பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0009 எப்பொருள் யார் வாய் கேட்பினும்.......

எப்பொருள் யார் வாய் கேட்பினும்...

அன்போடு நம்மைவந்தையும் சில அபிப்பிராயங்கள், ஆலோசனைகள் நம்மை புக ழின் உச்சிக்கே கொண் டுபோய்ச்சேர்த்துவிடும். அந்த ஆலோசனை சிலவேளைகளில், மிக சாதாரணமான மனிதர்களிடம் இரு ந்துவரலாம், அறிவுரைகள் ஆலோ சனை வழங்குவதில் பெரும் ஞானியாக, புகழ் பெற்ற சமயவாதி யாக, பேராசிரியராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை, மிக சாதாரண மனிதர்களிடம் இருந்து வரும் அபிப்பிராயமும் நம்மை புகழின் உச்சிக்கெ அழைத்து செல்லலாம்

                                                        ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் தேர்தலுக்காகத் தன்னை தயாரித் துக் கொண்டிருந்த சமயம் அது. அச்சமயத்தில் அவருக்கு ஒரு பெண் ஆலோசனை சொல்லி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், லிங்கன் அவர்களே, நீங்கள் ஒல்லியான தோற்றமுடையவர், உங் கள் கன்னத்தில் அம்மைத் தழும்புகள் இருக்கின்றன. எனவே நீங் கள் தாடி வைத்துக் கொண்டால் உங்கள் முகத் தழும்புகள் தெரி யாது. உங்களின் தோற்றமும் மாறும். உங்களின் எடுப்பான தோற் றம் மற்றவர்களைக் கவரும் என்று அப்பெண் எழுதியிருந்தார்.

                                                                                        அதை வாசித்துப் பார்த்த அவரின் தேர்தல் பொறுப்பாளர்கள் அக்கடிதத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டனர். அதைப் பார்த்த ஆபிரகாம் லிங்கன் அவ ர்கள், அக்கடிதத்தை எடுத்து வாசித்துப் பார்த்து அதன்படி தாடி வளர்த்துக் கொண்டாராம். அதன்பின்னர் அவரது தோற்றமும் மாறியதாகச் சொல்கிறார்கள். ஆபிரகாம் லிங்கன் அவர் கள் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தனக்கு ஆலோசனைக் கடிதம் எழுதிய அப்பெண் ணை நேரில் வரவழைத்து நன்றி சொன்னாராம்.

                                                   அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் யார் சொல்கிறார்கள் என்று பார்ப்பதைவிட, அந்த ஆலோசனை யின் ஆழத்தை அலசுவது நல்லது. அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...