தந்தை செயல் மிக்க மந்திரமில்லை! பேசாலைதாஸ்
நெப்போலியன் தன் படையில் பணிபுரியும் வீரனின் வீட்டிற்கு சென்று அவ்வீரனுக்கு அதிர்ச்சியான ஒரு.மகிழ்ச்சியை தருவோம் என்ற எண்ணம் வந்தது ஏனெனில் அவ்வீரன் மிகுந்த பணிவும் கட்டுப்பாடும் உடையவன்
ஒரு நாள் எந்தவித அறிவிப்புமின்றி படைவீரனின் வீட்டிற்கு சென்றான்
எப்பபோதும் மரியாதை செலுத்தும் வீதமாக சல்யூட் செய்யும் அவ்வீரன் அன்று அம்மரியாதையை செய்யவில்லை
வேறொரு நாள் அவ்வீரனை அழைத்தான் நெப்போலியன்
ஏன் உன் வீட்டிற்கு
வந்த போது எனக்கு மரியாதை செய்யவில்லை?
எப்போதும் மரியாதை தரும் பண்புள்ள உனக்கு என்னவாயிற்று எனக்கேட்டான்
அதற்கு அவ்வீரன் சொன்னான் அன்று வீட்டில் என் குழந்தைகளும் மனைவியும் எனது பெற்றோர்களும் இருநதனர்
அவ்வீட்டின் தலைவன் நான்
உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்கவர் என் தந்தையே என என் குழந்தைகள் நம்பிக்கை கொண்டு வளர்ந்து வருகின்றனர் .
அவர்களின் நம்பிக்கையை நான் பொய்யாக்க விரும்பவில்லை
என் வீட்டின் தலைவன் நானே
நெப்போலியன் .
அவ்வீரனை பாராட்டினான்
தன் மீது.நம்பிக்கை வைக்காதவன். நல்ல வீரனாக இருக்க முடியாது உன்னை படைப்பிரிவின் தலைவனாக நியமிக்கிறேன் என்றான்
நமது மரியாதையை காப்பாற்றுவதும் வீரமே.. அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக