Followers

Wednesday, 15 December 2021

கணித மேதை இராமாநுஜம்

 கணித மேதை இராமாநுஜம் 

பற்றி ஓஷோ..

1887ல்  பிறந்தவர் ராமானுஜம்.

ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்த 

இவர் மேல் நிலை பள்ளிப்படிப்பை கூட தாண்டவில்லை.

ஒரு எழுத்தர் வேலைக்கு சேரவே 

படாத பட்ட இவர் யாருடைய வழிகாட்டலும் போதனைகளும் இன்றியே கணிதத்தில் கில்லாடியாக இருந்தார்.

இவர் பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர்கள் இவர் கணித 

திறமையை கண்டு அதிசயப்பட்டனர்.

அவர் அலுவலக மேலாளர் ஒருவர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக பேராசியர் ஹார்டியின் முகவரியை கொடுத்து 

கடிதம் எழுத தூண்டினார்.

ஆனால் இராமானுஜம் வெறும் கடிதமாக இல்லாமல் இரண்டு வடிவியல் தேற்றங்களுக்கு விடை கண்டுபிடித்து ஹார்டிக்கு அனுப்பினார்.

யாருயா அது இவ்வளவு கடினமான தேற்றத்தை சுலபமாக விடையளித்திருக்கிறானே அதுவும் சின்னப்பையன் என்று வேறு சொல்கிறான்.

அந்த செல்லத்தை கையோடு கூட்டினு வாங்கைய்யா என ஹார்டி தன் உதவியாளருக்கு கட்டளையிட்டார்.

இங்கிலாந்துக்கு பறந்தார் இராமானுஜம்.

முதலில் சோதித்த ஹார்டி இந்த பையன் முன்னிலையில் கணிதத்தில் தான் ஒரு பாப்பா என உணர்ந்தார்.

ஒரு கணக்கை கரும்பலகையில் எழுதினால் எப்படிப்பட்ட அறிவாளியாக இருந்தாலும் நிதானமாக யோசித்தே விடை சொல்வார்.

இராமானுஜம் கேள்வி கேட்டவர் முடிக்குமுன்னே சரியான விடையை 

சட்டென சொல்கிறார்.

அவன் சொன்னது சரியா என சோதிப்பதற்கு தான் அவருக்கு நேரம் பிடித்தது.

லண்டனில் வாழ்ந்து வரும் மற்றொரு கணித மேதைக்கும் இராமனுஜத்திற்கும் ஒரு சிக்கலான கணக்கை கொடுத்தார் ஹார்டி.

ஓரிரு  மணித்துளிகளில் இராமானுஜம் விடையை ஒரு தாளில் எழுதி கொடுத்துவிட்டார்.

அந்த மற்றொரு கணிதமேதை விடை கண்டுபிடிக்க ஆறு மணி நேரம் பிடித்தது.

மெட்ரிக் படிப்பில் தோற்றுப் போன 

ஒருவர் எப்படி கணிதத்தில் இவ்வளவு சாமார்த்தியமாக இருக்க முடியும் என சற்று குழம்பி தான் போனார் ஹார்டி.

மேலும் இராமானுஜர் மனதால் வேகமானவராகவோ அதிக மனோசக்தி உள்ளவராகவும் தெரியவில்லை.

இவர் மேதமைக்கு எந்த புறக்காரணமும் இருப்பதாக தெரியவில்லை.

மனதை கடந்த ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இராமனுஜத்திடம் இருப்பது மட்டும் ஊர்ஜிதமானது.

மிகுந்த பயிற்சியும் பெரிய மேதைகளிடம் பயின்றவர்கள்கூட இராமனுஜத்திடம் தோற்றுப்போவது வாடிக்கையாக மாறியது.

தனது முப்பத்து மூணாவது வயதில் எலுப்புறுக்கி நோயால் பாதிக்கப்பட்டார் இராமானுஜம்.

அவரை காண ஹார்டியும் ஒரு சில 

லண்டன் கணித மேதைகளும் 

அந்த மருத்துவமனைக்கு வந்தனர்.

அவர்கள் வந்த காரின் நம்பரை பார்த்த இராமனுஜம் நாலு சிறப்பு அம்சங்கள் உங்கள் கார் எண்ணில்  இருப்பதாக கூறினார்.

அங்கிருந்து விடைபெற்ற ஹார்டி 

குழுவினர் அந்த எண்களை வைத்து மூளையை கசக்கி பார்த்தும் 

அவர்களுக்கு விடைகிடைக்கவில்லை.

கொஞ்ச நாளில் இராமானுஜம் 

இறந்து போனார்.

அவர் இறந்து மூன்று மாதத்திற்கு பிறகு தான் அந்த எண்ணின் மூன்று சிறப்பு அம்சங்களை கண்டுபிடித்தார் ஹார்டி.

நாலாவது சிறப்பு  அம்சத்தை கண்டுபிடிக்க அவருக்கு இருபது ஆண்டுகள் பிடித்தது.

இவ்வளவு பெரிய அறிவாற்றல் இராமனுஜத்திற்கு எப்படி வந்தது 

என எந்த ஜாம்பவானுக்கும் இறுதிவரை விளங்கவில்லை.

இராமனுஜத்திடம் ஒரு கேள்வி கேட்டால் 

அவர் ஒரு நிமிடம் கண்ணை மூடுவார்.

அவர் இரண்டு கருவிழிகளும் புருவ மத்தியில் போய் சொருகிக்கொள்ளும்.

அப்போது புருவ மத்தியிலுள்ள ஒரு சிறு ஓட்டையிலுள்ள மூண்றாவது கண் திறந்து கொள்ளும்.

உடனே சரியான விடை தானாக வெளிவரும். 

அந்த நெற்றிக்கண் திறக்குமானால் சிக்கலான மண்டலங்கள் கூட தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.

நாமெல்லாம் ஒரு கதவின் சாவி ஓட்டை வழியே ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தான் பார்த்து வருகிறோம்.

நெற்றிக்கண் திறந்து கொண்டால் முழு வானமும் புலப்பட தொடங்கும்.

இந்த மூண்றாவது கண்ணை திறக்கும் முயற்சியாக தான் இந்துக்கள் குங்கும திலகத்தை புருவ மத்தியில் வைக்கிறார்கள்.

No comments:

Post a Comment

இந்த மிஷினைக் கண்டுபிடிச்சதே அவன் தான்.

இந்த மிஷினைக் கண்டுபிடிச்சதே அவன் தான்.   பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் வ...