பின் தொடர்பவர்கள்

திங்கள், 10 மே, 2021

தனக்குதவா தானம்!

தனக்குதவாத தானம்  பேசாலைதாஸ் 

வேடிக்கையாக ஜதார்த்த உண்மைகளை நச்சென்று சொல்வதில், முல்லாவை விட சிறந்தவர்கள் யாருமில்லை என்பது எனது தற்துணிபு, அவரது செயல் களை மேலோட்டமாக பார்த்தால் நகைப்பாக இருக்கும், ஆனால் கூர்ந்து அவ தானித்தால் அதில் ஒரு உண்மை புலனாகும். கீழே ஒரு சம்பவம், முல்லாவின் வாழ்வில் நடந்தது, இதில் ஏதாவது புரிகின்றதா என அவதானியுங்கள்

முல்லா தனது வீட்டின் கூறை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண் டிருந்தார் அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் , முல்லா மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம் “ என்ன விசயம் எதற்க்காக என்னை கிழே வருமாறு அழைத்தீர்கள் “ எனக்கேட்டார்.

அந்த சாமியார் “ நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன்! அதை சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது! அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன் , மன்னிக்கவும் “ என்றார்

உடனே முல்லா “ எடுப்பது பிச்சை இதில் போலி கவுரவம் வேறு ! சரி பரவாயில்லை என்னுடன் வா” என்று சொல்லிவிட்டு மீண்டும் கூறை மேல் ஏறினார். 

அந்த சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலை கஷ்டப்பட்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கோண்டு முல்லாவை தொடர்ந்தார்

சாமியார் மேலே வந்து சேர்ந்ததும் , முல்லா மீண்டும் தனது வேலையை பார்க்கத்தொடங்கினார்.

சாமியார் “ எனக்கு என்ன தருகிறீர்கள் ? “ எனக் கேட்டார் சற்று பொறுமை இழந்தவராக

முல்லா “ என்னிடம் கொடுப்பதற்க்கு ஒன்றும் இல்லை, sorry ! “ என்றார்

சாமியார் “ முட்டாள் ! இதை கீழேயே சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஸ்டப்பட வைத்து மேலே அழைத்தாய் ! “

முல்லா “ என் பக்கத்து வீட்டுக்காரன் இருந்தான் அவன் முன்னே ஒன்றும் இல்லை என சொல்ல வெட்க்கமாக இருந்தது அதான்- மற்றும் நான் கீழே வரப் பட்ட அனுபவத்தையாவது ( கஷ்டத்தையாவது) உனக்கு தானமாக கொடுக்கலாம் என்று உன்னை அழைத்தேன்! ஹீ ஹி… “ என்றார் அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...