Followers

Tuesday 8 February 2022

முயற்ச்சி திருவினையாக்கும்!

 முயற்ச்சி திருவினையாக்கும்!பேசாலைதாஸ்


                                           ஒரு ஊரிலே ஒரு மலை, அந்த மலையிலே ஒரு கழுகு வசித்து வந்தது, அந்த கழுகுக்கு கடவுள் மீது கண்மூடித்தனமான பற்று. ஒரு முறை கழுகு நினைத்தது, கடவுள் எல்லாம் அறிவார், எல்லோருக்கும் படியளப்பவன் என்று எண்ணி, ஒரு தீர்மானம் செய்தது, இன்று நான் உணவுக்காக எங்கும் பறந்து போவதில்லை, இந்த மலையில் உள்ள ஒரு பாறை மீது அமர்ந்து, கண்களை மூடியபடி, தியானத்தில் அமர்ந்து இருக் கப்போகின்றேன் என தீர்மானம் செய்து, அந்த தீர்மானம் சரிதான என நிச்சயிக்க, இறைவனைப்பார்த்து கேட்டது.

                                                  வானத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது, ஆம் உன் தீர்மானம் சரிதான் என்றது அந்த குரல். கழுகும் தியானத்தில் கண்களை மூடியபடி தியானத்தில் அமர்ந்தது, நேரம் செல்ல செல்ல கழுகுக்கு உணவு கிடைக்கவில்லை, மதியமாகி மாலையும் வந்துவிட்டது.கழுக்கு செம பசி யாகிவிட்டது. இறைவா என்னை ஏமாற்றிவிட்டாயே என்ற து கழுகு. 

அப்போது வானத்தில் இருந்து மீண்டும் அந்த குரல் ஒலித்தது, கழுகே உனக்கு உணவை நீ நினைத்த மாத்திரத்திலே தந்துவிட்டேன். திரும்பிப் பார் என்றது அந்த குரல், கழுகு திரும்பிப்பார்த்தது அங்கே ஒரு பெரிய பெருச்சாளி எலி செத்துக்கிடந்தது. அன்பர்களே நம்மில் பலபேர் இப்படி த்தான் இந்த கழுகு போல, கடவுளை மட்டும் நம்பி, வறுமையில் வாழ்பவர் பல்ர், கடவுள் நம்பிக்கை மட்டும் போதாது, நமது முற்ச்சியும் உழைப்பும் அவசியம் அப்போதுதான் வினை திருவினயாகும். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்ச்சி மெய்வருந்த கூலி தரும். அன்புடன் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...