Followers

Monday 21 February 2022

பிரதிபலிப்பு

பிரதிபலிப்பு பேசாலைதாஸ்


காட்டில் பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்த சமயத்தில் பாண்டவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று போய் பார்த்து விட்டு வரலாம் என்று கிருஷ்ணர் நினைத்தார். உடனே புறப்பட்டு காட்டுக்குப் போனார். அவர்களைப் பார்த்தார். அவர்களுடன் ஒரு இரவு தங்கினார்.

 அப்போது பஞ்சபாண்டவர்கள் அவருக்கு காவல் காத்தார்கள். இரவு ஒருவர் மாறி ஒருவர் கண்முழித்து காவல் செய்ய வேண்டும். முதலில் அர்ஜுனன் காவல் காத்தான். எல்லோரும் தூங்குகிறார்கள். அவன் மட்டும் முழித்துக் கொண்டிருக்கிறான். அப்போது எதிரிலே ஏதோ ஒரு உருவம் தெரிந்தது. உற்றுப் பார்த்தான். அது ஒரு பூதம். அதுபாட்டுக்கு எதிரில் கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டிருந்தது. இவன் நேரம் முடிந்துவிட்டது. அடுத்தபடியாக நகுலன் காவல் காக்க வந்தான். இப்போதும் அந்த பூதம் கண்ணில் பட்டது. ஆனால் அது முதல் இருந்ததை விட கொஞ்சம் பெரிதாக இருந்தது. அடுத்தபடியாக சகாதேவன் , பீமன் , தருமன் இப்படி மாறி மாறி காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். அந்த பூதத்தின் வடிவம் பெரிதாகிக்கொண்டே வந்தது. ஒவ்வொருவரும் அதை கொல்ல முயற்சி செய்தார்கள்.

இரவு காவல் பணியில் பாண்டவர்கள் இப்படி மாறி மாறி இருப்பதை பார்த்ததும் கிருஷ்ணர் தர்மரைப் பார்த்து கேட்டார் ' இந்த காவல் பணியில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா? நானும் கொஞ்ச நேரம் கண் விழித்து காவல் காக்கிறேன் '.

 இதற்கு தர்மர் சொன்னார் " செய்யுங்கள். இந்த உலகத்தையே பாதுகாப்பதும் நீங்கள்தான். பாண்டவர்களை பாதுகாப்பதும் நீங்கள்தான். இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதை வேண்டாம் என்று சொல்வதற்கு நாங்கள் யார்? " என்றார்.

 ஒவ்வொருவராக காவல் காத்து முடிந்ததும் போது கிருஷ்ணர் வர வேண்டிய முறை. காவலுக்கு கிருஷ்ணர் புறப்பட்டார் .

இப்போது தர்மர் சொன்னார் " கிருஷ்ணா காட்டிலே ஒரு பெரிய பூதம் இருக்கிறது. அது வரவரப் பெரிதாகி கொண்டே வருகிறது. அது உங்களுக்கு ஏதாவது இடைஞ்சல் கொடுக்கும். அதனாலே நீங்கள் போகாமல் இருப்பது நல்லது " என்றார். 

அதற்கு கிருஷ்ணர் இப்படி என்மேலே உனக்கு சந்தேகம் வரலாமா?  ஏன் இப்படிப்பட்ட சந்தேகம். அது உன்னுடைய பலவீனம். நான் நிச்சயமாக காவல் பணி செய்யத்தான் போகிறேன் என்றார்.

 2 மணியிலிருந்து 3 மணி வரைக்கும் அவருடைய நேரம். 3 மணிக்கு மேலே அர்ஜுனன் வர வேண்டும். அதனால் மூன்று மணிக்கு அர்ஜுனன் வந்தான். அர்ஜுனன் வந்து பார்க்கிறான் கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே இருக்கிறார். அவன் பார்க்கிறான் பூதத்தையும் காணும் பிசாசும் காணோம்.

அர்ஜுனன் கேட்கிறான் " அந்த பூதத்தை அழித்து விட்டாயா? " 

இப்போது கிருஷ்ணன் சொல்கிறார் அர்ஜுனா நான் எந்த பூதத்தையும் பிசாசையும் பார்க்கவில்லை. என் கண்ணுக்கு அப்படி எதுவும் தெரியவில்லை. எதுவுமே நம்முடைய பிரதிபலிப்புதான். நம்முடைய கோபம் தான் நமக்கு முன்னால் அரக்கத்தனமாக காட்சியளிக்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு கோபம் அதிகரிக்கிறதோ அந்த அளவுக்குச் சமமாக அதுவும் வளர்கிறது. எனக்கு யார் மீதும் கோபமோ வெறுப்போ இல்லை.

 உண்மையிலேயே நமக்குன்னு யாரும் எதிரிகள் கிடையாது. நம்முடைய குணங்கள் தான் நமக்கு எதிரிகள். உள்ளே இருக்கிற உணர்வுகள் தான் நமக்கு பிரதி பிம்பமாக வெளியே தெரிகின்றன. வெறுப்பே இல்லாமல் எல்லாத்தையும் அன்பால் நிரப்பும்போது நம் கண் முன் அன்புதான் தெரியும் அரக்கன் தெரியமாட்டான் என்றார்.

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...