பின் தொடர்பவர்கள்

சனி, 27 ஜூன், 2015

0181 வாழ்கைப்படகு

வாழ்கைப்படகு
சில நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மதுபாண கடை யில் மது அருந்தினார்கள். போதை தலைக்கேறவே எல்லோரும் சேர்ந்து ஆற்ற ங்கரையோரம் போய், அங்கிருக்கும் படகில் ஏறி குதுகலமாக சவாரி செய்யலாம் என்று திட்டம் தீட்டினார்கள். அவ்வாறே போதையில் அந்த நண்பர்கள் ஆற்றங்கரை சென்று, அங்குள்ள படகில் ஏறி, தண்டு வலிக்கத்தொடங்கினார்கள். படகு இருளில் மெல்ல நகர்ந்தது. பின்னர் ஆற்றங்கரைக்கு மறு கரை சென்று ஊர் போகலாம் என்று எண்ணி, தண்டு வலித்தார்கள். காலை விடிந்துவிட்டது. ஆனால் படகு  சிறிது தூரம் தான் நகர்ந்ததே தவிர, இரவு முழுவது தண்டு வலித்தும் பயணி ல்லை. படகு அதே கரையில் தான் இருந்தது. போதையின் மயக்கத்தில் படகு கட்டப்ப ட்டிருப் பதை எல்லோரும் மறந்து, வீணாக முயற்ச்சி செய்து தண்டு வலித்திருக்கின் றார்கள். நாமும் சிலவேளைகளில் இப்படித்தான் நடந்து கொள்கின்றோம். வாழ்வின் மயக்கத்தில், சிக்குப்பட்டு, வெறும் சம்பிரதாயம், மமதை, ஆணவம், சுயநலம் என்ற மாயக்க ட்டுக்குள் கட்டுப் பட்டு, அதில் இருந்து விடபடமுடியா மல், ஆண்டவனையும்  அமைதியையும், சந்தோசத் தையும் நினைத்து, தண்டு வலிப்பது போல கடுமையாக முயற்ச்சி செய்தும், நமது வாழ்க்கைப்படகு அதன் இலக்கை அடையாது அவதிப்படுகின்றது. மனித மனமானது, மயக்கங் களினால் பிணைக்கப்பட்டு இருக்கும் வரை, உண்மை அமைதி, சந்தோசம் இவை நோக்கி ஒரு அடி கூட நகர முடியாது. மனதின் கட்டுக்களை அறுத்தெறி ந்தால் வாழ்க்கை அதுவாகவே அமைதி சந்தோசம் நோக்கி நகர ஆரம்பிக்கும்.

நகரும் ஏண்ணங்களோடு பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...