பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 9 மே, 2021

தன்னைப்புகழாத கம்மாளன்

தன்னைப்புகழாத கம்மாளன் பேசாலைதாஸ்


தன்னைப்புகழாத கம்மாளன் இல்லை என்ற ஒரு முதுமொழி கேளவிப்பட்டிரு ப்பீர்கள். அந்த முது மொழி பற்றிய என் புரிதல் இது, நெருப்பில் நன்றாக பழுக்க காச்சிய இரும்பை கம்மாளன் அடித்து, செம்மையாக்கி, தான் விரும் பிய வடிவத்துக்கு கொண்டுவருவான், அந்த இரும்பு இழகி வேறு ஒரு வடிவத்து க்கு வந்தது, தான் அடித்த அடியினால் என்று தன்னைத்தானே கம்மாளன் புழுகிக்கொள்வான், இந்த கம்மாளன் போன்ற சிலரை நீங்கள் சந்தித்திருக்கக் கூடும், இப்படிப்பட்டவர்கள் தாங்கள் செய்த காரியம், வெட்கத்துக்குரியது, என்றாலும், தைரியமாக அதைப்பற்றி புழுகித்தள்ளுவார்கள். இவர்களைப் பார்க்கும் போது எனக்கு முல்லா செய்த செயல் ஒன்று நினைவுக்கு வரும்.

                                             முல்லா எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்பவர் , எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்படித்தான் ஒரு நாள் அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது....வழியில் எதோ ஒன்று கிடப்பதைக் காண்கி றார், அவர் அதனருகில் குனிந்து பார்த்தார் அவருக்கு அது என்ன வென்று தெரியவில்லை , பிறகு அதை கையில் எடுத்து வைத்து கொண்டு ஆராய்ந்தார் அப்போதும் அவருக்கு விளங்கவில்லை, அதை தனது மூக்கின் அருகில் எடுத் துச் சென்று முகர்ந்து பார்த்தார் , அவருடைய சந்தேகம் சிறிது தெளிவுபெற் றது  ஆனாலும் அவரால் அதை உறுதியாக்கிக் கொள்ள முடியவில்லை ,

                                         பிறகு அதிலிருந்து சிறிது பகுதியை எடுத்து தனது வாயில் போட்டுக் கொண்டார்  அவருடைய முகம் ஒரு தெளிவு பெற்றதைப் போல் பிரகாசித்தது பிறகு சொன்னார் " ஆஹா , நான் சந்தேகப்பட்டது சரிதான், இது சந்தேகமே இல்லாமல் மாட்டுச்சானம்தான். நல்லவேலை இது தெரியாமலிருந்தால் இதை காலில் மிதித்திருப்பேன் " என்று தன்னைத்தானே பாராட்டிக்க்கொண்டார்-  அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...