Followers

Wednesday 15 December 2021

திட்டம் போட்டுச் செய்கிற உதவி


திட்டம் போட்டுச் செய்கிற உதவி பேசாலைதாஸ்
அன்பர்களே நாம் செய்யும் உதவிகளை தர்மம் என்ற கணிப்பில் சிலர் தவறாக புரிந்து கொள்கி ன் றார்கள். தமது சொந்தங்கள், உறவுகளின் வாழ்வு மேம்பட புலம் பெயர்ந்த உறவுகள் நிறைய உதவிகள் செய்கின்றார்கள், இறுதியில் அந்த உதவியினால் மனம் நொந்து இருக்கின்ற உறவுகளும் அறுந்துபோன கசப்பான அனுபவ ங்கள், உங்களில் பலருக்கு இருக்கக்கூடம், கடைசி யில், போகட்டும் புண்ணியமாவது கிடைக்கட்டும் என்று நீங்களே உங்கள் மனதை தேற்றிக்கொள் வீர்கள். உண்மை இதுதான் உங்களுங்கு புண்ணி யமும் கிடைக்கப்போவதில்லை, காரனம் அதை நீங்கள் திட்டம் போட்டு, ஏதோ ஒரு சுயநலத்திற்காக் செய்த உதவிகள், புண்ணியக்கணக்கில் சேர்க்க முடியாது என சித்திரகுப்தன் சொல்லுவார். இதை விளக்க அழகான சம்பவத்தை கதையாக சொல்கின்றேன்.

                                                              ஆலயம் ஒன்றில் ஆன்மிக உபதேசம் நடந்து கொண்டிருந்தது. ‘‘அடுத்தவர்களுக்கு உதவுங்கள்... ஆண்டவன் உங்களு க்கு உதவுவார்!’’ கூட்டம் முடிந்ததும் மூன்று இளைஞர்கள் எழுந்து வந்த னர். ‘ஐயா! உங்கள் உபதேசப்படி நடக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும்... எப்படிச் செய்ய வேண்டும்... சொல்லு ங்கள்... செய்கிறோம்!’’ ‘‘எது வேண்டுமானாலும் செய்யலாம். இப்ப உதாரணத்துக்கு, வயசான ஒரு பெரியவர் சாலையைக் கடக்கறதுக்கு நீங்க உதவலாம்!’’ இளைஞர்கள் ஆர்வத்தோடு போனார்கள்.

                                                          அடுத்த வாரம் திரும்பி வந்தார்கள். பெரியவர் கேட்டார்.  ‘‘என்ன... யாருக்காவது உதவி செய்தீர்களா?’’  ‘‘செய்தோம்!’’ என்றார்கள் மூன்று பேரும். ‘‘என்ன செய்தீர்கள்? ஒவ்வொருவராக வந்து சொல்லுங்கள்... பார்க்கலாம்!’’ முதல் இளைஞன் வந்தான்.  ‘‘முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க நான் உதவினேன்!’’ பெரியவருக்கு மகிழ்ச்சி யாக இருந்தது.  உபதேசத்துக்குத் தக்க பலன் கிடைத்ததாக உணர்ந்து பெருமைப்பட்டார். 

                                                         அடுத்த இளைஞனைக் கூப்பிட்டுக் கேட்டார்: ‘‘நீ என்ன செய்தாய்?’’  ‘‘நானும் வயசான பெரியவர் ஒருவர் சாலையைக் கடக்க உதவினேன்!’’ பெரியவர் கொஞ்சம் யோசித்தார். அப்புறம் அடுத்த வனை அழைத்தார்:  ‘‘நீ என்ன செய்தாய்?’’  ‘நானும் முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க உதவினேன்!’’ பெரியவருக்குச் சந்தேகம்.  ‘‘எப்படி இது... உங்க மூன்று பேருக்கும் மூன்று பெரியவர்கள் கிடைத்தார் களா?’  ‘‘அப்படியெல்லாம் இல்லை.. ஒரே பெரியவர்தான்!’’ ‘‘என்னது... அந்த ஒருத்தர் சாலையைக் கடக்க நீங்க மூணு பேர் தேவைப்பட் டதா?’’ ‘‘மூணு பேர் இருந்தும் அது சிரமமாத்தான் இருந்தது!’’  ‘‘என்ன சொல்றீங்க?’’ ‘‘அந்தப் பெரியவர் சாலையைக் கடக்க விரும்பலே... இருந்தாலும் வலுக்கட்டாயமா நாங்க அவரைத் தூக்கிக் கொண்டு போய் அடுத்த பக்கத்திலே விட்டோம்!’’

நண்பர்களே! ‘ஆண்டவனை உச்சரிக்கிற உதடுகளை விட அடுத்தவனுக்கு உதவுகிற கரங்கள் மேலானவை!’ என்று பெரியவர்கள் சொல்கிறார் கள். உண்மைதான்! ஆனாலும் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். திட்டம் போட்டுச் செய்கிற உதவி - அரசியல்திட்டம் போடாமல் செய்கிற உதவி - ஆன்மிகம்! நம்பிடம் உதவி பெறுபவர்கள் யார் எவர் என்று எமக்கு தெரிய க்கூடாது. நாம் செய்யும் உதவிக்கு பிரதி உபகாரம் எதிர்பார்க்கக்கூடாது. ஆனால் நன்றி உணர்வை எதிர்பார்க்கலாம், இயேசுவும் அப்படி எதிர்பார்த்தார். அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...