பின் தொடர்பவர்கள்

சனி, 27 ஜூன், 2015

0182 அகத்தில் அரசனாக இரு!

அகத்தில் அரசனாக இரு!

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து! என்று எல்லோரும் கேள்விப்படி ருப்பீர்கள் சிலவேளைகளில் நாமும் கூட, ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என் றால் நம்மை நாம் தேற்றிக்கொள்வதற் காக, இதை ஞாபகப்படுத்தியிருக்கலாம்.
மாபெரும் மனிதர்களின் கதைகளை நாம் கேள்விப்படும் போது, அல்லது பார்க்கும் போது, அவர்கள் திருப்தியாக, சந்தோசமாக வாழ்வதாக நாம் தவறாக மதிப் பிடுகின்றோம். அதிகமாக தெருவோரம் பிச்சை எடுக்கும் மனிதருக்கு கிடைக்கும் திருப்தி, அம்பானி, பில்கேட் போன்ற உலகப்பெரும் பணக்கார முதலைகளுக்கு கிடைப்பதில்லை. ஒரு ஊரிலே ஒரு முனிவர் இருந்தார். அவரைப்பற்றி அவ்வூர் மக்கள் எதுவும் பொருட்படுத்தவில்லை. ஒருவரை ப்பற்றி நாம் அறியாதவரை, அவரைப்பற்றி உயர்வான,அல்லது தாழ்வான எண்ணங்கள் வந்துவிடுவதில்லை. ஆனால் அந்த முனிவரிடம் யார் யரோ வந்து போகின்றார்கள் என்பது மட்டும் அந்த ஊர்மக்களுக்கு தெரியும், ஒரு முறை முகலாய பேரரசன் மாறுவேடத்தில் அந்த முனிவரிடம், வந்து போனதாக கேள்விப்படுகின்றார்கள். ஊரே திரண்டு வந்து. முகலாய பேரரச ரிடம், தங்களுக்கு ஒரு குளம் கட்டி தரும்படி, முனிவரிடம் கேட்டார்கள். முனிவரும் சரியென்று ஒத்துக்கொண்டு. மன்னரை பார்ப்பதாற்காக தலை நகர் நோக்கி சென்றார். முனிவரை கண்டதும், வாயில் காவலாளி அவரை அடையாளம் கண்டு கொண்டான். பேரரசரை பார்க்கவேன்டும் என்று முனி வர் அவனிடம் சொல்கின்றார்.. பேரரசர் மாடியில் தொழுது கொண்டிருப்ப தாக அவன் சொல்கின்றான். முனிவர் நேராக மாடிக்கு சென்று. பேரரசர் தொழுவதை பின் நின்று அவதானித்தார். பேரரசனோ இறைவா எனது படை பலத்தை இன்னூம் பெருக்கும், எனது கஜானாவை இன்னும் தங்கங் களால் நிரப்பும் என்று வேண்டிக்கொண்டிருந்தார். முனிவரோ மெல்ல மாடியை விட்டு இறங்கிக்கொண்டிருந்தார். பேரரசன் இதனைக்கண்டு, முனி வரே ஏது இவ்வளவு தூரம்? வந்ததும் ஒன்றும் சொல்லாமல் போகின்ரீர் களே! என்று கேட்டான். அதற்கு முனிவரோ மன்னர் மன்னனே! நான் உன் னிடம் சிறு உதவிக்காக வந்தேன், ஆனால் உனக்கே பெரும் தேவைகள் இருப்பதாக, இறைவனை வேண்டிக்கொண்டிருந்தாய், ஒரு ஏழையிடம் நான் யாசகம் கெட்பது தர்மமல்ல என்று சொன்னார் முனிவர். பேரரசன் தன் பேராசையை நினைத்து வெட்கப்பட்டான். அன்பர்களே! அகிலத்தில் அரச னாய் இருப்பது பெரியவிடயம் இல்லை ஆனால் அகத்தில் அரசனாய் இருப்பது முடியாத காரியம். நமக்கு நாமே அரசானாக இருந்துவிட்டால் கவலைகள் நமக்கு ஏது? என்ற கேள்வியோடு பேசாலைதாஸின் எண்ணங்கள் நகர்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...