பின் தொடர்பவர்கள்

திங்கள், 14 அக்டோபர், 2019

0027 ஆன்மாவே உன் பிரதிபலிப்பு

உன் ஆன்மாவே உன் பிரதிபலிப்பு     பேசாலைதாஸ்  

                                           
ஆன்மா அது ஒன்றே நமது ஆளுமையின் பிரதிபலிப்பாகின்றது  "ஆத்மாவில் மையம் கொண்டிருங் கள். அதைப் பற்றிய விவாதங்களை வலியு றுத்தாதீர்கள்.'-  கோரக்க சித்தரின் சூத்திரம் ஒன்று கூறுகின்றது  ஆன்மா (இருப்பு,BEING) என்பதே உண்மை.அது வெறுமனே கண்ணாடி.அதன் மேல் 'நான்' என்ற அகந்தை எதனைப் பதிகிறதோ அதனை அது பிரதிபலிக்கிறது.நான் இஞ்சினியர் என்று நீ எண்ணினால் அது உன்னை இஞ்சினி யராகக் காட்டும்.நான் டாக்டர் என்று நினைத்தால் அது உன்னை டாக்டராகக் காட்டும்.நீ எதனை மனதில் பதிகிறா யோ அதுவாகவே நீ ஆகி விடுகிறாய்.சமயங்களில் நீ எதிர் பாராமலேயே ஒரு விபத்தைப் போலவும் உனது பிம்பம் உருவாகி விடும். அதற்கு ஒரு உதாரணமே இவ்த்தை சந்தர்ப்ப கதை!
                      கூச்ச சுபாவம் உள்ளவன் அவன்.முதல் தடவையாகக் கல்வி கற்க ஆக்ஸ்ஃபோர்ட்  பல்கலைக் கழகத்துக்குள் வரு கிறான்.அங்கிருந்த எழுத்தர் அவனிடம் 'நீ என்ன பாடம் படிக்க விரும்புகிறாய்?'என்று கேட்க அவன் 'THEOLOGY' என்று கூற, எழுத்தர் அவன் சொன்னதை ' GEOLOGY ' என்று புரிந்து கொண்டு படிவத்தில் நிரப்புவதைப் பார்த்தும் இவன் ஒன்றும் சொல்லாமல் இருந்து விடுகிறான்.நம் ஆள்தான் கூச்ச சுபாவம் உள்ளவனாயிற்றே!

                                       அது மட்டுமல்ல ஆறு வருடங்கள் கழித்துத் தேர்வுகளில் தங்கப் பதக்கம் வாங்கும் அளவுக்கு மதிப்பெண் கள் பெற்று உலகப் புகழ் பெற்ற மண்ணியல் துறை விஞ்ஞா னியாக ஆகிறான்! கடவுளைப் பற்றிப் படிக்கப் போன வன் வாழ்க்கை முழுதும் மண்ணைப் பற்றி ஆராய்ந்து கொண்டி ருக்கிறேன் என்று பின்னாளில் அவன் சொல்கிறான். எனவே  நீ யார் என்று,யார் அல்லது எது தீர்மானிக்கிறது? ஆழ்ந்த உறக்கத்தில் நீ இஞ்சினியரோ, டாக்டரோ வணிகரோ இல்லை.
பிறப்புக்கு முன்,இருந்தது யாரோ அதுதான் நீ. கருவாக உன் தாய் வயிற்றில் இருந்ததுதான் நீ . இறப்புக்குப் பின் நீ யாராக இருக்கப் போகிறாயோ அதுதான் நீ. மீதி அனைத்து 'நீ'' களும் விபத்துக்களே. அந்த உண்மையான ஆன்மாவில் மையம் கொண்டிருக்கின்றது   
அன்பின் பேசாலைதாஸ்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...