பின் தொடர்பவர்கள்

சனி, 27 ஜூன், 2015

0183 தற்பெருமை

தற்பெருமை

அன்பர்களே இன்றைய உலகிலே பல போதகர்களை மேடை வழி யே பார்க் கின்றோம். இயேசு வின் நாமத்தினால் பல அற்புத ங்களை செய்கின்றோம் என்று சில கிறிஸ்தவ பதிரிமார்க ளும், நித்தியானந்தா மற்றும் பல பாபாக்கள் பிரமாண்டமான மேடை களில் தோன்றி பல அற்பு தங்களை நிகழ்த்தி விட்டு, தங்க ளுக்கு தாங்களே விளம்பரங்களை உண்டாக்கி மக்கள் கூட்டத்தை ஈக்கின்றார்கள். மக்களும் அவர்கள் பின்னாலே ஓடுகின்றார்கள். இந்த அற்புதங்கள், சித்து விளையாடுக் களுக்குப்பின்னால் சுயவி ளம்பரம் ஒட்டிக்கொள்கின்றது என்பதை பலரும் உணர மறுக்கி ன்றார்கள். உண்மையில் இவர்களுக்கு மக்களை நல்வழிப்படுத் தும் உன்னத நோக்கம் இருப்பதாக தெரியவில்லை  ஒரு காலத்தில் ஞானி ஒருவர் பல அற்புதங்களை நிகழ்த்திவிட்டு ஒன்றும் செய்யாதவர் போல இருந்துவிடுவாரம். அவரது நோக்கம் மக்கள் இறைவனை உணர்ந்து கொண் டாலே போதும் என்பதே! ஒரு முறை பாலைவன த்தில் இவர் அற்புதங்கள் நிறைந்த போதனை கூட்டத்தை நடத்தி க்கொண்டிருந்தார். திடீரென்று இடி மின்னலோடு வானத்தில் பெரிய தோற்றம் உண்டாகியது மக்களோ ஐயோ இது பெரிய முதலை என்று சொல்லி, பதறி அடித்து ஓடினார்கள். அற்புதம் நடத்திக்கொ ண்டிருந்த ஞானியும் கூடவே மக்கள் பின்னால் ஓடினார். பல நாட்கள் கழிந்து ஒரு நாள் சீடன் ஒருவன் அந்த ஞானியிடம், அன்று பாலைவ னத்தில் தோன்றியது என்ன என்று கேட்டான். அதற்கு ஞானி, அது ஒன்றுமி ல்லை பாலவனத்தில் அடிக்கடி தோன்றும் ம‌ணல் புயலின் வடிவம் என்றார். அதற்கு சீடன் பின்னே நீங்கள் ஏன் பயந்து ஓடினீர்கள் என்று கேட்டான். எல் லோரும் ஓடும் போது நான் மட்டும் ஓடாவிட்டால் என்னை தற்பெருமை காரன் தலைக்கணம் கொண்டவன் என்று மக்கள் எண்ணிவிடுவார்கள் என்று அவர் சொன்னார். சாதாரணமக்களுள் நானும் ஒரு மனிதன் என்று எண்ணும் இன்றைய அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள், பெரும் பணக்கரர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?
                                                          பேசாலைதாஸின் தேடல் தொடர்கின்றது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...