0038 இரண்டு பக்கம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்! பேசாலைதாஸ்
அன்பர்களே நமக்கு துன்பங்கள் துயரங்கள் சோதனைகள் வரும்போது, துவண்டு போகி ன்றோம். ஒவ்வொரு சிக்கல்களுக்கும் அத ற்கான தீர்வுகள் அந்த சிக்கல்கலுக்குள்ளே சிக்குண்டு இருபதை நாம் கண்டு கொள்வ தில்லை. சிக்கலின் முன்பக்கத்தை மட்டுமே நாம் பார்க்கின்றோம். ஆழமாக சென்று சீர்தூக்கி பார்பதில்லை. மாறுபட்டு சிந்திப்பதில்லை, மாற்று கருத்துக்களுக்கு நாம் இடம் கொடுப்பதில்லை. ஈழத்தமிழர் படும் துன்பங்களுக்கும் துயரங்க ளுக்கும் இதுவே காரனமாகைவிட்டது, இதை அழகாக விபரிக்கி ன்றடு இந்த சின்ன சம்பவம்!
தந்தை ஒருவர் ஆர்வமாக தனது விருப்பாமன பருவ இதழை வாசித்துக் கொண்டிருந்தார். அவரது சின்ன மகள் அவரை ஓயாது நச்சரித்து கொண்டிருந் தாள். சின்ன மகளின் நச்சரிப்பில் இரு ந்து தன்னை விடுவித்துக்கொள்ள, அவன் உலக வரைபடம் இருந்த ஒரு பேப்பரை எடுத்து அதனை துண்டு துண்டாக கிழித்து அதனை மகளிடம் கொடுத்து, உலக வரை படத்தை திரும்ப ஒன் றாக இணைக்கும் படி சொல்லிவிட்டு, மீண்டும் இதழுக்குள் ஆர்வ மாக தலையை செருகிக்கொண்டார். சில நிமிடங்கள் இருக்கும் சின்ன மகள், மிகச்சரியான உலக வரைபடத்தோடு அப்பாவின் முன் நின்றாள். ஆச்சரியத்தில் அகல வாய் திறந்த தந்தை, எப்படி உன்னால் இவ்வளவு சீக்கிரம் செய்ய முடிந்தது என்று கேட்டார். அதற்கு சின்ன மகள், ஓ அதுவா! பேப்பரில் அடுத்த பக்கத்தில் அமிர்தாப் பச்சனின் முகம் இருந்தது, நான் அவரது முகத்தை சரிசெய்து ஒட்டினேன். உங்கள் உலகப்படம் தானக வந்துவிட்டது என்று சொன்னாள் அந்த சின்னஞ்சிறிய குழந்தை. அன்பர்களே! வாழ்வின் ஒவ்வொரு சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. நாம் அனேகமான தடவை சிக்கல்களின் அடுத்தபக்கத்தை பார்க்காமல் அல்லல் படுகின்றோம். விவேகானந்தர் அழகாக சொன்னார். வாழ்வில் எப்போதும் இரண்டு பக்கம் , இரண்டு கதவுகள் உண்டு. நாம் அடைபட்ட கதவை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கின்றோம். வாழ்வில் எந்தவித முன்னேற்றம் இன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக