பின் தொடர்பவர்கள்

செவ்வாய், 3 ஜனவரி, 2023

எழில்

 எழில் பேசாலைதாஸ் 


ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது.  
எழில் என்று அதற்குப் பெயரும் வைத்திருந்தார் அவர்.  அவருடைய நிலத்து வேலைகளுக்கு பெரிதும் உதவுவது  எழிலே தான்.  ஒரு மாலை நேரத்தில்,   தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார் அந்த விவசாயி.  அவரைத் தேடிக்கொண்டு ஒருவர் வந்தார். வெகு தூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய  கலைந்த தலையும், கசங்கிய ஆடைகளுமே உணர்த்தின.  வந்தவர், வணக்கம் சொன்னார்.  விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார்.  அவர் உட்கார்ந்ததும், சூடாக டீ குடிக்கிறீங்களா?   என்று கேட்டார். வந்தவர், அவசரமாக 'வேண்டாம்' என்று சொன்னார். சொல்லுங்க, என்ன விஷயம் ?' விவசாயி கேட்டார்.

ஒண்ணுமில்லை.  நான் கோபி முல்லங் கரையிலிருந்து வர்றேன். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை.வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம, நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு.  அதை வெளியே எடுக்கணும்.  உங்ககிட்ட  ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க. அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம் என்றும் சொன்னாங்க. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம் என்று...ரொம்பப் பெரிய காரா ?' என்று கேட்டார் விவசாயி. இல்லை, இல்லை.  சின்ன கார் தான்' என்றார் வந்தவர். விவசாயி கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக்கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடியே அவருடன் சென்றார்.  

விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம்,  அதன் நிலை எல்லா வற்றையும் பொறுமையாகப் பார்த்தார். கார் சிறியதாகத் தான் இருந்தது. ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில்,  ஒரு வேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது. 

விவசாயி ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி,  குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகவேப் பிணைத்தார். கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். பிறகு,  எங்கடா பழனி..இழு பார்ப்போம் ! என்று சத்தமாகவேக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது, ஏண்டா கந்தா இழுடா ராஜா ! இன்னும் சத்தமாகவேச் சொன்னார் விவசாயி.

குதிரை துளிகூட நகரவே இல்லை. டேய் முருகா... வேகமா இழு !  மறுபடியும்  உரத்த குரலில் சொன்னார். மீண்டும்குதிரை ஒரு இஞ்ச் கூட நகரவேயில்லை. என் செல்லம்.. என் தங்கம்... எழிலூ.. நீயும் சேர்ந்தே இழுடா ! என்றார். அவ்வளவு தான் குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது.

அடுத்த ஐந்தாவது நிமிடமே, கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறி விட்டது. வெளியூர்க்காரரோ, விவசாயிக்கு நன்றி சொன்னார். ஐயா, நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேரால கூப்பிட்டீங்க ? அது தான் எனக்கு ஒண்ணுமே புரியலை. ஐயா,  என் எழிலுக்கு ரெண்டு கண்ணுமே தெரியாது. தான்  மட்டும் தான் இந்த கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்ன்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா ?  அதான் அது கூட இன்னும் மூணு குதிரைகள் இருக்கிற மாதிரி நம்ப வெச்சேன்.  அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. சரசரவெனகாரை வெளியே இழுத்துடுச்சு !

அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு  பணம் எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால்,  அவை சம்பாதித்துக் கொடுப்பவையோ மிக ஏராளம், இதையே பிரெஞ்ச் கணிதவியலாளரும், தத்துவவியலாளருமான பிளெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal)  மிக அற்புதமாகச் சொல்லியிருக் கிறார். வார்த்தைகளின் மகிமையோ அபாரமானது.  அதனால்  தான் நல்ல நல்ல சொற்களைப் பேச வாய்ப்பு இருக்கும் போது,..கடுஞ்சொற்களை ஏன் பேச வேண்டும் என்பதையே *கனியிருப்பக் காய் கவர்ந்தற்று* என்கிறார் வள்ளுவரும்..

கேட்டு கொடுப்பது தானம் , கேட்காமல்அளிப்பது தர்மம் !

 கேட்டு கொடுப்பது தானம், கேட்காமல்அளிப்பது தர்மம் ! பேசாலைதாஸ் 


மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க  

பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன்,  

அவர் முன் எழுந்தருளினார்.

சூரியனே,

என்ன தடுமாற்றம் உன் மனதில் ? கேட்டவர் ஈசன்.

பரம்பொருளே..

பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.

ஆனால்,

எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே.

பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?  

இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

இறை சிரித்தது.

சூரியனே...

நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது சொல்கிறேன் கேள்... என்றது.

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்.

புண்ணியக் கணக்கில் சேராது.

ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....

ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.

எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.

அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. இப்போது புரிந்ததா? என கேட்க,  

ஈசனை வணங்கி நின்ற சூரியத் தேவன்.

தானமும்  

தர்மமும்  

பாவமும்  

புண்ணியமும்  

எல்லாமும் நீயே  

என்பதும் புரிந்தது என்கிறார்.

நாமும் புரிந்துகொள்வோம்.

#கேட்டு_கொடுப்பது #தானம் !  

#கேட்காமல்_அளிப்பது #தர்மம் !

மெளனத்தை மெளனமே அறியும் ,,,,,,,

 மெளனத்தை மெளனமே அறியும் ,,,,,,, பேசாலைதாஸ் 


அந்த சிறுவனின் பெயர் "ஸ்வதகேது"... அவனுடைய தந்தை அவனை...சகல வேத... சாஸ்திரங்களையும்...சகல கலைகளையும்...கற்றுக் கொள்வதற்காக...ஒரு குருவிடம் அனுப்பி வைத்தார்...

வருடங்கள் பல கடந்தன...

அனைத்தையும் திறம்பட கற்றுக் கொண்டான்.

இன்று குருகுலத்திலிருந்து ஸ்வதகேது வரும்நாள்...

அவனுடைய தந்தை அவன் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தார்...

தூரத்தில் ஸ்வதகேது...

கம்பீரமாக நடந்து வருவதை கண்டார்...

ஸ்வதகேதுவை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்...

ஆனால்...

அவன் முகத்திலும்...

நடையிலும்... 

"மிகுந்த கர்வம்" தெரிவதை கண்டு வருத்தமடைந்தார்...

ஸ்வதகேது தந்தையிடம் ஆசிகள் பெற்றான்.

அவனது தந்தை அவனிடம்...

"கற்றுக் கொடுக்க முடியாததை"... 

"கற்றுக் கொண்டாயா" 

என்று கேட்டார்.

அவன் சற்று திகைத்தான்...

"கற்றுக் கொடுக்க முடியாததை"...

 எப்படி அப்பா கற்றுக் கொள்ள முடியும்?"

 என்று கேட்டான்.

முதலில் "அதை" கற்றுக்கொண்டு வா...

 என்று கூறி வேறொரு குருவிடம் அனுப்பி வைத்தார்...

குருவை வணங்கி நின்ற ஸ்வதகேதுவிடம்...

குருவானவர்...

நூறு மாடுகளை கொடுத்து...

இவைகள் ஆயிரம் மாடுகள் ஆனவுடன் இங்கே வா...

என்று கூறி அனுப்பி வைத்தார்...

ஸ்வதகேதுவும்...

நூறு மாடுகளையும் அழைத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றான்...

ஆரம்ப நாட்களில் யாரிடமும் பேச முடியாமல்...

மிகுந்த துன்பப்பட்டான்...

பிறகு மாடுகளுடன் பேச ஆரம்பித்தான்...

நாட்கள் செல்லச் செல்ல...

தனக்கத் தானே பேச ஆரம்பித்தான்...

கற்றுக் கொண்ட சகல கலைகளையும்...

சாஸ்திரங்களையும்...

மறக்க தொடங்கினான்...

வருடங்கள் கடந்தது...

மொழிகளையும் மறந்தான்... பேசுவதும் நின்று போனது...

தன்னை மறந்தான்...

அமைதியானான்...

திரும்பி போவதையும் மறந்தான்...

ஒரு நாள்... 

மாடுகள்...

ஸ்வதகேதுவிடம்...

நாங்கள் ஆயிரம் ஆகிவிட்டோம்...

நாம் போகவேண்டிய நாள் வந்துவிட்டது என்றுகூறி...

அவனை அழைத்துச் சென்றன...

தூரத்தில் மாடுகள் வருவதை பார்த்த குரு...

ஸ்வதகேது தந்தையிடம்...

அங்கே பார்...

"ஆயிரத்து... ஒரு" 

மாடுகள் வருகின்றன என்றார்.

"அறிவே" அறிவதற்கு தடை

வார்த்தைகளை...

கையாளுவதில் கவனமாக இருங்கள்...

சிக்கிக் கொள்ளாதீர்கள்...

வார்த்தைகள் வெறும் வார்த்தைகளே !! 

வார்த்தைகள் "நீங்களல்ல"

பேசுவதை... 

நான் விரும்பவில்லை...

ஆனால்...

உங்களுக்கு ஏதோ சொல்ல வேண்டியுள்ளது...

உங்கள் கேள்விகளை அழிக்க பேச வேண்டியுள்ளது...

ஒரே கேள்விக்கு...

இன்று ஒரு பதில் சொல்வேன்...

நாளை வேறொன்று சொல்வேன்...

பிறகு என் பதிலை நானே மறுத்து பேசுவேன்...

எனது நோக்கம் உன்னை மௌனத்தில் ஆழ்த்துவதே !!!

"மௌனத்தை... மௌனத்தால்...

 உணர்த்துபவர் எவரோ...

 அவரே ! குரு !!!"

தந்தை தவறு செய்தால்.....?

 தந்தை தவறு செய்தால்.....? பேசாலைதாஸ் 


குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும்,

விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.

கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்...

நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சமைப்பது,

அவரை ரித்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்துகொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மலைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார்.

அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா இப்போது சொல் என்றார் கிருஷ்ணன்..

அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார்.

ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே!

சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான்.அதனால் அவன் செய்த தவறு சிறியது.

ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய்.

அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.

ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.

ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார்.

தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம்! நல்லதே நினைப்போம்! நல்லதே செய்வோம்

இந்த மிஷினைக் கண்டுபிடிச்சதே அவன் தான்.

 இந்த மிஷினைக் கண்டுபிடிச்சதே அவன் தான். பேசாலைதாஸ் 


பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய ஜப்பானில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. அதில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒருவன். துறுதுறு வென்று எல்லாரிடமும், பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டுமிருக்கிறான். 

இங்கிலாந்து கம்பெனியின் நிர்வாகிக்கு அந்தச் சிறுவனைக் கண்டதுமே ஏனோ பிடிக்க வில்லை. இரண்டொரு நாளில் இன்ஸ்டலேஷன் பணிகள் துவங்க இருக்க, ஜப்பான் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்.

“ஏப்பா.. அவ்ளோ துட்டுப் போட்டு வாங்கிருக்கோம். சர்வீஸ் டீம்ல சின்னப்பையனைலாம் சேர்த்தி அனுப்பிருக்கீங்க? என்ன டூர் வந்திருக்காங்களா? ஏர்போர்ட்ல இருந்து ரூமுக்கு அனுப்ச்சாச்சு. நாளைன்னைக்கு இன்ஸ்டால் பண்றப்ப அந்தப் பையன் மிஷின்ல கைய வைக்கக்கூடாது ஆமா. அதென்ன சின்னப் புள்ளைக சமாச்சாரமா?” - இதுதான் அவர் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம்.

உடனடியாக பதில் அஞ்சல் வந்தது. “மன்னிக்க வேண்டும். தவறு தான். நாங்கள், அந்தச் சிறுவனுக்கு பதில் கொஞ்சம் சீனியரை டீமுக்கு அனுப்புகிறோம். அந்தச் சிறுவன் அங்கே இருப்பான். ஆனால் கருவியைக் கையாள மாட்டான்” என்று பதில் வருகிறது. 

சொன்னபடியே கொஞ்சம் வயதில் மூத்தவர் வருகிறார். குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்தச் சிறுவனும் அவர்களுடன் தான் இருக்கிறான். ஆனால் அந்த மிஷின் வேலை செய்யும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறான். இந்தக் குழுவினார் டீ ப்ரேக், லஞ்ச் ப்ரேக்கெல்லாம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்து, இரண்டு நாட்களில் இயந்திரத்தை நிறுவிவிடுகிறார்கள். வேலை வெற்றிகரமாக முடிந்து விடுகிறது.

வழியனுப்பும் போது, இந்த இங்கிலாந்து கம்பெனி நிர்வாகிக்கு சின்னதாக ஒரு குற்ற உணர்வு. என்ன இருந்தாலும் அவ்வளவு கடுமையாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. அந்தச் சிறுவன் அவன் பாட்டுக்கு சிரித்த முகத்துடனேயே வளைய வருகிறான். அவனிடம் இதைச் சொல்லி விட்டால் மனது லேசாகி விடும் என்று உணர்கிறார். குழுவினர் எல்லாரும் இருக்க, சொல்கிறார்:

“ஸாரி.. ஆக்சுவலி பலகோடி ரூபாய் ப்ராஜக்ட். இன்ஸ்டால் பண்றப்ப எதும் சிக்கல் வந்தா அப்பறம், பணம் நேரம்னு பெரிய நஷ்டமாகிடும். அதான் கொஞ்சம் சீனியர் வேணும்னு கேட்டேன். மத்தபடி ஐ லைக் த பாய். துறுதுறுன்னு இருக்கான். ஆனா இந்த டீம்ல இப்படி ஒரு சின்னப் பையன் வந்தது எனக்கு சரின்னு படலை. அதான்..” என்று பாலிஷாகச் சொல்கிறார். 

அந்தச் சிறுவன் அதே புன்னகையுடனே இருக்க, புதிதாக வந்தவர் சொல்கிறார். “இட்ஸ் ஓகே சார். நாங்க வாடிக்கையாளர் கருத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம். நீங்க சொன்னதுமே என்னை அனுப்பி வெச்சாங்க. இப்ப மிஷின் நல்லபடியா இன்ஸ்டால் செஞ்சு, ஓடிட்டிருக்கு. ஆனா ஒரு விஷயம்..” தயங்குகிறார்.

”பரவால்ல.. எதாருந்தாலும் சொல்லுங்க”

“நான் அந்தக் கம்பெனில அக்கவுண்ட்ஸ்ல வொர்க் பண்ற ஆளுதான். எனக்கு இந்த மிஷின் பத்தி ஏபிசிடிகூட தெரியாது”

நிர்வாகி அதிர்ச்சியாகிறார். “அப்பறம் இன்ஸ்டலேஷனப்ப வேலை செஞ்சுட்டிருந்தீங்க?”

“இந்தப் பையன்கிட்ட போய்ப் போய்க் கேட்டு அவன் சொல்றத மட்டும் பண்ணினேன் அவ்ளதான்”

“அந்தப் பையன் எப்படி மிஷின் பக்கமே வராம, உங்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் குடுத்திருக்க முடியும்?”

“முடியும். ஏன்னா, இந்த மிஷினைக் கண்டுபிடிச்சதே அவன் தான்

திங்கள், 2 ஜனவரி, 2023

மிகச்சிறந்த பொய்

 மிகச்சிறந்த பொய்  பேசாலைதாஸ்

மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.


ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை அரச சபைக்கு வந்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.

அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தான்.

அந்த ஏழை சொன்னான், “அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் நான் வந்தேன்.”

அரசனுக்கு கோபம் வந்து விட்டது.

“யாரிடம் புளுகுகிறாய்.? நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?” என்று உரத்தக் குரலில் சுத்தினான்.

உடனே ஏழை சொன்னான், “அரசே, நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள். நான் பொய்யன் என்பதை உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டு விட்டதால், போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்” என்று பணிவுடன் கேட்டான்.

கோபத்திலும், அவசரத்திலும் தாம் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்த அரசன், “நீ சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ள முடியாது!” என்று அவசரமாக மறுத்தான்.

ஏழை விவசாயி சொன்னான்,

“சரி, நான் சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் போகிறது. உண்மை என்று ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா. எனவே, எனக்குத் தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து, கடனை அடையுங்கள்.”

கையைப் பிசைந்த அரசன், அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான். மன்னனாக இருந்தாலும் அவனும் மனிதன்தான் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் உள்ளது.

ஒரு மன்னனுக்கு சொர்க்கம், நரகம் குறித்த பெருத்த சந்தேகம் வந்தது. அதை யாராலும் தீர்க்க முடியவில்லை.

இந்நிலையில், காட்டில் வேட்டையாடச் சென்ற இடத்தில் ஒரு சாமியாரைப் பார்த்தான் மன்னன். இவரிடம் கேட்கலாம் என்று முனிவர் தவம் கலைய காத்திருந்தான். கண் விழித்தார் முனிவர்.

“யார் நீ” என்று கேட்டார்.

“நான் மன்னன்…”

“சரி, சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?”

“நான் ஒரு நாட்டுக்கே மன்னன் என்கிறேன். என்னைப்பார்த்து சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய் என்கிறீரே?”

“எனக்கு உன்னைப் பார்த்தால் திருடனைப்போல் தெரிகிறது” என்றார் முனிவர்,

மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது. “முனிவராயிற்றே என்று பொறுமையாக காத்திருந்து உங்களிடம் ஒரு கேள்வி கேட்க நினைத்தால் என்னையே திருடன் என்கிறீரா.? உம்மை என்ன செய்கிறேன் பார்” என்று வாளை உருவினான் மன்னன்.

முனிவர் சிரித்துக்கொண்டே, “இதுதான் நரகத்துக்குச் செல்லும் வழி!” என்றார்.

மன்னனுக்கு சட்டென்று ஞானம் தோன்றியது. கேள்வி கேட்காமலே தாம் வந்த நோக்கத்தை ஞானதிருஷ்டியால் அறிந்து, பதில் சொல்லிய மகாமுனியாக காட்சி தந்தார் முனிவர்.

வாளை கீழே போட்ட மன்னன், “சுவாமி என்னை மன்னிக்க வேண்டும்!” என்று பணிந்தான்.

“இதுதான் சொர்க்கத்துக்குச் செல்லும் வழி!” என்றார் ஞானி.

சாஷ்டாங்கமாக விழுந்து விட்டான் மன்னன்.

உயர்பதவியில் இருக்கும்போது, எதையும் ஒன்றுக்குப் பத்து முறை யோசித்துப் பேசுவதே சிறப்பானது....


ஒரு கையின் ஓசை!!!

 ஒரு கையின் ஓசை!!!பேசாலைதாஸ் 

ஒர் ஜென் மடாலயத்தில் ஒரு பன்னிரண்டு வயதான டோயோ என்னும் சிறுவன் தங்கி வாழ்ந்து வந்தான். அவன் ஒவ்வொரு நாளும் மக்கள் குருவிடம் உதவி, வழிகாட்டல் முறைகளை கேட்டு செல்வதை கவனித்துக் கொண்டிருந்தான். இது போகப்போக அவனை மிகவும் ஈர்த்தது. ஒரு நாள் குரு அதேப்போல் மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது, அவனும் குருவிடம் கேட்பதற்காக, குருவை தன் மீது பார்வை செலுத்த, அவர் முன் மிகவும் மரியாதையுடன் ஏழு முறை தலைகுனிந்து குருவை வணங்கினான். அவனது செயலைக் கண்டு மாஸ்டர் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

பின் குரு அவனை அழைத்து டோயோ "உனக்கு என்ன வேண்டும்?" என்றார். அதற்கு அவன் குருவிடம் "நான் உண்மையை தேடி வந்துள்ளேன், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.

குருவோ இவன் ஏதோ விளையாட்டாக கேட்கிறான் என்று எண்ணி, அவனிடம் "இரண்டு கைகளை கொண்டு ஒரு ஒலியை உருவாக்க முடியும். ஆனால் ஒரு கை கொண்டு ஒலி எழுப்புவது எப்படி என்பதை கண்டறிந்து என்னிடம் சொல்" என்றார்.

டோயோவும் மரியாதையுடன் மீண்டும் ஏழு முறை தலைகுனிந்து வணங்கிவிட்டு, அவனுடைய அறைக்கு சென்று, தியானம் செய்ய ஆரம்பித்தான். பின்பு மூன்று நாட்கள் கழித்து "நீர் துளிகள் எழுப்பும் ஒலியா?" என்றான். குருவோ "இல்லை" என்றார்.

பின் மரத்தின் அடியில் சென்று தியானம் செய்ய ஆரம்பித்தான். பிறகு மூன்று மாதம் கழித்து, "மரங்களில் வெட்டுக்கிளி எழுப்பும் ஒலியா? காற்றின் ஒலியா?" என்றான். குருவோ "அதுவும் இல்லை. சரியாக தியானம் செய்!" என்று சொன்னார்.

ஒரு வருடம் ஆனப் பின்னரும் அவன் வராததால், குருவே அவனை தேடி வந்தார். அவனோ ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்து தியானத்தில் மூழ்கி இருந்தான். அப்போது அவன் உடலில் சில தெரியாத அமைதியான அதிர்வுறும் ஒலியினால், அவனது உடல் மிகவும் மென்மையான வெறும் காற்று நகருவது போல் நடனம் ஆடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த மாஸ்டர், டோயோவை தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆகவே அவர் அங்கேயே காத்திருந்தார்.

பல மணி மணி நேரம் கடந்துவிட்டது. சூரியனோ மறையும் நிலையில் இருந்தபோது மாஸ்டர் "டோயோ..." என்று அழைக்க, அவன் கண்களை திறந்து "இது தான் அந்த விடை" என்றான்

குருவும் "ஆம், நீ அதை அடைந்து விட்டாய்!" என்றார்

இந்த ஓம் என்ற ஒலி தான் அது. அது தியானம் செய்யும் போது அனைத்து ஒலியும் மனதில் இருந்து மறைந்து, உங்களுக்கு ஒரு குரல் கேட்கும்.

அந்த ஒலி தியானத்தின் முழுமையை அடையும் பொழுதே கேட்கும். அதனால் ஓம் என்ற இசை நம்முள் உணரப்படும். இதைதான் உபநிடதங்கள் ஓம் என்ற ஒலியை ஒரு முழு குறியீடாக அமைத்துள்ளனர்.

என் ஈட்டியே எனக்கு போதும்

 என் ஈட்டியே எனக்கு போதும் பேசாலைதாஸ் 

நானும் நாள் முழுதும் நானும் தான் நிக்குறேன் .நடக்குறேன் .ஓடுறேன் . ஆடுறேன் .பாடுறேன் .ஆனால் என்னய மட்டும் ஈட்டியை நீட்டிப்பிடி ன்னு சொல்லிட்டு பீர்பாலுக்கு மட்டும் ஏனிந்த செல்லம் ?என்று ஆதங்கத்துடன் ராஜா கிட்டே கேட்டுட்டான் .

ஒரு உண்மையான ஊழியரின் நியாயமான கேள்வியை தீர்த்துவைப்பது ராஜாவின் வேலையென்பதால் ராஜா யோசிக்கும்போதே அரண்மனை வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் கடந்து சென்றுகொண்டிருந்தன.

அவை என்ன ?என்று பார்த்து வர ராஜா பணித்தார் உப்பரிகையிலிருந்து.

சேவகன் ராஜா உத்தரவை நிறைவேற்றும்பொருட்டு வேகமாக கீழிறங்கி விசாரித்துவிட்டு மேலேவந்து நெல்லும் ,பஞ்சும் போகின்றது என்றான் .

எங்கிருந்து போகின்றது என்று கேட்டதும் சேவகன் கீழிறங்கி விசாரித்துவிட்டு மீண்டு ராஜாவிடம் பாரிஜாத நாடு என்றான் .

எங்கே போகின்றது ?என்று கேட்டதும் மீண்டும் சேவகன் கீழிறங்கி பவளமல்லி நாட்டிற்கு என்று சொன்னான் .

யாருடையது ?என்று ராஜா கேட்டதும் மீண்டும் கீழிறங்கி சென்று விசாரித்து வருகையில் கானா மூனா செட்டியாரிடமிருந்து என்றான் .

யாருக்கு என்று மீண்டும் கேட்டதும் சேவகனுக்கு கோபம் ஏற ஆரம்பித்து கீழிறங்கி விசாரித்து ரூனா மூனா வகையறாவுக்கு என்றான் .

இதேபோல இன்னும் ஏலெட்டு கேள்விகளுக்குப்பின்னர் சேவகனின் மூட்டு நழுவி மூணு மாசத்துக்கு முட்டுச்செத்த கதையானதும் ,போதும் ராஜா !!நான் கேள்வி கேட்டது தப்புதான் .என் ஈட்டியே எனக்கு போதும் .தூக்கி பிடிச்சு நின்னுக்குறேன்னு சொன்னான் .

அந்த நேரம் பீர்பால் வந்தார் .அவரிடம் இதேபோல ஒரே கேள்வி ராஜா கேட்டார் .பீர்பால் கீழே கூட இறங்கவில்லை .

ராஜா ,பாரிஜாத நாட்டிலிருக்கும் கானா மூனா செட்டியாரிடமிருந்து ,பவளமல்லி நாட்டிலுள்ள ரூனா மூனா வகையறாவுக்கு நெல்லும் ,பஞ்சுமாக 120 வண்டிகள் நேற்று கிளம்பி ,இன்று அரண்மனை வழியாக நாளை மறுநாள் சென்றுசேரும்,மொத்தப்பணமாக பத்தாயிரம் வெள்ளி பணம் ,அதில் பஞ்சுக்கு ஒருபங்கும் ,நெல்லுக்கு மூன்று பங்குமென்கிறார் .

ஏனென்றால் அரண்மனை வழியாக மொத்தமாக இதனை மாட்டுவண்டிகள் செல்லும்போதே அவர் வித்தியாசமாக உணர்ந்து விசாரித்துவிட்டுதான் மேலே வந்திருக்கின்றார் .

அதை கேட்டுவிட்டு ராஜா சேவகனை பார்த்ததுமே சேவகன் அர்த்தம் புரிந்துகொண்டான் .பீர்பலும் பார்வையிலேயே என்ன நடந்திருக்கும் என்று யூகித்து கொண்டார்.இதே கேள்விதான் அக்பரின் சபையில் வேலை காவலாளி ஒருவருக்கு .

நானும் நாள் முழுதும் நானும் தான் நிக்குறேன் .நடக்குறேன் .ஓடுறேன் .ஆடுறேன் .பாடுறேன் .ஆனால் என்னய மட்டும் ஈட்டியை நீட்டிப்பிடி ன்னு சொல்லிட்டு பீர்பாலுக்கு மட்டும் ஏனிந்த செல்லம் ?என்று ஆதங்கத்துடன் ராஜா கிட்டே கேட்டுட்டான் .

ஒரு உண்மையான ஊழியரின் நியாயமான கேள்வியை தீர்த்துவைப்பது ராஜாவின் வேலையென்பதால் ராஜா யோசிக்கும்போதே அரண்மனை வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் கடந்து சென்றுகொண்டிருந்தன.

அவை என்ன ?என்று பார்த்து வர ராஜா பணித்தார் உப்பரிகையிலிருந்து.

சேவகன் ராஜா உத்தரவை நிறைவேற்றும்பொருட்டு வேகமாக கீழிறங்கி விசாரித்துவிட்டு மேலேவந்து நெல்லும் ,பஞ்சும் போகின்றது என்றான் .

எங்கிருந்து போகின்றது என்று கேட்டதும் சேவகன் கீழிறங்கி விசாரித்துவிட்டு மீண்டு ராஜாவிடம் பாரிஜாத நாடு என்றான் .

எங்கே போகின்றது ?என்று கேட்டதும் மீண்டும் சேவகன் கீழிறங்கி பவளமல்லி நாட்டிற்கு என்று சொன்னான் .

யாருடையது ?என்று ராஜா கேட்டதும் மீண்டும் கீழிறங்கி சென்று விசாரித்து வருகையில் கானா மூனா செட்டியாரிடமிருந்து என்றான் .

யாருக்கு என்று மீண்டும் கேட்டதும் சேவகனுக்கு கோபம் ஏற ஆரம்பித்து கீழிறங்கி விசாரித்து ரூனா மூனா வகையறாவுக்கு என்றான் .

இதேபோல இன்னும் ஏலெட்டு கேள்விகளுக்குப்பின்னர் சேவகனின் மூட்டு நழுவி மூணு மாசத்துக்கு முட்டுச்செத்த கதையானதும் ,போதும் ராஜா !!நான் கேள்வி கேட்டது தப்புதான் .என் ஈட்டியே எனக்கு போதும் .தூக்கி பிடிச்சு நின்னுக்குறேன்னு சொன்னான் .

அந்த நேரம் பீர்பால் வந்தார் .அவரிடம் இதேபோல ஒரே கேள்வி ராஜா கேட்டார் .பீர்பால் கீழே கூட இறங்கவில்லை .

ராஜா ,பாரிஜாத நாட்டிலிருக்கும் கானா மூனா செட்டியாரிடமிருந்து ,பவளமல்லி நாட்டிலுள்ள ரூனா மூனா வகையறாவுக்கு நெல்லும் ,பஞ்சுமாக 120 வண்டிகள் நேற்று கிளம்பி ,இன்று அரண்மனை வழியாக நாளை மறுநாள் சென்றுசேரும்,மொத்தப்பணமாக பத்தாயிரம் வெள்ளி பணம் ,அதில் பஞ்சுக்கு ஒருபங்கும் ,நெல்லுக்கு மூன்று பங்குமென்கிறார் .

ஏனென்றால் அரண்மனை வழியாக மொத்தமாக இதனை மாட்டுவண்டிகள் செல்லும்போதே அவர் வித்தியாசமாக உணர்ந்து விசாரித்துவிட்டுதான் மேலே வந்திருக்கின்றார் .

அதை கேட்டுவிட்டு ராஜா சேவகனை பார்த்ததுமே சேவகன் அர்த்தம் புரிந்துகொண்டான் .பீர்பலும் பார்வையிலேயே என்ன நடந்திருக்கும் என்று யூகித்து கொண்டார்.


சனி, 31 டிசம்பர், 2022

பிறர் மீது அக்கறை

 பிறர் மீது அக்கறை  பேசாலைதாஸ் 

 ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை ஊக்குவிக்க சிறிய தேர்வை நடத்தினார். அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதிய தொரு ஜோடி காலணி வழங்கப்படும் என்றும் கூறினார். அனைத்து மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர். இறுதியில் அவர் களது விடைகளை பரிசீலித்துப் பார்த்த பொழுது அவர்கள் அனைவரும் சரியான விடைகளை எழுதி இருந்தனர்.

ஆசிரியை யாருக்கு பரிசினை வழங்குவது என சிந்தித்துவிட்டு ஒரு பெட்டியில் அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி சுருட்டிப்போடுமாறு சொன்னார். அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒருதாளை எடுத்தார். அதில் "வபா" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்குப் பரிசு வழங்கப்பட்டது.

அம்மாணவிதான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த அம் மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச் சியுடன் வீட்டுக்கு வந்து நடந்த நிகழ்வைப் பற்றி கணவரிடம் கூற. கணவனும் மகிழ்ச்சி அடைந்தார். எனினும் அவ்வாசிரியை  கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததைக் கண்ட கணவர் காரணம் கேட்க,,

"நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியில் இருந்த தாள்களை பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாக இருந்த "வபா" வின் பெயரையே எழுதியிருந்தனர்." என்றுகண்ணீருடன் பதிலளித்தார்.

தன்னை விட அதிகம் தேவையில் உள்ள பிறர் மீது அக்கறை கொண்டு அவர்களை முன்னிலைப் படுத்தும் பிள்ளைகளாக நமது பிள்ளைகளை வளர்ப்பது நமது கடமையாகும்..

வியாழன், 15 டிசம்பர், 2022

தன்னுணர்வு

தன்னுணர்வுபேசாலைதாஸ்

அவன் சாதாரணத் திருடன் இல்லை. அவன் தலை சிறந்தவன். அந்த நாட்டு மன்னனுக்கே அவனிடம் பெரிய மரியாதை இருந்தது.

ஏனென்றால் அவன் அதுவரை பிடிபட்டதேயில்லை. அந்த நாட்டிலேயே அவன்தான் பெரிய திருடன் என்று எல்லாருக்கும் தெரியும்.
திருடர்கள் மத்தியில் அவன் புகழ் நாலாபக்கமும் பரவியிருந்தது. அவனால் திருடப்படுவதையே கெளரவமாக நினைத்தார்கள் மக்கள்.
"நேற்று எங்கள் வீட்டுக்கு பலே திருடன் வந்தானாக்கும்" என்று பெருமையடித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். தங்கள் பொருள்கள் திருடு போவதைப் பற்றிக் கூட கவலைப்படாமல் அந்தத் திருடனின் கைவண்ணத்தைப் பாராட்டுவதிலேயே மக்கள் குறியாக இருந்தார்கள்.
அது மட்டுமில்லை. அந்த பலே திருடன் ஒரு வீட்டுக்கு வருகை புரிந்தான் என்றால் அவன் அந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் என்று பொருள். சாதாரணமானவர்கள் வீட்டுக்கு அவன் போவதில்லை.
மன்னர்கள், அமைச்சர்கள், பெரிய செல்வந்தர்கள் வீட்டுக்கு மட்டும் தான் அவன் போவான். ஆகவே பலே திருடனின் வருகை அந்தஸ்தின் அடையாளமாகப் போய்விட்டது.
அந்த திருடனுக்கு வயதாகிவிட்டது. அவனது மகன் அவனைக் கேட்டான். "அப்பா, உங்களுக்கோ வயதாகிவிட்டது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீங்கள் கஷ்டப்படப் போகிறீர்கள்? எனக்கு தொழிலைக் கற்றுக் கொடுங்கள். நீங்கள் ஓய்வெடுங்கள்.''
"அதைத்தானடா யோசித்துக் கொண்டிருக்கிறேன். மகனே, திருடுவது கலையில்லை. அது ஓர் உத்தி. அதை நான் உனக்குச் சொல்லித் தர முடியாது. ஆனால் நீ புத்திசாலியாக இருந்தால் நான் சொல்லாமலேயே உன்னால் அதை என்னிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியும்."
ஆன்மிகமும் அப்படித்தான். அதை சொல்லித்தர முடியாது. கொஞ்சம் அறிவும் விவேகமும் இருந்தால் அடுத்தவரிடம் இருந்து 'பிடித்துக்' கொள்ளலாம்.
பலே திருடன் தனது மகனிடம் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.
"திருடுதல் என்பது ஓர் உத்தி. நான் உனக்கு உதவத் தயாராக இருக்கிறேன். ஆனால் நீதான் அதைப் 'பிடித்துக்' கொள்ள வேண்டும். நீ அதைப் பிடித்துக் கொள்ள என்னாலானதைச் செய்கிறேன்.
திருடுவது, கவிதை எழுதுவது இதெல்லாம் அடுத்தவர் சொல்லிக் கொடுத்து வராது. தானாக வரவேண்டும். உனக்கு அது வருமா வராதா என்று இப்போது சொல்ல முடியாது. நீ முயற்சி செய்து பார். இன்று இரவு தொழிலுக்குப் போகும் போது நீ என்னுடன் வா.'
அன்று தந்தையுடன் தொழிலுக்குச் சென்றான் மகன். மகன் இளைஞன். நல்ல திடகாத்திரமாக இருந்தான். தந்தைக்கோ எழுபது வயதுக்கு மேல் ஆகியிருந்தது.
அவர்கள் இருவரும் ஒரு பெரிய செல்வந்தரின் வீட்டுக்குப் போனார்கள். பலே திருடன் சுவரை உடைத்தான். அவன் உடைக் கும் அழகை உடல் நடுங்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் மகன்.
அது நல்ல குளிர் காலம் என்றாலும் மகனுக்கு வியர்த்துக் கொட்டியது. அவனுக்கு பயமாக இருந்தது. அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான். யாராவது அவர்களைப் பார்த்துவிட்டால்...
“அப்பாவின் தொழில் நேர்த்தியே நேர்த்தி! ஏதோ தனது சொந்த வீட்டுச் சுவரை உடைப்பது போல் பதற்றப்படாமல் அமைதியாக உடைத்துக் கொண்டிருக்கிறாரே! அவருக்குக் கொஞ்சம் கூட பயம் இருக்காதா?"
தந்தை ஒரு முறை கூட அக்கம் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. சுவரை உடைத்து முடிந்தவுடன் அனாயாசமாக வீட்டுக்குள் நுழைந்தான் தந்தை. மகனைப் பின் தொடர்ந்து வருமாறு சைகை காட்டினான்.
மகன் இப்போது தலையோடு கால் நடுங்கிக் கொண்டிருந்தான். குளித்துவிட்டு வந்தது போல் வியர்த்துக் கொட்டியது மகனுக்கு. நல்ல வெயில் காலத்தில் கூட, பகல் வேளையில் இந்த அளவு அவனுக்கு வியர்த்ததில்லை.
ஆனால் தந்தையோ இருட்டில் அந்த வீட்டில் வசிப்பவனைப் போல் உள்ளே நடமாடிக் கொண்டிருந்தான். எதன் மேலும் தடுமாறி விழவில்லை. எந்த சத்தமும் எழுப்பவில்லை.
வீட்டிற்குள்ளே இருந்த ஓர் அறைக்குச் சென்றார்கள் அவர்கள். அங்கே இருந்த ஆளுயர அலமாரிக்குள் தன் மகனை நுழையுமாறு சொன்னான் தந்தை.மகன் உள்ளே நுழைந்தான்.
அடுத்து மகன் கற்பனையிலும் எதிர்பார்க்காத ஒரு செயலைச் செய்தான் தந்தை.
அந்த அலமாரியை வெளியில் இருந்து பூட்டினான். உள்ளே மகன் இருந்தான். “திருடன் திருடன்” என்று பெரிதாகக் கத்தியபடி வீட்டை விட்டு ஓடிவிட்டான் தந்தை.
வீட்டில் இருந்தவர்கள் எழுந்துவிட்டார்கள். அண்டை வீட்டுக் காரர்கள் எல்லாருமே எழுந்துவிட்டார்கள். எல்லா விளக்குகளையும் ஏற்றித் திருடனை வீடு முழுவதும் தேட ஆரம்பித்தார்கள்.
மகனின் நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
"அவ்வளவுதான். தொலைந்தோம். என் என் அப்பன் ஒரு பைத்தியக்காரன். தொழில் கற்றுக் கொடு என்று நான் அவரைக் கேட்டிருக்கக்கூடாது. இது எனக்கான தொழிலே அல்ல. அந்த ஆள் சொல்வது சரிதான். திருடர்கள் பிறக்கிறாரக்ள், உருவாக்கப் படுவதில்லை.
"இப்படியா ஒரு மனுஷன் சொல்லித் தருவான்? நான் மட்டும் இவர்களிடமிருந்து பிழைத்தால் என் அப்பனைத் தேடிப் பிடித்துக் கொலை செய்வேன். வீட்டிற்குப் போய் அவன் தலையை அறுத்துக் கொல்வேன்."
அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. யாருக்கும் அந்த சூழ்நிலையில் கோபம் வரத்தானே செய்யும்? ஆனால் இப்போது கோபப்பட நேரம் இல்லை. ஏதாவது செய்து இவர்களிடம் இருந்து தப்பிச் செல்ல வேண்டும். என்ன செய்வது என்று புரியவில்லை. அவன் மனம் சிந்திக்க மறுத்தது.
அதுதான் உண்மையான தியான நிலை. மனம் செயலற்று, சிந்தனையற்று இருப்பதுதான் உண்மையான தியானம்.
அடுத்து என்ன செய்வது என்று மனதிற்கு சத்தியமாகத் தெரியாது. ஏனென்றால் மனத்திற்கு தெரிந்த விஷயங்கள் இந்த சூழ்நிலைக்குப் பயன்படாது.
அவனுடைய மனம் இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையை இதுவரை சந்தித்ததேயில்லை. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மனம் தெரிந்ததைத்தான் சுற்றிச் சுற்றி வரும்.
தெரியாதது எதையாவது பார்க்க நேர்ந்தால் மனம் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விடுகிறது. மனம் ஓர் இயந்திரம். சரியான செய்திகளை மனதிற்கு நீங்கள் கொடுக்கவில்லையென்றால் அதனால் இயங்க முடியாது.
இது ஒரு புதிய சூழ்நிலை. பலே திருடனின் மகனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அப்போது அந்த வீட்டின் வேலைக்காரி கையில் ஏற்றிய மெழுகுவர்த்தியோடு அந்த அறைக்குள் நுழைந்தாள். எப்படியும் திருடன் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும். சுவர் உடைக்கப்பட்டிருக்கிறது,
கதவுகள் எல்லாம் திறந்திருந்தன. அப்படியென்றால் திருடன் எப்படியும் உள்ளே இருக்கும் இந்த அறைக்குத்தான் வந்திருக்கவேண்டும். இங்கே தான் எங்கோ அவன் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தாள் அவள்.
மகன் பதுங்கியிருந்த ஆளுயர அலமாரியில் ஏதோ சத்தம் கேட்க, அலமாரியை திறந்தாள் அவள்.
உள்ளே இருந்த திருடனின் மகன் தனது கையால் அலமாரியைச் சுரண்டிக் கொண்டிருந்தான். அந்த செயலை அவன் தன்னிச்சையாகச் செய்து கொண்டிருந்தான். மனதால் திட்டமிட்டுச் செய்யவில்லை.
அலமாரி கதவுகளின் இடுக்கு வழியாக யாரோ விளக்குடன் அறைக்குள் நுழைவதைப் பார்த்தான். காலடி ஓசையைக் கேட்டான். இப்போது அறையில் அவ்வளவாக இருட்டு இல்லை. கதவைத் திறக்க வேண்டுமென்றால் ஏதாவது செய்தே ஆக வேண்டும். என்ன செய்வது?
எலியைப் போல் பிறாண்ட ஆரம்பித்தான்.
சத்தம் கேட்டு அந்த வேலைக்காரி கதவைத் திறந்தாள். திறந்து உள்ளே யார் இருக்கிறார்கள் என்று மெழுகுவர்த்தியால் பார்க்க முயன்றாள்.
உடனே அவன் அந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு அந்தப் பெண்ணைத் தள்ளிவிட்டுவிட்டு ஓட ஆரம்பித்தான்.
விளக்குகளையும் வேல் கம்புகளையும் எடுத்துக் கொண்டு பத்து பேர் அவனைப் பின் தொடர்ந்து ஓட ஆரம்பித்தார்கள். அவன் எப்படியும் பிடிப்பட்டுவிடுவான் என்று அவர்கள் நினைத்தார்கள்.
அப்போது வழியில் ஒரு பாழுங் கிணற்றைப் பார்த்தான். பக்கத்தில் இருந்த ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி அந்த கிணற்றில் போட்டான். அது பெரிய சத்தத்துடன் உள்ளே விழுந்தது. அருகில் இருந்த மரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கத் தொடங்கினான்.
அவனைத் துரத்தி வந்தவர்கள் அவன் கிணற்றில் குதித்துவிட்டான் என்று நினைத்தார்கள்.
"இனிமேல் அவனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்அவன் கிணற்றில் குதித்துவிட்டான். காலையில் வருவோம்
அவனை வெளியில் எடுப்போம். உயிருடன் இருந்தால் காவலர்களுக்குச் சொல்லியனுப்பி அவனைச் சிறையில் அடைப்போம். அவன் செத்திருந்தால் அவனுக்கு ஏற்கனவே கிடைத்துவிட்டது என்று நினைத்துக் கொள்ளலாம். வாருங்கள் போகலாம்.'
மகன் வீடு திரும்பினான். அவனுடைய தந்தை கம்பளியைப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். கோபத்தில் கம்பளியை உருவிப் போட்டான் மகன்.
"உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்துவிட்டது? அப்படிச் செய்தீர்கள்?”
"அப்....பா. நீ திரும்பி வந்துவிட்டாயா? அது போதும். நீ பிறவிக் கள்ளன் தான் என்பதை இப்போது ஒத்துக் கொள்கிறேன். நாளை முதல் நீ தனியாகத் தொழில் செய்யத் தொடங்கலாம். இந்தத் தொழிலின் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டுவிட்டாய்.
"எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை மகனே! நான் உன்னை வைத்துச் சூதாடினேன். இந்த சூதில் நான் தோற்றால் உன் கதை முடிந்திருக்கும். நீ உயிருடன் திரும்பிவிட்டாய் என்றால் நான் சூதில் ஜெயித்துவிட்டேன் என்று அர்த்தம்.
"இப்போது நீ வந்துவிட்டாய். நான் ஜெயித்துவிட்டேன். இப்போது என்னைத் தொந்தரவு செய்யாமல் போய்த் தூங்கு. நாளை காலை நீ எப்படி தப்பித்தாய் என்று எனக்குச் சொல்ல வேண்டும் என்று தோன்றினால் சொல்லு.
ஆனால் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும். விவரங்கள் தெரியாதேயொழிய சாரம் தெரியும். அதுவே எனக்குப் போதும். இதுதான் என் தொழில். இதுதான் என் கலை. நீ இதில் கைதேர்ந்துவிட்டாய். நாளையே நான் செத்தாலும் சந்தோஷமாகச் சாவேன்.
“என் கலை என் வாரிசிடமும் இருக்கிறது என்று நிம்மதியாகச் சாவேன். இப்படித்தான் என் தந்தை எனக்கு தொழில் கற்றுக் கொடுத் தார்.
இந்தத் தொழிலைக் கற்றுக் கொள்ள இந்த ஒரு வழிதான் இருக்கிறது. ஆபத்துக்களை நேரில் சந்திப்பதுதான் அந்த வழி.
தியானமும் அப்படித்தான்.திருடன் கூட ஞானியாகலாம். திருடன் கூட இந்த தருணத்தில் வாழலாம். திருடன் கூட மனம் என்னும் சுமையை உதறித் தள்ளிவிட்டு ஞானியாகிவிடலாம்.
அதனால்தான் நான் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்பது பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை.
தீட்சை வேண்டும் என்று என்னைத் தேடி வருபவர்களுக்கெல்லாம் நான் தீட்சை தருகிறேன்.
அவர்கள் என்ன தொழில் புரிகிறார்கள் என்று ஒரு போதும் நான் கேட்டதேயில்லை. வருபவர்களில் சிலர் அவர்களாகவே, "ஓஷோ, நான் குடிகாரன். அதனால் பரவாயில்லையா?” என்று கேட்பார்கள். இன்னும் சிலர் தங்களைத் திருடர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள்.
நான் கொலைகாரன் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் கூட என்னிடம் தீட்சை பெற்றிருக்கிறார்கள். 'நான் இப்போது தான் ஜெயிலில் இருந்து விடுதலையானேன் என்று சொல்லிக் கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள்.
அவர்களிடம் நான் இதைத்தான் சொல்வேன்.
“எனக்கு விவரங்கள் தேவையில்லை. நீங்கள் இதுவரை ஒரு மாதிரியான தூக்க நிலையில்தான் வாழ்ந்து வந்திருக்கிறீர்கள். அந்த நிலையில் நீங்கள் செய்த செயல்களில் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.
நீங்கள் பாவியாக இருந்தாலும் சரி, பரோபகாரியாக இருந்தாலும் சரி, நீங்கள் புனிதராக வாழந்திருந்தாலும் சரி, சாத்தானின் பிரதிநிதியாக இருந்தாலும் சரி, எனக்கு எல்லாம் ஒன்றுதான்."
தன்னுணர்வு இல்லாமல் செய்த செயல்களில் என்ன பெரிதாக வித்தியாசம் இருந்துவிடப் போகிறது? ஒருவன் தான் பாவங்கள் செய்ததாக கனவு கண்டிருக்கலாம். மற்றொருவன் கொலை செய்வதாகக் கனவு கண்டிருக்கலாம்.
இன்னும் ஒருவன் தான் தூயவனாக வாழ்ந்ததாக கனவு கண்டிருக்கலாம். தூக்கம் கலைந்தவுடன், காலையில் விழிப்பு வந்தவுடன் எல்லாரும் ஒன்றுதான்.
கனவில் கொலை செய்தவனுக்குத் தண்டனையும் கிடைக்கப்போவதில்லை. தூய்மையான வாழ்க்கைக்குப் பரிசும் கிடைக்கப்போவதில்லை.
நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். மனதை கைவிட்டால் போதும். நீங்களும் சத்தியத்தை அடையலாம்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

இறைவனின் விலை ஒரு ரூபாய்

இறைவனின் விலை ஒரு ரூபாய்   பேசாலைதாஸ்

எட்டு வயது சிறுவன் கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான்.
சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர் சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார்.
சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான்.
பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன் அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான்.
அதற்கு கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு அந்த இறைவனை வைத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுள்ளார்.
அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான் சாப்பாடு ஊட்டுவது முதல் தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது வரை என் தாய் தான்.
தற்போது அவர் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார் என்று கூறி விட்டனர்.
அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான்.
அதற்கு அந்த கடைக்காரர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவனைத் தானே வேண்டும் நான் தருகிறேன் என்று கூறி அவனை உள்ளே அழைத்து அவனிடம் ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் கொடுத்தார்.
இதைக் கொண்டு போய் உன் தாயிடம் குடிப்பதற்கு கொடு உன் தாய் குணமாவார் என்று கூறி அனுப்பி வைத்தார்.
மறுநாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயை சிறப்பு மருத்துவர்கள் வந்து அறுவை சிகிச்சை செய்தனர்.
சிறுவனின் தாய்க்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
தாயும் உயிர் பிழைத்தார் அவரிடம் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிகிச்சைக்கான பில் காட்டினார்கள்.
தனக்கு சிகிச்சை செய்த செலவுத் தொகையை கண்ட அந்த ஏழைத்தாய் அதிர்ந்து போனார்.
ஆனால் மருத்துவர்கள் அந்த ஏழைத் தாயிடம் கவலை படாதீர்கள், உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் ஒருவர் மருத்துவமனையில் செலுத்தி விட்டார்.
அவரே உங்களிடம் கொடுக்க சொல்லி ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார் என்று கூறி அந்த கடிதத்தை தாயிடம் கொடுத்தனர்.
அதை வாங்கி படித்தார் தாய். அதில் நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது எனக்கு அல்ல நான் ஒரு நிமித்தம் (கருவி) மட்டுமே.
ஆனால்,
ஒரு ரூபாய்க்கு இறைவன் வேண்டுமென்று கடை வீதியில் நம்பிக்கையோடு அலைந்த உங்கள் அப்பாவி மகனுக்கு தான் நன்றி கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனதில் நம்பிக்கை இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட இறைவன் கிடைப்பார்...
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

மணவாட்டி பேசாலைதாஸ்

மணவாட்டி  பேசாலைதாஸ்  ஓர் ஊருக்கு அழகான பெண்ணொருத்தி, எங்கிருந்தோ சட்டென வந்து தோன்றினாள். அவள் எங்கிருந்து வந்தாள், அவள் யார் என்ற விபரங்கள...