பின் தொடர்பவர்கள்

புதன், 10 மார்ச், 2021

066 நாம் செய்யும் தவறுகள் நமக்கு தெரிவதில்லை

 நாம் செய்யும் தவறுகள் நமக்கு தெரிவதில்லை


அன்பர்களே நாம் செய்யும் தவறுகள், நமக்கு தெரிவதில்லை, அதற்கு காரனம் நமக்குள்ளே இருக்கும் சுயநீதி. நான் நல்ல வன்,  நான் செய் வதெல்லாம் சரியானவை என்ற ஆணவம், இதனால் தான் மற்றவர்கள் கருத்துக்கு நாம் இடமளிப்பது இல்லை, இது சர்வசாதாரண மாக, ஈழத்தமிழரிடம் அதிகம் இருக்கின்றது. அது விடுதலை போராட்டத்திலும் பரிணமித் தது,  நாங்கள் செய்வதுதான் சரி என்று எண் ணிக்கொண்டு, ஈழத் தமிழ் இனத்தையே சாவு க்குழிக்குள்ளே தள்ளிவிட்ட நிலையும் உண்டு. அதை விளக்குவதே இந்த குட்டிக்கதை!

                                                                         ஒருமுறை செல்வந்தர் ஒருவரின் வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. 'நான் நம்ம வீட்டு தொலை பேசியை பயன்படு த்துவதே இல்லை. எல்லாவற்றிற்கும் அலுவலத் தொலை பேசியை த்தான் பயன்படுத்துவேன். ஆனா லும் இவ்வளவு தொகை வந்திரு க்கு, யார் இதற்கு காரணம்?' என்று யோசித்துக் கொண்டு தன் மனைவி யிடம் கேட்டார் குடும்பத் த‌லைவ‌ர். 'நானும் அலுவ லகத் தொலை பேசியை மட்டும பயன்படுத்துகி றேன். எனக்குத் தெரியாது' என்று அவர் மனைவி யும் கூறி விட்டு, மகனிடம் கேட்குமாறு கூறினார்.  ’நான் வீட்டு தொலைபேசியைத் தொடுவதே இல்லை. எனக்கு அலுவலகம் கொடுத்திருக்கும் கைத்தொலை பேசியில்தான், நண்பர்களிடம்கூட பேசுவேன் என்றார் மகன்.


                                                                   ‘நாம் யாரும் பயன்படுத்த லைன்னா எப்படி இவ்வளவு கட்டணம் வந்துள்ளது’ என தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த அந்த வீட்டு வேலைக்காரரோ, 'ஐயா, நானும் உங்களைப் போல் எப்போதும் நான் வேலை செய்யும் இடத்திலு ள்ள என்னோட அலுவலகத் தொலைபேசி மட்டுமே பயன்படுத்துகிறேன்' என்றார். அந்தக் குடும்ப உறுப் பினர்கள் செய்வதைத்தான் அவரும் செய்திருக்கிறார். 


சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்குப் புரிவதே இல்லை, வேறொருவர் நமக்கு அதை செய்யும் வரை...  அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...