை ச்சுவை! இந்த நகைச்சுவையைப் போல கருத்தாழம் மிக்க ஒரு கதை உண்டு. முல்லா என்ற நகைச்சுவை  ஞானியின் கதைகளை நான் பலதடவைகள் கையாண்டுள்ளேன். இதோ இன்னு மொரு கதை! ஒருமுறை முல்லா அவர்கள் ஜன சந்தடிமிக்க சந்தை ஒன்றின் நடுவே இருந்த மேடை மீது ஏறினார். மக்கள் எல்லோரும் முல்லா ஏதோ சொல்லப்போகின்றார் என்று கூடிவிட்டனர். அப் போது மக்கள் கூட்டத்தை நோக்கி " நான் என்ன சொல்லப்போகின்றேன் என்று தெரியுமா" என்று கேட்டார். அதற்கு மக்கள் கூட்டம், தெரியாது என்று, பதில் சொன்னார்கள். முல்லா தெரியாது என்று சொல்பவர்களுக்கு சொல்லிப்பிரியோசனம் இல்லை என்று சொல்லி மேடையை விட்டு இறங்கி னார். உடனே மக்கள் கூட்டம் தெரியும் தெரியும் என்று சொன்னார்கள். முல்லா தெரியும் என்று சொல்பவர்களுக்கு நான் ஏன் சொல்லவேண்டும்? என்று முல்லா சொன்னார். கூட்டத்தில் இருந்த ஒரு சிலர் தைரியமாக , சிலருக்கு தெரியும், சிலருக்கு தெரியாது என்று சொன்னார்கள். முல்லா மிகப்பவ் வியமாக, நல்லது நல்லது! தெரிந்தவர்கள், தெரியா தவர்களுக்கு சொல்லுங்கோ என்று சொல்லி நைசாக மேடையை விட்டு விலகினார். அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...