பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

00550 பதற்றத்தில் சிதறல்

 பதற்றத்தில் சிதறல் பேசாலைதாஸ்


பதட்டமும், மனஉளைச்சலும் பலரின் சிந்தனையை செயல் படாமல் வைத்து முன்னேற்றத் திற்கான வழியை அடைத்து விடுகிறது...பதட்டமும், மன உழை ச்சலும் பல்வேறு நிலை களில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக் கிறது. பதறாத காரியம் சிதறாது என்ற முதுமொழியும் உண்டு. யாராக இருந்தாலும், ஒரு சிக்கலில் நாம் பதறிப்போனால், அதுவே நமக்கு அழிவாக வந்து முடியும், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய் க்கு வித்தாகி விடக்கூடும். இதை அழகாக விளக்குவது இந்த கதை!

                                                                         உலகத்தையே வெற்றி கொள்ள நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலி யனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச் சிறையில் தனிமையில் வைத்தது.. சிறையில் மன் உளைச் சலில் அவரின் கடைசிக் காலம் கழிந்தது..அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவ்ர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையைக் கொடுத்தார்.

                                                      “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையைப் போக்கும்” என்று கூறி அவரிடம் கொடு த்தார். ஆனால் சிறைப்படுத்தி விட்டார்களே என்ற மன உளைச் சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் செல்லவில்லை. சிறிது கால்த்தில் இறந்தும் போனார். பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட்டது..

                                                                      அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்வதற்கு வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது... ஆனால் நெப்போலிய னிடம் குடிகொண்ட மன உளைச்சலும்..பதட்டமும் அவரின் சிந்த னையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது....

                                                               உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி....அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால்.,அதற்கு ஏற்படும் மன உளை ச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலிப் பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு., அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம் பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக் கொண்டு விடும்...

                                                            நேர்மன் கசின்ஸ்’ என்னும் அமெரிக்க நாவல் ஆசிரியர் 1983-ம் ஆண்டு தான் எப்படி மன உழைச்சலில் இருந்து மீண்டும் வந்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார். எளிய உடற்பயிற்சிகளைத் தவறாமல்  மேற்கொண்டேன். விளையாட்டு, நடைப் பயிற்சியும் மேற்கொண்ட பிறகு, மீதி நேரங்களில் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தேன். அதற்கென நகைச்சுவைப் படங்கள் டி வி -யில் பார்த்தேன். நகைச்சுவை வசனங்களை டேப் ரிக்கார் டில் கேட்டு மகிழ்தேன். என்ன ஆச்சரியம் ?  நாளடைவில் என் பதட் டமும்,மன உழைச்சலும் இருந்த இடம் சுவடே இல்லாமல் மறைந்து போனது என்றார்.. ஆம்.,நண்பர்களே., மாவீரனுக்கும் சரி.. சாதா ரண எலிக்கும் சரி... பதட்டமும், மனஉளைச்சலும் பலரின் சிந்த னையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத் திற்கான வழியை அடைத்து விடுகிறது... பதட்டமும், மனஉழைச்சலும் பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது.  அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக்கூடும். அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...