புதுக்கண்களும் புதுப்பார்வையும் பேசாலைதாஸ்
ஒரு இரயில் பய ணத்தின் போது,24வயது மதிக் கத்தக்க இளைஞன் ஒருவன், தனது தந்தையிடம், அப்பா அப் பா அந்த மரங்களை பாருங் கள் அவைகள் எல்லாம் பின்னோக்கி ஓடுகின்றன என்று ஆச்சரியத் தினால் கத்தினான். அந்த கம்பார் ட்மென்டில் பயணம் செய்த அத் தனை பயணிகளும், அந்த இளைஞனின் சிறு பிள்ளைத்தனத்தை பார்த்து பரிதாபப்பட்டார்கள். மீன்டும் திடீரென்று அந்த இளை ஞன் அப்பா அதோ பாருங்கள் அந்த முகில் கூட்டமெல்லாம் நம்மோடு கூட வருகின் றன என்றான்.
அந்த இளைஞனின் சிறுபிள்ளைத் தனமான செய்கைகளை பார்த்த ஒரு இளம் பெண், " ஏன் சார் உங்க பையனை ஒரு மனநல வைத்தியரிடம் காட்டியிருக் கலாமே என்று கேட் டாள். அதற்கு அந்த அப்பா சிரித்துக் கொண்டே சொன் னார் நாங்கள் இப் போதுதான் கண் வைத்தியசாலையில் இருந்து வருகின்றோம். எனது மகன் பிறவியிலேயே கண்பார்வை அற்று இருந்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக