பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0061 ஒளி விளக்கு

ஒளி விளக்கு

புத்தர் வாழ்ந்த காலத்தில், ஒரு ஏழை பிச்சைக்காரி வாழ்ந்து வந் தாள். மன்னர்கள், இளவரசர்கள், மக்கள் இவர்கள் புத்தருக்கும் அவ ரது சீடர்களுக்கும் அளிக்கும்காணி க்கைகளை அவதானித்து வந்தாள் அவர்கள் அளிக் கும் காணிக்கை போல தானும் ஏதாவது கணிக்கை யை புத்தருக்கு கொடுக்க ஆசைப்பட்டு, பிச்சை எடுக் கச்சென்றாள். அவள் நாள் முழுவது பிச்சை கேட்டு ,அவளுக்கு ஒரு வெள்ளிக்கசே கிடை த்தது. அந்த வெள்ளிக்காசை எடுத்துக்கொண்டு ஒரு எண்னெய் வியாபாரியிடம் கொஞ்சம் என்னை கேட்டாள். அந்த ஒரு வெள்ளிக்காசு எண்ணெய் வாங்க போதாது என்று எண்னெய் வியாபாரி எண்ணெய் கொடுக்க மறுத்துவிட்டான். பின்னர் புத்தருக்காகத் தான் கிழவி எண்ணெய் கேட்கிறாள் என்பதை அறிந் து கொண்டு, அந்த ஒரு வெள்ளிக்காசுக்கு கொஞ்சம் எண்ணெய் கொடுத்தான் வியாபாரி. கிழவி அந்த சிறிய அளவு எண்ணையுடன் விளகேற்றி, புத்தரு க்கு முன் வைத்து, என்னால் முடிந்தது இந்த சின் னஞ் விளக்குத்தான், ஆனாலும் இது உலகத்திற்கு ஞானமும் அறிவும் முக்தியும் தருவதற்கு உதவவே ண் டும் என்பதே என் விருப்பம் என்று மன்றாடி னாள் அந்த ஆச்சிரமத்தில் எல்லா விளக்குகளும் அணைந்து போயின ஆனால் அந்த ஏழைக்கிழவி யின் விளக்கு மட்டும் எரிந்து கொண்டே இருந்தது. அடுத்த நாள் மவுட்கலயனா என்ற சீடன் அந்த விள க்கை அணைக்க முன்றான் அவனால் முடியாமல் போயிற்று, இதனைக்கண்ட புத்தர், மவுட்கலயனா உன்னால் அந்த விளக்கை அணைக்க முடியாது. உலகத்தின் அத்தனை சமுத்திர நீரையும் ஊற்றி னாலும் அதனை அணைக்க முடியாது. எனெனில் இந்த வீளக்கு உண்மையான தியாகத்தாலும் அன்பி னாலும் ஏற்றப்பட்ட ஒளி விளக்கு என்று புத்தர் சொன்னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...