சுயநீதி பேசாலைதாஸ்
நமக்குள் இருக்கும் பெரும் பிரச்சனை என்ன தெரியுமா? நாம் சரியாகத்தான் சிந்திக்கின்றோம் செயல்படு கின்றோம், மற்றவர்களின் புரிதல் தான் தவறாக இருக்கின்றது என்று சதா நமது மனம் நம் செயலை நீதியானது சரியானது என நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கின்றது. நாம் பலவீனமான வர்கள் தவறுகள் நம்மை அறியாமல் நடக்கக்கூடும், அதற்காக நாம் மன்னிப்பு கேடகவேண்டும் என்பதை நமது மனம் மறுக்கி ன்றது.
ஒரு முறை,முல்லாவின் முதலாளி அவரை ஏன் முல்லாவை பார்த்து ஏன் லேட்டாக வருகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு முல்லா, நீங்கள் தான் அதற்கு காரணம்.இங்கே ஆபீஸில் வாட்சைப் பார்க்கக் கூடாது என்று நீங்கள் கூறியிருப்பதால் அதே வழக்கம் வீட்டிலும் தொடர்கிறது. அங்கேயும் வாட்சை நான் பார்ப் பதில்லை என்று பதில் சொன்னான்.
இது போல இன்னுமொரு சம்பவம் முல்லாவின் வாழ்க்கையில் நடந்தது, தன்னிடம் புதிதாக வேலைக்கு சேர்ந்த முல்லாநசுரூதீனிடம் முதலாளி, நீங்கள் முன்பின் எங்கேயும் வேலை செய்த அனுபவம் இல்லாத போது என்ன காரணத்தால் என்னிடம் ஐந்து வருடம் வேலை செய்த அனுபவம் இருப்பதாக கூறினீர்கள் என்று கேட்டார்.
நீங்கள்தானே கற்பனை வளமுள்ள ஆள் வேண் டும் என்று விளம்பரம் செய்திருந்தீர்கள் என்று பதில் சொன்னான்.
இப்படித்தான் மனம் எப்போதும் உன்னை நியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. எனவே நம்மனதை அதன் பாட்டில் செயல் படுவதி நிறுத்தி நியாயமுடன் செயல்படுவோம்
அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக