பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 28 ஜூன், 2015

0187 கேட்பது கிடைப்பது இல்லை!

கேட்பது கிடைப்பது இல்லை!
கேட்டது கிடைப்பதில்லை, கிடை த்ததும் நிலைப்பதி ல்லை, இது தான் இன்றைய உலகில் நடக்கும் யதார்த்தம். நன்றாகப்படித்தவனு க்கு,  அவன் விரும்பும் தொழில் கிடைப்பதில்லை. கிடைக்கி ன்ற தொழில் மீதும் திருப்தி இருப்பதி ல்லை. யார் யாருக்கு எது தேவையோ அது அவர் களுக்கு கிடைப்பது இல்லை. ஆசைகள் விருப்பங் கள் இடம் மாறி, மனதுக்கு வெறுப்பையும், விரக்தி யையும் விதைகின்றன. அவரவர்களுக்கு வேண்டி யது கிடைத்துவிட்டால் ஒரு தொல்லையும் இல்லை. ஒரு வீட்டில் தாய்க்காரி ஒருத்தி. பலகாரம் சுட்டு, விற்பனை செய்துவந்தாள். ஒருமுறை கல் யாண வீடொன்றுக்கு பலகாரம் தயார்செய்து, கொடு ப்பதற்காக வைத்திருந்தாள். அந்த பலகாரத்தில் அவளின் மகன் ஒரு பலகாரத்தை திருடி, சாப்பிட்டு விட்டான். இதனை தாய் எப்படியோ கண்டுவிட் டாள்.  தன் மகன் செய்தது களவு, என்பதை உணர் த்துவதற்காக, மகனை அழைத்து, மகனே நீ பலகா ரத்தில் ஒன்றை திருடினாயா? என்று கேட்டாள் அவனும் ஆம் என்றான். நீ திருடும் போது கடவுள் பார்த்துக்கொண்டிருந்தார் என்பது தெரியுமா? என் றாள் அதற்கு அந்த மகன், ஆம் தெரியும் என்றான். நீ திருடுவதை பார்த்த கடவுள் உனக்கு என்ன சொல்லி யிருப்பார் என்று தெரியுமா? என்று கேட்டாள் தாய். உடனே அந்த பையன் " எனக்கும் சேர்த்து இரண்டு பலகாரம் எடு,  என்று கடவுள் சொல்லியிருப்பார்" என்று சட்டென்று பதில் சொன்னான். அவரவர்களு க்கு வேண்டியது, அவரவருக்கு கிடைக்கவேன்டும் அதுதான் சமூக நீதி! அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...