அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)பேசாலைதாஸ்
நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்துக்கொள்கின்றது. நான் மிக அவதானமாக கார் ஓட்டிக் கொண்டிருந்தேன்.பயணிகள் யாருமில்லை.
செல்போன் சிணுங்கியது. யார் என்று திரை பார்த்தேன்.மகள் மேரியிடம் இருந்து அழைப்பு.
முதலில் இந்த மேரியைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவரச வேலைக்காக நான் நாட்டுக்கு சென்றிருந்தேன், அப்போதுதான் நான் அவளை பார்த்தேன், ரெம்ப சுட்டியான, சமர்த்தான பொன்னு. ஆனால் கண்களில் ஒரு சோகம், அவளிடம் மனம்விட்டு கதைத்தேன், அப்போதுதான் கண்களின் சோகத்துக்கான காரனம் புரிந்தது, அவள் அப்பாவின் பாசத்துக்காக ஏங்கியவள், அவளது அப்பாவும் ஓராண்டுக்கு முன்னர் விபத்தொன்றில் அகால மரணமானார். அவள் தன் ஏக்கங்களை சொல்ல சொல்ல, என் மனம் கசிந்துருகியது. " இனிமேல் அப்பா இல்லை என்ற கவலையை விடு, அப்பாவாக நான் இருக்கின்றேன் என ஆறுதல் சொன்னேன், அந்த வார்த்தைகளை அவள் மலை போல நம்பிவிட்டாள்!
காரை ஓரம்கட்டி விட்டு, என்னம்மா என்றேன். போனிலே மகள் படபடவெனப் பொரிந்தாள். "அப்பா 28 - ம் தேதியோடு பப்ளிக் எக்ஸாம் முடிகிறது. ஒரு மாதத்துக்குள்ளே பரீட்டை முடிவுகள் வந்ததுவிடம், அத்தோடு எனக்கு பிறந்த நாளும் வருகின்றது. எனக்கு புதிய உடை வேண்டும் " என்றாள்.
"பிறந்தநாள் வருவதற்கு, இன்னும் 26 நாட்கள் இருக்கின்றன, மேலும் இப்போது என்னிடம்பணமும் இல்லை. உன் பிறந்த நாளில் நான் அங்கு நிற்பேன் " என்றேன்."அதெல்லாம் எனக்குத் தெரியாது நீங்கள் வந்தே ஆகவேண்டும், எனக்கு புது ஆடை வாங்கித்தரவேண்டும் இல்லை என்றால் இனிமேல் பேசவே மாட்டேன் " என்றபடி அலைபேசியை அணைக்கிறாள். அவள் சொன்னபடியே அங்கே சென்றேன், என் கையில் ஒரு ரூபாய் கூட இல்லை, என் வங்கி அட்டை ஏனோ இலங்கையில் இயங்க மறுத்துவிட்டது.
மேரியின் அம்மாவை தனியே அழைத்து " வங்கி அட்டை விடயத்தை சொன்னேன். உன்னிடம் ஏதாவது இருக்கிறதா " என்றேன். அவள் உதடு சுழித்து கைகளை விரித்த போது பரிதாபமாக இருந்தது. நான் கொடுத்தால்தானே அவளிடம் இருப்பதற்கு ! சட்டியில் இல்லாமல் அகப்பை யில் எப்படி வரும்?
மறுநாள் துணிக்கடைக்குப்போகும் வழியில் மகளி டம் சொன்னேன் -"இம்முறை சிம்பிளாக எடு அடுத்த முறை காஸ்ட்லியாய் வாங்கித் தருகிறேன் " என்று. "ம்ம்.....பார்க்கலாம்" என்றாள். கடைக்குள் நுழை ந்ததும் விலையுயர்ந்த பகுதிக்கு சென்று வேலைப்பாடுகள் மிகுந்த ஆகாய நீல வண்ண உடையை எடுத்து வருகிறாள் விலை பார்த்து அதிர்ந்தேன்,
இரண்டாயிரம் என்றிருந்தது. "இத்தனை பணம் இல்லையே "என்று நான் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளாமல் காசாளரை நோக்கி நடக்கிறாள். பதைபதைத்தபடி பின்னாலேயே ஓடினேன். தன் சுடிதார் ஜேப்பிலிருந்து ஐந்து பத்து ஐம்பது நூறென்று இரண்டாயிரத் தையும் எண்ணிக் கொடுத்தவள் உடையை வாங்கித் திரும்புகிறாள். நானோ விக்கித்து நிற்கிறேன்.
வீடு திரும்பும் வழியில் கேட்டேன் - "ஏது இத்தனை பணம் " என்று."அப்பா நான் பள்ளி முடிந்ததும், சைக்கிலிலே பேப்பர் போடு வேன், அதில் கிடைத்த பணத்தை சேர்த்து வைத்தேன் அப்பா. நம் குடும்ப நிலைமைக்கு புதிய உடை எடுக்க இஷ்டமில்லைதான் எனக்கு. ஆனால் என் தோழிகள் பிறந்த நாளின் போது புதிய உடை போட்டு வந்து என் அம்மா வாங்கித் தந்தது என் அப்பா வாங்கித் தந்ததென்று பெருமையாய் சொல்லும் போது அந்தப் பெருமை உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத் தேன். எங்களுக்காக காலமெல்லாம் கஷ்டப்படும் உங்களுக்காக இந்த உதவி யைக் கூட செய்யாட்டி எப்படி அப்பா ! நான் செய்தது தப்பா !? " என்றாள் அப்பாவியாய்.
"இல்லை மகளே " என்று அவள் தலையை மெல்ல வருடி என் தோள் சாய்த்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டேன், முட்டி வரும் கண்ணீர் - வெளியே கொட்டி விடாதபடி.........
மாலையில் தன் வீட்டிற்கு வந்த தோழிகளிடம் புதிய உடையைக் காட்ட பிரமிப்புடன் பார்த்து "ஐயோ செம சூப்பர்டி " என்றனர். "என் அப்பா வாங்கித் தந்தது, அப்பா உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தியும் இருக்கு அப்பா நான் பரீட்ச்சையில் பாஸாகி, சட்டக்கல்லூரிக்கும் இடம் கிடைச்சிருக்கு அப்பா " என்றபடியே ஓடோடி வந்து அன்பாய் என் கை பற்றுகிறாள்.ஏனோ தெரியவில்லை -இறந்து போன என் தாயின் வாஞ்சை யான ஸ்பரிசத்தை உணர்கிறேன் நான் !! அன்புடன் பேசாலைதாஸ்👍
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக